காலையில் எழுந்ததும் குழம்பியை குடித்தபடி அரண்மனை வாயிலில் நின்றிருந்தான் கோப்பெருஞ்சோழன்.. இதழில் குழம்பி இனித்த போதும் மனதில் நிலைத்த குழப்பத்தால் சற்றே பதற்றத்துடன் காணப்பட்டான்.
மெலிதாய் உரசிய தென்றல் காற்றும், புதிதாய்ப் பூத்திருந்த ரோஜா மொட்டுகளும் அவர் கவனத்தை ஈர்க்கவில்லை. அருகே தான் அந்தப்புரம். கன்னியர்களின் கொலுசொலியும், சிதறி விழும் சிரிப்பொலியும் அவருக்கு சலனத்தை கொடுக்கவில்லை.
அவர் கண்கள் அடிக்கடி மேசை மீது வைத்திருந்த ஒரு அழைப்பிதழையே பார்த்துக் கொண்டிருந்தது. மனம் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தது.."அவர் வருவாரா? ". மெதுவாய் நகர்ந்து மேசை மேல் கிடந்த அழைப்பிதழை மீண்டும் ஒருமுறை பார்த்தார். அழகே வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அழைப்பிதழின் வரிகள் அவர் கண்களில் மின்னல் வானில் விட்டு சென்ற ஓவியமாய் தோன்றியது.
அழைப்பிதழ்
உலகெங்கும் உள்ள கலை மேல் ஆர்வம் கொண்ட சான்றோர் பெருமக்கள் யாவரும் ஒன்று கூடும் ஒரு சந்திப்பாயிற்றே. பல்லவ தேசத்தில் உள்ள மதராசப் பட்டினத்தில் நடக்கிறது. எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. என் நண்பன் பிசிராந்தையாரும் அவ்விடம் வருவானோ? மனம் ஏங்கித் தவித்தது. எத்துணை நாட்கள், எத்துணை மாதங்கள், எத்துணை வருடங்களாய் அவன் எழுத்துக்கள் மட்டுமே என் பார்வைக்கு கிட்டியது. இந்த சந்திப்பிலாவது அவன் முகம் காணக் கிடைக்குமா? சிறுபிள்ளையின் கண்முன் சீனிமிட்டாயை காட்டியது போல் உவகை கொண்டது மனது.
இந்த சந்திப்பிற்க்காய் பல குழுக்களாய் பிரிந்து பணியாற்றுகின்றரே.. சேர, சோழ, பாண்டிய, பல்லவ தேசம் மட்டுமல்லாது பரந்து விரிந்த பல்லாயிரக்கணக்கான தேசங்களிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் வருவார்களே.. என் நண்பன் மட்டுமல்லாது தமிழ் வளர்க்கும் நல்லோர் பலரையும் காணக் கிடைக்குமே.. புதியவர்களின் அறிமுகம் மட்டுமல்லாது ஆடல், பாடல் கேளிக்கைகளும் இருக்குமாமே.. ஒரு பள்ளி மாணவன் தன் தேன் மதுரக் குரலில் பாடி அசத்தப் போவதாய் கூறியுள்ளானே..
தொகுத்து வழங்க கொங்கு நாட்டில் இருந்து இரு பெண்கள் வருகிறார்களாமே.. இதோடு சேர்த்து உன்னையும் காணப் போகிறேன். எத்துணை சந்தோசம் எனக்கு.. பிசிர் நண்பா, இதோ கிளம்பிவிட்டேன் நான்!!
கோ.பெ.சோ.. கிளம்பீட்டாரு.. அப்ப நீங்க ??
ஹா..ஹா...
ReplyDeleteரசித்ததற்கு நன்றி..
Deleteசபாச் ஆவி. நல்ல கற்பனை வளத்தோட அழகா இன்விடேசன் தந்த உனக்கொரு பொக்கே.
ReplyDeleteபல் இருக்கிற எதையாவது கொடுத்திருக்கலாமே ஸார்!
Deleteஹஹ நல்ல பதில்.
Deleteஅசத்திட்டீங்க...!
ReplyDeleteநன்றி DD.
Deleteஅனுஷ்கா வந்தா நான் வர்றேன்.
ReplyDeleteஇந்த ஐடியா நல்லா இருக்கே.. நஸ்ரியாவையும், அனுஷ்காவையும் சீப் கெஸ்டா கூப்பிட்டா தான் நாங்க வருவோம்னு ஒரு கோரிக்கை வைப்போமா?
