Saturday, November 10, 2012

சமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)





               இசையின் மேல கொண்ட அதீத ஆர்வத்தால் அவ்வப்போது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலப் பாடல்களையும் கேட்பதுண்டு.. அப்படி சமீபத்தில் புதிதாக வீட்டிற்கு ஒரு “Home Theater” வாங்கி வந்தேன். அப்போது அதை இன்ஸ்டால் செய்ய வந்த பணியாளிடம் ஏதாவது வீடியோ உள்ளதா என கேட்ட போது சில பாடல்களை என் ஹார்டு டிரைவில் பதிவு செய்து கொடுத்தான்.

            

                      அந்த பாடல்களில் ஒன்று “YUVVH” என்ற ஆல்பத்திலிருந்த “நெஞ்சோடு சேர்த்து” எனும் இந்த மலையாளப் பாடல்.. முதல் முறை கேட்ட போதே மனதை என்னவோ செய்தது.. அந்த பாடல் முழுமையாக இல்லாததால் இணையத்தில் தேடிய போது “YOU TUBE” ல் கிடைத்தது..





                      இதுவரை சுமார் ஐம்பது முறையாவது அந்தப் பாட்டை கேட்டிருப்பேன். சற்றும் சலிக்கவில்லை. அந்த பாடல் இது போல் துவங்கும்

நெஞ்சோடு சேர்த்து பாட்டொன்னு பாடாம்,
பாட்டிண்ட ஈனம் நீயானு

என காதல் ரசம் சொட்டச் சொட்ட இயற்றப்பட்ட இந்த பாட்டிற்கு இசையமைத்திருப்பது ஸ்ரீஜித்- சச்சின் எனும் இருவர். (இவர்கள் இப்போது ஒரு தமிழ் படத்திற்கும் இசையமைப்பதாய் கேள்வி). பாடலைப் பாடியவர் “என்னமோ ஏதோ” புகழ் ஆலாப் ராஜு. இந்த பாடல் கேரளாவில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.. அழகான நாயகி, அவள் அழகையும் மீறி ரசிக்க வைக்கும் நாயகனின் நடிப்பு, சிறப்பான ஆக்கம் இப்படி எல்லாம் நிறைந்த இந்த வீடியோ உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

6 comments:

  1. இன்ஸ்டால் செய்ய வந்த பணியாளருக்கு நன்றி... பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன்!! பாடல் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்!!

    ReplyDelete
  3. இனிமை..சரணத்தில் சில இடங்களிள் வசனம் போல்..ராகமில்லாமல் இருப்பது சற்றே குறை!

    ReplyDelete
  4. ரியல்லி சூப்பர் சாங்க் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. உண்மையிலேயே செமயான சாங்க்..முன்பு ஒருமுறை புலம்பல்கள் தளத்தில் இந்தப் பாடலை நண்பர் பகிர்ந்திருந்தார். அப்போதே மனதில் ஒட்டிக் கொண்டது.

    http://rajamal.blogspot.com/2012/09/01.html

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரேயா கோஷல் ரசிகராக இருந்தால் இந்த பாடலை கேளுங்கள்.
      http://www.youtube.com/watch?v=yMTEPt8_hsU

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails