Monday, August 26, 2013

பிடிச்சிருக்கு.. இத பிடிச்சிருக்கு..



                               தங்கமீன்கள்  "ஆனந்த யாழை" பாடலுக்குப் பிறகு புதிய பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த போது ராஜா ராணி திரைப்படத்தில் வரும் "Hey Baby" பாடலைக் கேட்ட போது கேட்டவுடன் பிடித்தது. ஜீ.வி பிரகாஷ் பாடி இசையமைத்த இந்த பாடல் வெஸ்டர்னில்  ஆரம்பித்து கானா பாலாவின் குரலில் போக்கில்(Folk ) முடிகிறது. ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தது. அதே படத்தில் இமையே பாடல் ஜி.வி மற்றும் "மக்காயாலா" புகழ் சக்திஸ்ரீ கோபாலனும் பாடியுள்ளனர்.  மனதை மயக்கும் பாடலிது. துள்ளல் இசையுடன் மற்றொரு பாடல் விஜயபிரகாஷ், ஷாஷா பாடிய "ஓடே ஓடே" பாடல்.  ஆர்யா, நயன்தாரா மற்றும் ஜெய் நடித்திருக்கும் இந்தப் படத்தின் மற்றொரு ப்ளஸ் நேரம் படத்திற்கு பிறகு தமிழில் நஸ்ரியா நடிக்கும் படமிது..




                               யுவன் இசையமைக்கும் நூறாவது படம் பிரியாணி. எச்சில் ஊற வைக்கும் டைட்டில், ஆனால் டைட்டில் சாங் படத்தோடு பார்க்கும்போது தான் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. ஜீவி, இமான், தமன், விஜய் ஆண்டனி இணைந்து பாடியிருக்கும் எதிர்த்து நில் ஊக்கம் தரும் பாடல். கார்த்தி தன் சொந்த குரலில் பாடிய "மிஸ்ஸிஸிப்பி" கட்டிப்புடி கட்டிபுடிடா ரக பாடல் என்றாலும் கார்த்தி, ப்ரியா மற்றும் பிரேம்ஜியின் குரலில் கேட்க நன்றாக உள்ளது. "நாநனனனா" பாடல் மூன்று வெர்ஷனில் உள்ளது.  யுவனின் குரல் இந்த பாடலுக்கு வலு சேர்க்கிறது.


                             
                               ஆர்யா, உலக சினிமா ரசிகனின் பேவரைட் அனுஷ்கா நடித்து செல்வராகவன் இயக்கத்தில் வரும் படம் இரண்டாம் உலகம். SPB யின் குரலில் "என் காதல் தீ" ஒரு இனிய மெலடி.. ஆனாலும் பழைய SPB யின் குரல் மிஸ்ஸிங். கார்த்திக்கின் இனிய குரலில் "கனிமொழியே" மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். "மன்னவனே என் மன்னவனே" ஹாரிஸ் ஜெயராஜின் இசைத் தாலாட்டு. "பாடகர்" தனுஷின் குரலில் பனங்கல்லா பாடல் சுமார் ராகம். நீண்ட நாட்களுக்குப் பின் ஹரிஹரனின் குரலில் "ராக்கோழி" அருமை.  "விண்ணைத்தாண்டி" பாடல் ஆதவன் படத்தின் எதோ ஒரு பாடலை நினைவுபடுத்துகிறது.

ராஜா ராணி ட்ரைலர் காண்க:



                              

5 comments:

  1. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... ட்ரைலருக்கு நன்றி...

    ReplyDelete
  2. இந்தப் பதிவும் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் படித்தேன்...எனக்கு மட்டும்தான் இப்படியா...மிகச்சிறிய எழுத்துக்கள்....

    ReplyDelete
  3. ஒரு பாடலையும் இதுவரை கேட்கவில்லை... இனி தான் கேட்கணும்

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails