தலைவா- இணையத்தில் பலராலும் பலவாறாக விமர்சிக்கப்பட்டுவிட்ட ஒரு படம். கொஞ்சம் லேட் ஆனாலும் என் பார்வையில் இந்த தலைவா எப்படி இருக்குன்னு மக்களுக்கு சொல்லனும்னு ஒரு அவா. அதான் எழுதீட்டேன். ( நீண்ட சிரமத்துடன் பார்த்த படம் இது. என்ன சிரமம்னு இன்னொரு பதிவுல சொல்றேன்)
ஆஸ்திரேலியாவில் நண்பர்களுடன் உல்லாசமாக ஆடல் பாடல் கேளிக்கைகளில் ஈடுபட்டு சந்தோஷமாக வாழும் இளைஞன் ஒருவன் வாழ்வில் வரும் ஒரு பெண், அவள் காதல், அதனால் ஏற்படும் காட்சி மாற்றங்களால் அவன் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள். தன் தந்தை ஒரு நிழலுலக "தாதா " என்பதையும் அவர் உயிருக்கு இருக்கும் ஆபத்தையும் அறிந்து பதறும் அவன் அடுத்து என்ன செய்கிறான் என்பதே கதை.
விஜய் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார், அதுவும் டிஸ்டிங்க்ஷனில். பாட்டு, டான்ஸ், ஆக்க்ஷன், காமெடி, சென்டிமென்ட் ரோமென்ஸ் என்று எல்லா ஏரியாவிலும் சிக்சர் அடிக்கிறார். அமலா பால் இன்னும் கொஞ்சம் வெளிப்படுத்தியிருக்கலாமென்று தோன்றுகிறது. (நடிப்பை சொன்னேங்க..) புன்னகை மன்னன் ஸ்டைலில் இருவரும் ஆடும் நடனம் அருமை. சத்தியராஜ் நிறைவான நடிப்பு. அமைதியாக வந்து மிரட்டுகிறார். வெண்ணிற ஆடையும், சிவப்பு சால்வையும் அவர் அழகுக்கு மெருகூட்டுகிறது. (கடைசி காட்சியில் விஜய் அதே டிரஸ் அணிந்து வரும் போது அவ்வளவு கம்பீரம் தோன்றவில்லை.)
ப்ரோ சாரி சந்தானம் இந்தப் படத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். ஆனாலும் படம் தொய்வடையும் போது அவர் காமெடி படத்தை நகர்த்துகிறது. குறிப்பாக "எங்க போக, இது ஒரு வழிப் பாதை. திரும்பிப் போறது உயிர் மட்டும்தான்" என்ற டயலாக்கை சீரியசாக சத்யராஜும், விஜயும் கூற அதே வசனத்தை சந்தானம் கலாய்ப்பது அருமை. ஜீவியின் இசையில் "யார் இந்த சாலையில்" பாடல் அருமை. மற்றவை சுமார் ரகம். பொன்வண்ணன், மனோபாலா, உதயா, சுரேஷ், வில்லர் பீமா என எல்லோரும் சிறப்பாய் நடித்தும் ஓரிரு விஷயத்தில் தலைவா சறுக்குகிறான்.
ஊரே மதிக்கும் தலைவன் பாங்கு அடித்துவிட்டு மட்டையாகி பொறுப்பில்லாமல் உறங்குவது. வில்லனின் பலத்தைக் காட்ட போதிய காட்சிகள் இல்லாதது. குத்து பட்ட பின்பும் முளைத்து வரும் பீனிக்ஸ் பறவை போல் விஜய் வருவது. பின்னணி இசை பிரம்மாண்டமாக இல்லாதது, முதல் பாதியில் விஜய்-அமலா காதலுக்கு (குறிப்பாக அந்த சாம் ஆண்டர்சன் காட்சி சுத்த போர்) அதிக காட்சிகள் வைத்ததற்கு பதிலாக சத்தியராஜின் கேரக்டர் வலுப்படும்படி ஓரிரு காட்சிகள் வைத்திருக்கலாம்.
இவற்றைத் தவிர்த்து பார்க்கும் போது இந்த தலைவா தலை நிமிர்ந்து நிற்கிறான்.
75 / 100
ஓரிரு காட்சிகள்... பல காட்சிகள் வைத்திருக்கலாம்...!
ReplyDeleteஉண்மைதான் DD..
ReplyDeleteஎனது நண்பர்களும் படம் நன்றாகத்தான் இருக்கிறதென்று சொன்னார்கள்...
ReplyDeleteமும்பையில் நடப்பதால் நாயகனையும், தந்தை கடமைகளை மகன் ஏற்று கொள்ளும் காட்சி தேவர் மகனை நினைவு படுத்துவதாகவும், என் நண்பர்களும் கூறினார்கள். நான் பார்த்தபோது அந்த படங்கள் கொஞ்சம் கூட நினைவுக்கு வரவே இல்லை. இரண்டாம் பாதியில் திரைக்கதை நன்றாக உள்ளது. முதல் பாதி கொஞ்சம் சலிப்படைய செய்யும் காதல் காட்சிகள் (?!!) நன்றி ஸ்.பை.
Deleteரைட்டு
ReplyDeleteஒக்கே..
Deleteமதிப்பெண் கொடுப்பதில் தாராள பிரபுவோ நீங்கள்....
ReplyDeleteம்ம்.. நான் வாத்தியாரா இருந்தப்போ என் ஸ்டுடண்ட்ஸ் யாரும் 80 மதிப்பெண்களுக்கு கீழே வாங்கியதில்லை.
Deleteஆனால் படங்களைப் பொறுத்தவரை ஐம்பது என்பது சுமாரான படம். 60-70 ஒருமுறை பார்க்கக் கூடிய படம். 70-80 ஒரு சில குறைகள் தவிர்த்தால் நல்ல படம். 80-90 நல்ல படம். தொண்ணூறுக்கு மேல் வாழ்வில் மிஸ் பண்ணக் கூடாத படம். :-)
ஆவி எப்போதும் நடுநிலையான விமர்சகர்..!! எதிர்பார்த்ததை விட நல்ல விமர்சனம்..
ReplyDeleteகண்டிப்பா, படத்துல மேற்கூறிய குறைகள் தவிர எனக்கு படம் பிடிச்சது.
Deleteஉண்மைதான்
ReplyDeleteநன்றிங்க
Delete‘தலைவாவை’ தியேட்டரில் பார்த்தீர்களா?
ReplyDeleteஉங்கள் சினிமா ஆர்வத்திற்கு...முன்னால் நானெல்லாம் தூசு.
"திருமதி தமிழ்" எல்லாம் மக்கள் தியேட்டரில் போய் பார்க்கிறாங்க.. இது அவ்வளவு மோசமில்லை சார். பிரம்மாக்களே குழந்தைகளை தரம் பிரிச்சு பார்க்க கூடாது சார்..
Delete