புஷ்பேக் என்ற பெயரில் "புஷ் பேக்-புல் நாட்" (Push Back-Pull Not) இருக்கை ஒன்றை எனக்கு கொடுத்த அந்த மனிதருள் மாணிக்கத்தை வாழ்த்திவிட்டு கண்மூடினேன். சீனுவின் காதல் கடிதப் போட்டிக்கு யோசித்த போது கண்முன்னே நஸ்ரியா தோன்ற மனதிற்குள் ஒரு EFL பல்பு. கூடவே முந்தய நாள் முகநூலில் பார்த்த "Ganesh Bala likes Nazriya" என்ற ஸ்டேட்டஸ் மனதை உறுத்த நஸ்ரியாவை தலைவருக்கு 'விட்டுக்' கொடுத்துவிட்டு உறங்க முயன்றேன். முனிவர்கள் மலைகளிலும், காடுகளிலும் சென்று கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட "இடம் எதுவாயினும் கண் மூடியவுடன் நித்திரை தழுவும் யோகம்" ஒன்று என் பால்ய பருவத்திலிருந்தே எனக்கு வசப்பட்டிருந்ததால் உடனே உறங்கிப் போனேன்.
கண்விழித்தபோது செங்கல்பட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.. முன் சீட்டில் அந்த உராங் உட்டானுக்கு பக்கத்தில் மற்றொரு பெண் உறங்கிக் கொண்டிருந்தாள்.. துப்பட்டா கொண்டு தன் தலையை முழுவதுமாய் போர்த்தியிருந்த போதும் அந்த பொலிவான முகம் தெளிவாக தெரிந்தது. ரம்யமான அந்த முகத்தை ரசித்துக் கொண்டிருக்கும் போது செல்பேசி அழைத்தது. அட, நம்ம தலைவர்.. "என்ன சார் நீங்க இந்நேரத்துக்கே எழுந்துட்டீங்களா?" "ஆமாப்பா, யூசுவல் டைம் தான்.. அப்புறம் நீ கோயம்பேடு போக வேணாம்.. தாம்பரத்தில் எறங்கி ட்ரெயின் புடிச்சு மாம்பலம் வந்துடு.. நான் பிக் பண்ணிக்கிறேன்" என்றார்.. "சார் உங்களுக்கு எதுக்கு சிரமம், நான் கோயம்பேடு வந்து வந்துடறேனே" என்றேன் அவளை உடனே பிரிய மனமின்றி.. "இல்ல ஆனந்து, இதுதான் பக்கம்" என்று சொல்லி எல்லா தொடர்பையும் கட் பண்ணிட்டார்.
அவர் கூறியபடி மாம்பலம் வந்தடைந்த போது ரயில் நிலையத்துக்கே வந்திருந்தார் தலைவர். கோவையில் ஜீன்ஸ் டீ-ஷர்ட்டில் "காதல் பரிசு" கமல்ஹாசன் போல இருந்தவர், அன்று "மகராசன்" கமல் கெட்டப்பில் வித்தியாசமாக வந்திருந்தார். அவருடைய வண்டியில் சிறிது தூரம் பயணித்து வீட்டை அடைந்தோம். அங்கே குளித்து ரெடியாகிவிட்டு பாலகணேஷ் சாரின் அம்மா அன்புடன் செய்து கொடுத்த தோசையை உண்டுவிட்டு பதிவர் சந்திப்புக்கு தயாரானோம்.
பாலகணேஷ் சார், சேட்டைக்காரன் அவர்களை அழைத்து வர செல்ல, கவிஞர் மதுமதியும் வேறொரு வேலையாய் வெளியே சென்றுவிட புலவர் ஐயா நடுநிலை காக்க, பெண் கவிஞர்களின் கேள்வி அம்புகளால் தாக்கப்பட்டு நிராயுதபாணியாய் வீழ்ந்த பீஷ்மரின் நிலையில் அமர்ந்திருந்தார் கவியாழி ஐயா. நான் அவருக்கு உதவ நினைத்த போதும் மெஜாரிட்டி குறைவு என்பதால் அமைதி காத்தேன். அலுவல் காரணமாய் "பதிவுலகின் புதிய காதல் மன்னன்" சீனு, ரூபக் மற்றும் ஸ்கூல் பையன் "சரவணர் " ஆபிசுக்கு வர்ற மாதிரியே லேட்டா வந்துட்டு சீக்கிரம் கிளம்பீட்டாங்க.. முதல் சந்திப்பு என்பதாலோ, இல்லை என்னுடைய புதிய டெர்ரர் லுக்கைப் பார்த்தோ எல்லோரையும் வயது பேதமின்றி கலாய்த்த சீனு என்னை மட்டும் கலாய்க்காமல் விட்டது ஆச்சர்யம்.
"மது" (கவிஞர் மதுமதி) இல்லாத சபை கொஞ்சம் களையிழந்திருந்த போது பாலகணேஷ் சார் சேட்டைக்காரன் சாருடன் வந்து சேர இடமே கலாகலா சாரி கலகல..ஸ்கூல்பையனை பார்ட்னர்ஷிப் போட்டு ஒட்டிய வைபவங்களும், தன்னை சீண்டியவர்களை சீனு திடங்கொண்டு போராடியதும் அரங்கேறின. எம்ஜியாரின் நவரச நடிப்பை பற்றி ஆரம்பித்து பல்வேறு உலக சினிமாவின் அபத்தங்களையும் விவாத்துக் கொண்டிருக்கும் போது ஒரு செல்பேசி அழைப்பு வர,சுந்தரத் தெலுங்கினில் தமன்னாவின் குரலில் யாரோ மாட்லாட பேச்சுகள் சட்டென நின்றது.
தொடரும்..
மொத தடவயா பாக்கறதாலயும் உன் மொட்டைத்தலை டெரர் லுக்கயும் பாத்து சீனுப்பயல் உன்ன கண்டுக்கல. அடுத்த ட்ரிப் வருகையில இருக்குலேய் உனக்கு.
ReplyDeleteசீனு நல்ல புள்ள சார்.. ( தம்பி சீனு, நம்ப டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்)
Deleteபொலிவான ரம்யமான முகம்... பாவி... சொல்லவே இல்ல... நச்ரியாவை எனக்குப் பிடிச்சிருக்குன்னு விட்டுக்கொடுத்த வள்ளலே வாழ்க.
ReplyDeleteஉங்களுக்கில்லாததா பாஸ்!!
Delete//முனிவர்கள் மலைகளிலும், காடுகளிலும் சென்று கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட "இடம் எதுவாயினும் கண் மூடியவுடன் நித்திரை தழுவும் யோகம்" ஒன்று என் பால்ய பருவத்திலிருந்தே எனக்கு வசப்பட்டிருந்ததால் உடனே உறங்கிப் போனேன்.//
ReplyDeleteஇதத்தான் எழுத்து நடையில வித்தியாசம்னு சொன்னேன்...
//பெண் கவிஞர்களின் கேள்வி அம்புகளால் தாக்கப்பட்டு நிராயுதபாணியாய் வீழ்ந்த பீஷ்மரின் நிலையில் அமர்ந்திருந்தார் கவியாழி ஐயா//
அடடா... இதைக் காணும் பாக்கியம் கிடைக்கலையே...
தொடருங்கள்...
"சரவணர் " அன்னிக்கு எனக்கு கிடைச்ச தொப்பிய திரும்ப வாங்கிகோங்க மிஸ்டர் "சரவணர் " :-)
Delete//டெர்ரர் லுக்கைப்// தம்பி நீங்க எந்த ஸ்கூல் ல படிக்றீங்க, எது ரெண்டாங் கிளாசா, ஒழுங்கா படிக்கணும், இல்லாட்டா மிஸ் கிட்ட சொல்லி குடுத்துருவேன்
Deleteசுவையா எழுதறீங்க! அசத்துங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பா..
Deleteஎன்னவொரு மகிழ்ச்சி... எழுத்து நடை சூப்பர்...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி DD..
Deleteகலகல பதிவர் சந்திப்பு
ReplyDeleteவைபவத்திற்கு வாழ்த்துகள்..!
வாழ்த்துகளுக்கு நன்றிங்க..
Deleteஎங்கள் அண்ணன் இதய தெய்வம், மூளை சாமி, நுரையீரல் கடவுள், கல்லீரல் பிதா அவர்களை கிண்டல் செய்ய என்றுமே என் நா எழாது என்பதை மேன்மை பொருந்திய எங்கள் அண்ணன் இதய தெய்வம், மூளை சாமி, நுரையீரல் கடவுள், கல்லீரல் பிதா மா மனித ஆவி அவர்களிடம் சொல்லிக் 'கொல்ல' கடமைபட்டுள்ளேன்.
ReplyDeleteஊர்ல ஆத்தா அடிச்சி பொளச்சனவன் உண்டு ஆனா ஆவி அடிச்சி பொளச்சனவன் கிடையவே கிடையாது என்பதால் நாங்கள், அநாவசியமாக யாரையும் கிண்டல் செய்து எவ்வித வம்புக்கும் செல்வதில்லை என்பதை மீண்டும் மீண்டும் ஒருமுறை எங்கள் அண்ணன் இதய தெய்வம்...................................மனித ஆவி அவர்களிடம் சொல்லிக் 'கொல்ல' கடமைபட்டுள்ளேன்.
ஆகா, தம்பியுடையான் படைக்கு அஞ்சான்..! என்னாமா பீல்(peel) பண்ணிருக்கான் பயபுள்ள..
Deleteகவியாழி அவர்கள் ஒரு கவிபீடியா அதனால் அவர்கள் இருக்கும் இடத்தில அணைத்தும் அலசப்பட வேண்டும் என்பது எழுதபடாத 'விதி'.... எங்கள் விக்கிபீடியா கவியாழி வாழ்க வாழ்க
ReplyDeleteஇந்த பதிவுல வெறும் அறிமுகம் தான்.. அடுத்த எபிசோடு தான் அவருடைய பெருமை பேசும்..
Deleteஏனோ தெரியல, இந்த பதிவுக்கு அவருடைய கமென்ட் மட்டும் காணோம்..
//சூடான விவாதம்// கொஞ்சம் லேட்டா வந்தது தப்பா , எனக்கு காபி கொடுக்கவே இல்ல
ReplyDeleteஆப்பீஸ் ஞாபகத்துலயே இருக்கப் படாது.. மீட்டிங்குக்கு இடையில காபி டீ, குடிச்சுட்டு தூங்கற வேலை இங்க சரிப்படாது தம்பி..
Delete//நிராயுதபாணியாய் வீழ்ந்த பீஷ்மரின் நிலையில் அமர்ந்திருந்தார் கவியாழி ஐயா. // இது அவர்க்கு தெரியுமா.. பீஷ்மர்க்கு..பீஷ்மர்க்கு ..
ReplyDeleteமுள் படுக்கையில் வீழ்ந்த போதும், சந்தக் கவி பாடினாரே எங்கள் பதிவுலக பீஷ்மர், அவரையா கேக்குறீங்க??
Delete//டெர்ரர் லுக்கைப்// தம்பி நீங்க எந்த ஸ்கூல் ல படிக்றீங்க, எது ரெண்டாங் கிளாசா, ஒழுங்கா படிக்கணும், இல்லாட்டா மிஸ் கிட்ட சொல்லி குடுத்துருவேன்
ReplyDeleteமிஸ் அழகா இருப்பாங்களா?
Delete//தன்னை சீண்டியவர்களை சீனு திடங்கொண்டு போராடியதும் // காலங்காலமா நம்மள காப்பாத்திக்கவே உசுரு போய் உசுரு வருது .. :-)
ReplyDeleteநம்ப பேஸ் வேல்யு அப்படி.. ஹிஹி..
Deleteஐ..மீன் தொல்லைய தோள்ள துண்டா போட்டுட்டு வீறுகொண்டு
Deleteநடக்கும் உனக்கு இதெல்லாம் ஜுஜுபி.. ;-)
சுவாரசியமாக எழுதி உள்ளீர்... என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு அமைதி லுக் தான்... ஹா ஹா
ReplyDeleteநன்றி ரூபக்.. லுக் காமெடியா இல்லாம இருந்தா சரி..:-)
Deleteபதிவர் சந்திப்பு நகைச்சுவைகலந்து சுவாரசியமாக செல்கிறது, அடுத்து என்ன ? எனும் ஆவலுடன்.... காத்திருக்கிறோம்.
ReplyDeleteநன்றி சார். விரைவில் அடுத்த பதிவு போட்டுவிடுகிறேன்..
Deleteமுகநூலில் பார்த்த "Ganesh Bala likes Nazriya" என்ற ஸ்டேட்டஸ்
ReplyDelete>>
இது வேறயா?! நேத்து ரம்பா, இன்னிக்கு ந்ஸ்ரியாவா?! என் அண்ணனை எம்புட்டு அருமை பெருமையா பார்த்துக்கிட்டேன். இந்த சீனு, ஸ்கூல் பையன், ஆவி போன்ற சிறு வயசு பிள்ளைங்க கூட சேர்ந்து கெட்டு போய்ட்டாப்பல.. நான் என்ன செய்வேன் எங்க போய் மந்திரிச்சு தாயத்து கட்டுவேன் என் அண்ணாவுக்கு..,
அய்யோ ராஜி மேடம்.. அவர் தான் எங்களுக்கு குருநாதர்.. நாங்க அவர் சிஷ்யப் பிள்ளைங்க மட்டுமே.. ;-)
Deleteஅடப்பாஆஆவி,,. இப்புடியா மானத்த வாங்குறது. தங்கச்சி பூரிக்கட்டய எடுக்கறதுக்குள்ள மீ எச்கேப்.
Delete