விழித்ததும் வழக்கம் போல்
தேடினேன் உன்னை..
வெறுமையை உணர்ந்து
வேதனை அடைந்தேன்..
குளிக்கையிலும் உனைத்
தொட முடியாமல்
தேடித்தேடி வெதும்பியது
வெள்ளந்தி மனது.
வாகனத்தில் செல்கையில்
வலக்கண்ணாடியில் பார்க்கையில்
வெற்றிடத்தை பார்த்து
வாடியது எந்தனுள்ளம்..
நிதர்சனம் புரிகிறது- இன்று
நீ இல்லை என்னோடு
நிலைக் கண்ணாடியிலும்
அழகாய்த் தெரிவது என் மொட்டை மட்டுமே..
ம்.... சூபர்... நான் கூட காதலியோன்னு நினைச்சேன்.... உங்களுக்கு கவிதை கூட எழுத வருமா?
ReplyDeleteசீப்பான வரிகள் இல்லை.. இவை !
ReplyDeleteநன்றி ரிஷபன் ஸார்..
Deleteநன்றி நண்பா.. உங்களுக்கு ஆமான்னு சொன்னா நல்லா கவிதை எழுத தெரிஞ்சவங்க எல்லாம் அடிக்க வந்துடுவாங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அடி வாங்குவதற்கு அல்ல சகோ
Deleteஇது சத்தியமா கவிதைக்குத் தான் :)))))
அருமை... பாராட்டுக்கள்...
ReplyDeleteதங்களிடம் பேசியது மகிழ்ச்சி... விரைவில் சிந்திப்போம்... ஆமாம் என் தளத்திற்கு வருவதில்லையே ஏன்...?
கண்டிப்பா தனபாலன், விரைவில் சந்திப்போம்.. கொஞ்ச நாள் இணையத்தின் பக்கமே வரலே.. அதான்.. இனி தவறாம வர்றேன்..
Deleteஹஹஹ அழகாய் கூந்தலை சீவி விட்ட வரிகள்.
ReplyDeleteஅட, சூப்பரா இருக்கு உங்க பின்னூட்டம்..
Deleteஅட! எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! மொட்டை போட்டதுக்கு என்னோட வாழ்த்துக்கள்! ஹிஹி!
ReplyDeleteநன்றி நண்பா..
Deleteமொட்டைக்கு கவிதையா ?
ReplyDeleteஆமா ஸார்.. மொட்டைக்கான கவிதை தான்.. ஆனால் மொக்கை கவிதை அல்ல ன்னு நம்பறேன்..
Delete:-)
Deleteநீங்களும் கவிதையா...? இந்தப் பதிவுலகம் கூடிய சீக்கிரம் கவியுலகமாக மாறியுள்ளது... இது தொடர்ந்தாள் உங்களுக்கு ஒரு நபர் எழுதிய அற்புதமான கவிதைப் புத்தகம் எண்ணிக்கை ஆயிரமாக பார்ஸல் செய்யப்படும் :-)
ReplyDeleteஐயோ சீனு.. அப்படி ஏதும் பண்ணிடாதே.. நான் இனிமே கவிதை எழுத மாட்டேன்.. ;)
Deleteபயப்படாத ஆனந்து... அந்த நபரே அலறி ஓடற அளவுக்கு ஒரு கவிதைத் தொகுப்பை நாஆஆஆனே எழுதி சீக்கிரம் வெளியிட்டுடறேன்! ஹா... ஹா...!
Deleteகாதலும், காதலின் பின்னான வெறுமையும் படமாக விரிகிறது. வார்த்தைகளை மடக்கிப் போடுவதாக மட்டும் இல்லாமல் ஒரு உணர்வை படிப்பவன் மனதில் கடத்தினால் அதுதான் கவிதை! நல்ல கவிதை என்று சொல்லக் கூடிய வார்த்தைக்கு மிக நெருங்கியதாக இருக்கிறது இந்தக் கவிதை ஆனந்து! கவிதை முயற்சிகளைத் தொடர்ந்து (எங்களை வைத்து பரிசோதித்து... ஹி... ஹி...) வந்தால் நல்ல கவிதைகளும் நிறைய .உன்னிடமிருந்து வரக்கூடிய சாத்தியக் கூறுகள் தெரிகின்றன. வாழ்த்துக்கள்!
Deleteசார்.. நீங்களுமா?? வாங்க! டமில் வால்க!!
Deleteஆஹா குருநாதர் பாராட்டு கிடைச்சது என் பாக்கியம்.. பொறுப்பு இன்னும் கூடியிருக்கு..இன்னும் சிறப்பா கொடுக்க முயற்சிக்கிறேன்
Deleteஎன்னடா இன்னு "AAVEE THE BOSS" பதிவ காணமேனு பாத்த, வந்திர்சு...!!!
ReplyDeleteமக்கள் என்ன எதிர்பார்க்கறாங்களோ அதை கொடுக்கறது தான் நல்ல கலைஞனுக்கு அழகு.. :))
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி சார்.
Deleteஹா...ஹா...ஹா.... பொருத்தம்தான்!
ReplyDeleteரசித்தேன்.