உணர்வுப் பூர்வமான படங்களை எடுப்பதில் மலையாள திரையுலகம் எப்போதும் முன்னிலை வகிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்த வந்திருக்கும் படம்..
மகத்துவம் மிகுந்த மருத்துவ துறையின் முக்கியத்துவத்தை உணராத இரு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அவர்களில் ஒருவன் ஒரு மலைப்பிரதேசத்தில் உள்ள கிராமப்புற மருத்துவமனையில் பணிபுரியும்படி சந்தர்ப்பம் வருகிறது. அங்கே அவன் சந்திக்கும் ஒரு நேர்மையான மருத்துவர், அவருடைய வழிகாட்டுதலின் மூலம் பல பாடங்கள் படிக்கும் நாயகன். ஒரு சந்தர்ப்பத்தில் காவல் அதிகாரியுடன் ஏற்படும் சிறு உரசலினால் எப்படி அவன் வாழ்க்கையே தடம் மாறிப் போகிறது என்பது தான் கதை..
மலையாள பட உலகின் "யங் சூப்பர் ஸ்டார்" ப்ரித்விராஜ் நாயகனாக நடித்திருக்கும் படம். நடிப்பில் நன்றாக மெருகேரியிருப்பது நன்றாக தெரிகிறது.. காதல் காட்சிகளிலும், கலாபவன் மணியுடன் இவர் மோதும் உணர்வுப் பூர்வமான சண்டைக் காட்சிகளிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரதாப் போத்தன் ப்ரித்விக்கு வழிகாட்டும் குரு. தமிழ் படங்களில் இவரை சரியாக பயன்படுத்தவில்லையோ என்ற சந்தேகம் இந்தப் படம் பார்க்கும்போது வருகிறது..
நரேன், நல்ல நண்பனாக, தோள் கொடுக்கும் தோழனாக வருகிறார். மருத்துவ கல்லூரியில் இவரும் ப்ரித்வியும் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும்படி உள்ளது. சம்வ்ருதா நாயகி எனினும் இவருக்கு அதிகம் நடிக்க வாய்ப்பில்லை.. ஆயினும் வரும் ஒன்றிரண்டு காட்சிகளில் நிறைவாய் செய்திருக்கிறார். ரீமா கல்லிங்கல் மற்றும் ரம்யா நம்பீசன் வித்தியாசமான அதே சமயம் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
இயக்குனர் லால் ஜோஸின் திரைப்படங்கள் பொதுவாக உணர்ச்சிமயமாக இருக்கும். மேலும் வழக்கமான திரைப்படங்களிலிருந்து வேறுபட்டு நிற்கும். இந்தப் படமும் அதையே பறைசாற்றுகிறது. ஒளஸேபச்சன் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் சுமார் ரகம். நான் ரெண்டு முறை பார்த்தேன்.. இன்னும் போர் அடிக்கலே..
65 / 100

பார்க்க வேண்டும் போல் உள்ளது.. பதிவர் சந்திபிற்க்கு வரும் பொழுது பல நல்ல படங்களை பதிவு செய்து கொண்டு வரவும்... குறிப்பாக ஷெர்லாக் ஹோம்ஸ் சீரிஸ்
ReplyDeleteஷெர்லாக் ஹோம்ஸ் தொடர் என்னிடம் இல்லை. பிரெண்ட்ஸ் தொடர் பிடிக்குமா?
Delete// நான் ரெண்டு முறை பார்த்தேன்.. இன்னும் போர் அடிக்கலே..// இதுக்கு காரணம் ஹீரோயின் இல்லன்னு நினைக்கிறன் :-)))
ReplyDeleteசம்வ்ருதா வும் பிடிக்கும்.. ஆனா படம் நல்லா இருந்ததால தான் இரண்டாவது முறை பார்த்தேன்..
Deleteரைட்டு
ReplyDeleteஉங்க ரைட்டுக்கு அர்த்தம் புரிஞ்சிடிச்சு..
Delete
ReplyDeleteமனம் தளராது போராடும் ஆவிக்கு வாழ்த்துக்கள்
நன்றி..நன்றி..நன்றி..
Deleteதங்களின் விமர்சனமே படத்தைப் பார்க்கத்தூண்டுகிறது . நன்றி
ReplyDelete