மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் அட்டகாசமான நடிப்பில் வந்திருக்கும் ஒரு முழுமையான என்டர்டெயினர் தான் இந்த பலுப்பு. 'தெனாவெட்டு' என்ற பொருள் தரும் இந்த படத்தில் ரவிதேஜாவுடன் ஸ்ருதி ஹாசன், அஞ்சலி, பிரம்மானந்தம் மற்றும் பிரகாஷ்ராஜ் இனைந்து நடித்துள்ளனர். ஆக்க்ஷன், காதல், காமெடி என எல்லா அம்சங்களும் நிறைந்த இந்த படம் எல்லாரும் பார்க்கக் கூடிய படமென்றாலும் ஒரு சில வன்முறைக் காட்சிகளுக்காய் இது பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும்.
தனக்கு நிச்சயக்கப் பட்ட திருமணத்தை நிறுத்த வேண்டி (?!!) தன் மாமாவுடன் (பிரம்மானந்தம்) சேர்ந்து கொண்டு ஸ்ருதி பார்க்கும் பலரையும் விரும்புவதாக விளையாட்டுக்கு சொல்லி ஏமாற்ற, அதில் ரவியின் நண்பன் ஒருவனும் மாட்டிக்கொள்ள ஸ்ருதிக்கு பாடம் புகட்ட வேண்டி அவரை காதலிப்பது போல் நடிக்கிறார் ரவி. ஆனால் ஒரு கட்டத்தில் ஸ்ருதி உண்மையிலேயே ரவியை விரும்ப, அதை மறுத்து அவருக்கு அட்வைஸ் செய்து செல்கிறார். இதற்கிடையில் தன் மகனுக்கு ஸ்ருதியை பெண் பார்க்க பிரகாஷ் ராஜ் செல்ல இதனால் ஸ்ருதியின் திருமணம் நின்று போகிறது.
ரவி ஸ்ருதியின் காதலை ஏற்றுக் கொண்டாரா? திருமணம் நின்றுபோன மாப்பிள்ளை எப்படி பழி தீர்த்தான் என்பதே படத்தின் திருப்பம்.
ரவிதேஜா வழக்கம்போல் அசத்தல். அதிலும் இரண்டாம் பாதியில் ரவுடியாக வரும்போது செம்ம மாஸ்.. தமிழில் நமக்கு இது போன்ற ஒரு ஹீரோ இல்லையே என்ற வருத்தம் தோன்றியது. ஸ்ருதி முந்தைய படங்களுக்கு நல்ல தேர்ச்சி. பாவனைகளில், நடனங்களில் நம்மை ஈர்க்கிறார். அஞ்சலி சிறிய வேடமேன்றாலும் நிறைவாய் வந்து போகிறார்.
தன் மகனுக்கு பெண் பார்க்க வேண்டி பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பெண்ணிடம் பேஸ்புக் ஐடி கேட்பதில் ஆரம்பித்து, நாசரின் வீட்டில் படு பாந்தமாய் பெண் கேட்பதும் பிரகாஷ்ராஜ் அருமை. பிரம்மானந்தம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். அதிலும் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் செய்யும் சேட்டைகள் அட்டகாசம். தமனின் இசையில் பாடல்கள் ஓகே. மொத்தத்தில் பலுப்பு - தாருமாறு!
75 / 100
விரைவில் தமிழிலும் வந்து விடும் என்று நினைக்கிறேன்...
ReplyDeleteதமிழ்ல வர்றது கொஞ்சம் கஷ்டம்.. முன்னே இது போல ஒரு படம் வந்துச்சு (குருவி) சரியா போகலே..
Delete100க்கு 75 ஆ? அப்ப ஆவியோட ஸ்ட்ராங் ரெகமன்டேஷனோட இதப் பாக்கப் போறேன் நிச்சயம்! ஆந்திராவின் காரம் ஏற்றும் மசாலா நெடியையும் தாண்டி மாஸ் படம்னு உங்களை இவ்வளவு ரசிக்க வெச்சிருக்கே!
ReplyDeleteஒரு முறை ஜாலியா பார்த்துட்டு வரலாம் பாஸ்! ஆந்திராவின் காரம், உப்பு, புளி எல்லாம் சரிவிகிதத்துல இருக்கு இந்தப் படத்துல.
Deleteஅதிலும் climax யில் வரும் டேன்ஸ் சூப்பர்.. Pakka entertainer..
ReplyDeleteதெலுங்கு படமெல்லாம் பார்ப்பீங்களா? காரம் ஜாஸ்தியா இருக்குமே!
ReplyDelete