Friday, August 23, 2013

ஏதோ மோகம்.. ஏதோ தாகம்..



                                  டைட்டில பார்த்து பயந்துடாதீங்க.. பாடல் எழுத வேண்டும் என்பது என்  தீராத மோகம், தணியாத தாகம். இதுவரை சுமார் பனிரெண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். ( என் பாடல்களுக்கு பெரும்பாலும் நானே மெட்டமைப்பது வழக்கம். சில நேரங்களில் இளையராஜாவையும் துணைக்கு அழைத்துக் கொள்வேன்). என் பாடல்களுக்கு என் தாயார், தமக்கை மற்றும் சில நண்பர்களிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது எனினும் இன்று இணையத்தில் என் மதிப்பிற்கும் பாசத்துக்கும் உரிய பதிவுலகின் "அண்ணா " பாலகணேஷ் அவர்கள் நான் பதிவர் திருவிழாவுக்காக எழுதிய பாடலை அவருடைய மின்னல் வரிகள் வலையில் பிரசுரிக்க எனக்கோ ஒரே பாராட்டு மழை. இதுவரை நான் பழகியிராத பலரும் பாராட்டியது மகிழ்வைத் தந்தது. என் எழுத்துலக வாத்தியாருக்கு மீண்டும் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்..

பாடலை கேட்க:

                                     மேலும் இந்த பாடலை கேட்டுவிட்டு குவைத்திலிருந்து மஞ்சுபாஷினி அக்கா போன் செய்து பாராட்டியது என்னை புளங்காகிதமடைய செய்தது. ஒரு சில திருத்தங்களை கூறி அந்தப் பாடலை மேருகேற்றியதுடன் அதைப் பாடியும் காட்ட மனம் சந்தோஷத்தில் கூத்தாடியது. இதற்கு ஒரு படி மேலே போய் நம்ம சுப்பு தாத்தா அவர்கள் அவருடைய தேன் சிந்தும் குரலில் கர்நாடக சங்கீத பாணியில் அதே பாடலை பாடியதுடன் எனக்கு வாழ்த்தும் தெரிவித்தார். சந்தோஷத்தில் திளைத்தேன், அகமகிழ்ந்தேன், பெருமிதம் கொண்டேன். 

சுப்பு தாத்தா பாடிய பாட்டு 

                                         என் பாடலை ரசித்த எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி, எல்லோரையும் பதிவர் திருவிழாவில் சந்திக்க பேராவலுடன் காத்திருக்கிறேன். 




14 comments:

  1. முழுப் பாடலினையும் கேட்டேன் நண்பரே. அருமை. பாராட்டத் தகுந்த முன் முயற்சி. வாழ்த்துக்கள்.
    ஆங்கிலம் கலவா தமிழாழே கவிதை படைப்போம் என்றீரே அவ்வரிகளுக்குத் தனியே என் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. பாடல் உங்களுக்கு பிடித்தது மகிழ்ச்சி. ரசித்து படித்த உங்களுக்கு நன்றி.

      Delete
  2. மேலும் அசத்துங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி DD. நீங்க எதோ Skit பண்ணப் போறதா கேள்விப்பட்டேன்.

      Delete
  3. ஆவியின் பாடலை மீண்டும் மேடையில் கேட்க ஆவலுடன்... கலக்குங்க ஆவி ...

    ReplyDelete
  4. முகம் அறியா தமிழர் பலர்
    ஜகம் புகழ ஓர் அவை அமைத்து
    அக மகிழ அளவாவுகிறார்.
    ஆனந்தத்திற்கு ஓர் எல்லை உண்டோ ??

    பாக்கள் பல நூல்கள் அரங்கேற்ற
    பாமரன் அவர்கள் உரையாற்ற
    பால கணேஷ் பக்குவமாய் விருந்தளிக்க
    பாங்காய் மதுமதி ஒரு முகமன் கூற

    புலவர் பெருமான் இராமானுசம் மேடை ஏறி
    புன்னகைத்து பண் அமைத்து பாடல் சொல்ல
    விண் அதிரும் வேளையிலும் தென்றல் வீச
    வீசும் தென்றல் சசிகலா அவர்கள் கவி பாட

    திடீர் என திண்டுக்கல் நடுவே தோன்றி
    திருக்குறளில் தித்திக்கும் குரல் ஒலிக்க

    ஆவி பறக்க ஒரு காபி ஆவி தர
    நா இனிக்க நல்சுவை விருந்து வர

    கனவா நினைவா இது என நான் வியந்து நிற்க
    என்ன தவம் செய்தனை ?
    சுப்பு தாத்தா வே ? இதில் பங்கு கொள்ள நீவிர்
    என்ன தவம் செய்தனை ?

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. உங்க கவிதையை முக நூலில் பகிர்கிறேன்..

      Delete
  5. ஆஹா, மாபெரும் கவிஞர்கள் பற்றிய கவிதையில் என் பெயரையும் இணைத்து கவிதை புனைந்த சுப்பு தாத்தா, உம்மை வணங்குகிறேன். அசத்தல் கவிதை. அருமை அருமை..

    ReplyDelete
  6. பாடல் முழுக்க கேட்டேன். நல்லா வந்திருக்கு, குரல் வளாமும் சூப்பர். அப்பாடா! தைரியமா வரலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா.. வாங்க வாங்க..

      Delete
  7. இப்பதாங்க ஆவி பாடி முதல் முறையா கேக்குறேன் ...! சூப்பரு ...! சூப்பர் சிங்கர் சீனியருக்கு அப்ளிக்கேசன் ரெடி பண்ணிடலாம் ..!

    ReplyDelete
  8. அட அட அட அருமை அருமை..

    ஆவியின் பெருமை எட்டுத்திக்கும் ஆவி பறவிட
    கொட்டு முரசே...
    எங்கள் ஆவியின்
    பாடல் அருமை என்று கொட்டு முரசே

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails