எங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா
எல்லாம் நஸ்ரியா.. அம்மம்மா நஸ்ரியா..
தான் நடித்து தமிழில் வெளிவந்த முதல் படமான நேரம் அவ்வளவு பெரிய வெற்றி பெறாவிட்டாலும் நஸ்ரியாவின் வளர்ச்சி அபரிமிதமானது. "YUVVH" என்ற மலையாள ஆல்பத்தில் புதுமுகமாக அறிமுகமாகிய இவர் அதில் "நெஞ்சோடு சேர்த்து" எனும் பாடலில் ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தார். மலையாளத்தில் MAAD DAD படத்தில் நடித்து திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த, நேரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தன்னுடைய "YUVVH" ஆல்பத்தின் ஜோடியான நிவின் பாலியுடன் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த இந்த நேரம் படத்தில் நடிக்க தமிழ்த் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரித்து இந்த தேவதையை தத்தெடுத்துக் கொண்டது. நஸ்ரியாவின் படங்களைக் காண விரும்பிய ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் விதமாக வரிசையாக இயக்குனர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் படங்களில் புக் செய்ய துவங்க ரசிகர்கள் காட்டில் மழை.
இவர் ஆர்யாவுடன் நடித்த ராஜா ராணி படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஒரு மில்லியன் ஹிட்டுகளை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெய்யுடன் "திருமணம் எனும் நிக்காஹ்", தனுஷுடன் "நையாண்டி", மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கீர் சல்மானுடன் "சலாலா மொபைல்ஸ்", கார்த்தியுடன் இன்னும் பெயரிடப்படாத ஒரு படம் மற்றும் ஜீவாவுடன் "நீ நல்லா வருவடா" என வரிசையாக பட வாய்ப்புகள் அமைய ஓவர்நைட்டில் தமிழ்நாட்டின் செல்லக்குட்டி ஆகிவிட்டார். இந்த தேவதையை என்னோடு சேர்ந்து வாழ்த்தி வரவேற்க உங்களையும் அழைக்கிறேன்.
பதிவர் திருவிழா : நாள் செப் 1, காலை 9 மணி.
மேலும் விபரங்களுக்கு...
நஸ்ரியாவுக்காக ராப்பகல்னு பாராம...
ReplyDeleteகண் துஞ்சாம...
இந்த தகவல்களை சேகரிச்சு...
தமிழ் கூறும் நல்லுலகுக்கு நீங்க செய்யும் சேவையை நினைச்சு கண் கலங்குது.
கலைஞர்கள் கண் கலங்க கூடாது ஸார்.. :-)
Deleteஅழகாத்தான் இருக்குப்பா இந்தப் பொண்ணு....
ReplyDeleteஇந்தப் பொண்ணுக்காக ஆவிப்பா பாடினா தப்பா மேடம்.. நீங்களே சொல்லுங்க!
Deleteஉன் பணியை கண்டு கண்கள் பனிக்குது, உள்ளம் மகிழ்ச்சியில் நிரம்பியது.
ReplyDeleteரைட்டு ன்னு சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்..
Deleteரைட்டு..
ReplyDeleteஇத உங்க கிட்டயிருந்து எதிர்பார்க்கல..
Deleteவாங்க பாஸ். . . உடணே நஸ்ரியா ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்.
ReplyDeleteஆல்ரெடி ஆரம்பிச்சாச்சு பாஸ்.. வாங்க ஐக்கியம் ஆயிடுங்க..
Deleteபாஸ் போற போக்கப்பாத்த நஸ்ரியாவுக்கு வெண்கலச்சிலை வைக்கமா விடமாட்டீங்க போல ....!
ReplyDeleteவெண்கல சிலையா? விலை ஏறினாலும் பரவாயில்ல.. வெங்காயத்துலயே சிலை வைக்கலாமுன்னு இருக்கேன்..
Deleteபாஸ் தப்பா எடுத்துக்காதிங்க உங்க நஸ்ரியாவ படத்த சுட்டுட்டேன் ... வாத்தி சார் எங்க போனாலும் மன்றம் ஆரம்பிக்கிறதுலையே குறியா இருக்கீரே .. என்னா ரகசியம் ..
ReplyDeleteஎன்ன சொல்றீங்களா, என் வாத்திய சொல்றீங்களான்னு சரியா புரியல.. ஆனா உங்களுக்கு நான் சொல்லிக்கறது ஒண்ணே ஒண்ணுதான் - " நான் தனி ஆள் இல்லே"
Delete//பாஸ் தப்பா எடுத்துக்காதிங்க உங்க நஸ்ரியாவ படத்த சுட்டுட்டேன்//
நஸ்ரியா புகழ் பரவினா சந்தோசம் தான்..
'நெஞ்சோடு சேர்த்து' பாடலை என்னை கேட்க வைத்து, நஸ்ரியா பைத்தியம் பிடிக்க வைத்த தலைவர் ஆவி வாழ்க!
ReplyDeleteமடிப்பாக்கம், நெசப்பாக்கம், பட்டினப்பாக்கம், மீனம்பாக்கம், விருகம்பாக்கம் எல்லாம் இருக்கு.. நாம எல்லோரும் (நஸ்ரியா ரசிகர்கள்) எல்லோரும் சேர்ந்து நஸ்ரியாப்பாக்கம் ன்னு ஒரு ஊரை நிர்மாணித்தால் என்ன??
Deleteசென்னை வரும்போது தலைமை செயலகத்துல இது பத்தி பேசறேன்..
அருமை
ReplyDeleteநன்றி ஐயா..
Deleteஷப்பா
ReplyDelete-ஆவிப்பா
அருமை..
Delete