Deleteஅற்புதமான வடிவமைப்பு அழைப்பிதழ்....
ReplyDeleteஅதே சமயம் சுவாரஸ்யமான பகிர்வு ஆனந்த்...
விழா சிறப்புடன் நடைப்பெற்று எல்லோரும் இன்புற்று இருக்க மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.
உங்களைத்தான் மிஸ் பண்ணுவோம். அடுத்த வருடம் பதிவர் சந்திப்பை ஒட்டி உங்க பயணத்தை ப்ளான் பண்ணுங்க..
Deleteஎங்கப்பயணம் எப்போதுமே ஜூன்ல தான்பா :(
Delete:-(
Deleteசிறப்பான அழைப்பிதழ் வடிவமைப்பு.
ReplyDeleteபடிப்பவரை விழாவிற்கு வரவைக்கும் ஆவலை தூண்டும் எழுத்து நடை வாழ்த்துக்கள்.
எங்க வாத்தியார் எது பண்ணினாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். இப்போதும் அப்படியே..
Deleteநவீன கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார் பற்றி ஒரு கதை எழுத ஆரம்பித்து டிராப்டில் இருந்தது. இப்போ தலைவரோட அழைப்பிதழ் பார்த்தவுடன் அதை யூஸ் பண்ணிக்கிட்டேன் அவ்வளவுதான்..
ரசித்தமைக்கு நன்றி தோழி.
வரலாற்று கதை நடையில் வரவேற்பு.. கொ.ப.செ அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி கலாகுமரன் ஸார்..
Deleteயாரு பாஸ் அது உசுர் பிசிர் நண்பன் ...?
ReplyDeleteசுப்பு பாஸ்.. இப்ப நாம இல்லையா ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம நட்பு பாரட்டிகிட்டு.. அதுபோல தான்..
Deleteயாரப்பா அந்த பிசிராந்தையார்? அப்புறம் அந்த மாணவன் யாரு?
ReplyDeleteமாணவன் ஓவர் நைட்ல பாடகர் ஆயிட்டாரு
Deleteயோவ் ஆவி மாணவன் இல்லையா... மாணவர்..... நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
Deleteஎழுத்துப்பிழை.. இதுக்காக நெற்றிக்கண் எல்லாம் திறக்க வேண்டாம் தல..
Deleteயோவ் கொ.பா.செ தெரியும்.... ஆனா ஒரு சோழன கோ.பெ.சோ ஆக்கிடீறேய்யா....
ReplyDeleteஆமா அந்த பிசிர் யாரு.. யார் என்று தெரிந்தால் நாடு கடத்துவதை திட்டம் (இல்லாட்டா நாளைக்கு வரலாறு இதப் பத்திப் பேசும் எங்களுக்கு எக்ஸ்ட்ரா ஒரு பாடம் சேரும்... இதையெல்லாம் தடுக்கிறது உரிமை மற்றும் வரலாற்றுக் கடமை :-)))))
சேர நாட்டிலிருந்து வந்ததால் உமக்கு கோ.பெ.சோ பற்றியும் பிசிர் பற்றியும் தெரியவில்லை. அவிங்க ரெண்டு பெரும் தேவராஜ் சூரியா மாதிரி தோஸ்துக..
Deleteநல்ல வரவேறு கட்டுரை வாழ்த்துக்கள் மாநாட்டிற்கு வரவேண்டும்.
ReplyDeleteகண்டிப்பாக சந்திப்போம் விமலன்..
Deleteஅன்பின் கோவை ஆவி - கோ.பெ.சோ அருமை நண்பர் பிசிராந்தையாருடன் கிளம்பி விட்டாரா - பலே பலே - திருவிழா களை கட்டட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி ஐயா.. திருவிழாவில் உங்களை எல்லாம் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.
Delete
ReplyDeleteLISTEN TO THIS SONG HERE.
https://www.youtube.com/watch?v=d_e_8yL6Gr0
SUBBU THATHA.
www.vazhvuneri.blogspot.com
அடடா ... பதிவர் திருவிழாவை சங்க காலத்துக்கே அழைத்து சென்றாச்சு...
ReplyDeleteஅந்த பள்ளி மாணவனுடன் இந்த ஆவியும் தானே பாடப் போவது
என்னப்பா நீ. கோ.பெ.சோ வுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கலாமுன்னு இருந்தேன்.
Delete