Wednesday, August 14, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! ( மனசுக்குள் மத்தாப்பு )-10


                       அந்தக் கவரைப் பார்த்ததும் அதிர்ச்சி. பிரித்துக்  கூட பார்க்காமல் அதை உள்ளே வைத்துவிட்டு கண்களை மூடி அமர்ந்தேன். ஹிருதயத்தின் ஓரத்தில் ஒரு வலி. பாடத்தில் மனம் லயிக்கவில்லை.  ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவள் உரிமை என்ற போதும், நிதர்சனத்தை புரிந்து கொள்ள மனம் ஒப்பவில்லை.  என்ன காரணத்துக்காக என்னை அவளுக்கு பிடிக்காமல் போனது? சரி காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை, நட்பாய் தொடரலாமே? அவ்வாறு செய்தால் நட்பு காதல் இரண்டையும் களங்கப் படுத்துவதாய் ஆகிவிடுமோ?  எனக்குள் தோன்றிய ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடையறியாமல் திணறிய போது கடைசி பாடவேளையும் முடிந்து மாணவர்கள் வெளியே சென்று கொண்டிருந்தார்கள்.                        பாஸ்கர் சிறிது நேரம் என்னை அழைத்துப் பார்த்துவிட்டு பின் அவனும் நகர்ந்தான். துக்கம் தொண்டையை அடைக்க அடுத்து என்ன செய்வது என்ற ஒரு பிடியும் கிட்டாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தேன்.  தென்றல் மட்டுமே துணைக்கிருக்க டெஸ்க்கில் தலை வைத்தபடி வெளியே அசைந்து கொண்டிருந்த மரத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். காதுக்குள் "ஆனந்த்" என்று ரமா அழைப்பது போன்ற உணர்வு. கொஞ்ச நேரம் அவளைப் பற்றிய நினைவுகளை மறக்க நினைத்து தியானம் செய்ய நினைத்தேன்.  மனம் ஒரு மங்கியாச்சே., மீண்டும் அவள் அழைப்பது போன்ற உணர்வு. புத்தகப் பையையும் அந்தக் கவரையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முற்பட்ட போதுதான் கவனித்தேன். முன் பெஞ்சில் என்னையே பார்த்தபடி  ரமா அமர்ந்திருந்தாள்.

                          அவளைப் பார்த்ததும் உள்ளுக்குள் பொங்கிய ஆவலை அடக்கிக் கொண்டு அங்கிருந்து நகர முயல, "ஹலோ, நான் உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்." என்றாள். நான் ஒன்றும் பேசாமல் அங்கேயே நிற்க, அவள் என் முன் வந்து நின்று "பாயாசம் எப்படி இருந்தது?" எனவும் நான் கேள்விக்குறி, ஆச்சர்யக் குறி இரண்டையும் முகத்தில் வைத்தபடி "என்ன பாயாசம்?" என்றேன். " இன்னைக்கு நானே செய்து கொண்டு வந்த பாயாசத்த கொடுக்கலாம்னு நினைச்சப்ப தான் ஆப்டர்நூன் நீங்க ஏதோ தனியா பேசணும்னு சொல்லி சங்கீதாவை வெளியே அனுப்பீட்டீங்க. என் லஞ்ச் பேக்கும் அவகிட்ட இருந்துச்சு. நான் போயி அவகிட்ட வாங்கிட்டு வர்றதுக்குள்ள ஆள் மிஸ்ஸிங். அதான் பாஸ்கர் கிட்ட கொடுத்தேன். அவர் கொடுக்கலையா?" என்றபடி என் கையிலிருந்த கவரை வாங்கி அதிலிருந்து ஒரு டிபன் பாக்சை திறந்து ஒரு ஸ்பூனையும் நீட்டினாள்.

                          "அதிருக்கட்டும், நான் உன்கிட்ட சொன்ன விஷயத்துக்கு பதில் என்ன?" என்றேன். ஓரிரு நிமிட மௌனத்துக்குப் பின் "நீங்க சாப்பிடுங்க.. அப்பத்தான் சொல்லுவேன்." என்றவள் கூற இரண்டு ஸ்பூன் பாயாசத்தை குடித்துவிட்டு "நல்லா இருக்கு. இப்ப சொல்லு." என்றவாறு அவள் முகத்தையே நோக்கினேன். எப்போதும் போல் மெல்லிய புன்னகையுடன் "அன்னைக்கு நீங்க என்னை நாமக்கல் கூட்டிப் போனீங்களே, ஞாபகம் இருக்கா.. அன்னைக்கு என்னன்னு தெரியல, மனசு பூரா அவ்வளவு சந்தோசம். அதுக்கப்புறம் தினமும் ஈவனிங் வீட்டுக்கு போனா உங்களைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருப்பேன். லாஸ்ட் சண்டே சங்கீதா வீட்டுக்கு வந்தபோதும் இப்படியே பேசிட்டு இருக்க அவ என்கிட்ட நீ ஆனந்தை லவ் பண்றியான்னு கேட்டா. அப்போ எனக்கு என்ன பதில் சொல்லணும்னு தெரியல. ஆனா இன்னைக்கு நீங்க சொன்னப்போ ரொம்ப சந்தோசமா இருந்தது. அதோட வெட்கமும்.. அதான் அங்கிருந்து போயிட்டேன்" இதைச் சொல்லும்போது கருப்பான அவள் கன்னங்கள் மெலிதாய் சிவந்திருந்தது. 
                             அவள் சொல்ல சொல்ல என் மனதுக்குள் கலர் கலராய் மத்தாப்புகள் வெடித்தன. "அப்ப உனக்கும் என்னை பிடிச்சிருக்கா?" ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அவளிடம் கேட்க "ம்ம்.. பிடிச்சிருக்கு..ஆனா.." என்று அழகாய் ஓடத் துவங்கிய ஆற்றின் குறுக்கே ஒரு அணையை போட்டாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவள் இதழ்களையே நோக்கியபடி காத்திருந்தேன்.


தொடரும்..
17 comments:

 1. Replies
  1. ஆமா கார்த்திக். 90% சொந்த கதை. 10% கற்பனை..

   Delete
 2. அடேய் மச்சி...கை சரியாயிடுச்சி போல...

  ம்ம்...அப்புறம்...

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இல்ல மாப்ளே.. கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் எழுதறேன்.. போர் அடிக்குதில்ல..

   Delete
  2. உடம்பை பார்த்துக்கோங்க.

   Delete
  3. கண்டிப்பா அக்கா..

   Delete
 3. கண் முன் காட்சிகளை பரப்பி செல்லும் காதல் கதை படிக்கும் போதே உணர முடிகிறது வாழ்த்துக்கள் .......கை சரியாகி பூரண குணமாகவும்

  ReplyDelete
 4. //இதைச் சொல்லும்போது கருப்பான அவள் கன்னங்கள் மெலிதாய் சிவந்திருந்தது. // கவித கவித

  நானும் காத்துள்ளேன்..

  யோவ் ஆவி சட்டுபுட்டுன்னு அடி வாங்கிட்டு அடுத்த பகுதிய எழுத ஆரம்பிங்க... :-))))))

  ReplyDelete
  Replies
  1. காதல்ங்கிறது கார்ன்(Corn) வேக வைக்கிற மாதிரி.. பொறுமையா காத்திருந்தா தான் நல்லதா கிடைக்கும். அதனால..

   Delete
  2. //காதல்ங்கிறது கார்ன்(Corn) வேக வைக்கிற மாதிரி.. பொறுமையா காத்திருந்தா தான் நல்லதா கிடைக்கும். அதனால..// அண்ணன் என்னமா தத்துவம் சொல்றாரு..

   சத்யம்ல பாப் கார்ன் விக்கரவங்க யாராச்சு உங்களுக்கு ப்ரன்ட்ஸா?

   Delete
  3. ருபக்- ஹஹஹா

   Delete
 5. விரைப்பாய் நிற்கும் சிறுவனும், நளினமாய் நிற்கும் சிறுமியும் அழகான ஓவியம்.

  ReplyDelete
  Replies
  1. அது சுட்டதுங்கோ..

   Delete
 6. சூப்பர்... இந்த பதிலநான் எதிர்பார்கல.. வைட்டிங் 4 ஆனா...!!

  ReplyDelete
 7. அருமையான கதையாக இருக்கிறதே..முதலிலிருந்து படிக்கிறேன்..வலைச்சரத்தில் பகிர்ந்த எழிலுக்கு நன்றி! http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_22.html
  உங்கள் கை சரியாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails