பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 1; ஸ்தலம்: 1; தொலைவு: 2.
மை டியர் மலேசியா
விமானத்தில் அருகில் அமர்ந்திருந்த ஒரு நபர், இடையிடையே அளவளாவிக் கொண்டே (?!!) வந்தார். அவர் பேசியதில் இருந்து அவர் மலேசியாவில் கடந்த ஆறு வருடங்களாய் இருப்பதையும், அடிக்கடி இந்தியா சென்று வருவதையும் தெரிந்து கொண்டேன். மேலும் அவர் எலக்ட்ரானிக் துறையில் பணிபுரிவதாயும் தெரிவித்தார்.. விமானம் தரையிறங்க எத்தனித்தவுடன் பைலட் பெல்டை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். சற்று நேரத்தில் விமானம் தன் இறக்கைகளால் காற்றைக் கிழித்துக் கொண்டு தரையிறங்கத் தயாரானது.
விமானம் முழுமையான நிறுத்தத்திற்கு வந்தபின் பெல்டை கழற்றவும் என பைலட்
அறிவுறுத்திக் கொண்டிருக்க என் அருகில் இருந்த நபர் திடீரென்று பெல்டை
விடுவித்துக் கொண்டு மேலிருந்து தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானார்.
இவரைப் பார்த்த இன்னும் சிலர் வேக வேகமாக தத்தமது உடைமைகளை எடுக்க விரைந்தனர்..
விமானச் சிப்பந்திகள் அவரை உட்காருமாறு பணித்தபோதும் அவர் அமர மறுத்ததுடன் தன்
செல்பேசியை ஆன் செய்து பேசத் தொடங்கி விட்டார். இதனை கண்ட எனக்கோ மிகுந்த அதிர்ச்சி,
படித்த, பண்புள்ள அந்த நபரே ( இதற்கும் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவராம்!!)
இவ்வாறு செய்வதை கண்டு திகைத்துப் போனேன்..
விமானம் முழு நிறுத்தத்திற்கு வந்ததும் என் பொருட்களை சரிபார்த்து எடுத்துக்
கொண்டு, மலேசிய மொழியில் அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணிடம் வணக்கம் சொல்ல எண்ணி (தில்லாலங்கடி
திரைப்படத்தை பார்த்து கற்றுக் கொண்டது) “சலாமத் தடாங்” என்றேன். அந்தப் பெண்ணோ
சிறியதாய் ஒரு புன்முறுவல் செய்து என்னிடம் “உங்கள் பயணம் சிறப்பாய் அமைய ஏர்
எசியாவின் வாழ்த்துகள்” என தூய தமிழில் சொல்ல, அப்போது தான் அவள் பெயர் “கீதாலட்சுமி”
என்பதை பார்த்து “நன்றி” என்று வழிசலுடன் கூறி இறங்கினேன்.
ஏர் ஏசியாவின் தனிப்பட்ட விமானங்கள் தரையிறங்கும் இடமாம் அது. அங்கிருந்து
ஏர்போர்ட்டின் இமிக்ரேசன் செக்கிட்கு வருவதற்கு அரை மணிக்கூறு பிடித்தது. வரும்
வழியில் கண்ணில் கண்ட மற்றொரு மலேய வார்த்தை “திலாரங் மசூக்” ( உள்ளே நுழையாதே).
மலாய் மொழிக்கென எழுத்துரு இருந்த போதும் அவர்கள் தங்கள் சொற்களை ஆங்கிலத்தின் துணை
கொண்டு தான் எழுதுகிறார்கள். இதைப் பார்த்த போது இதே போல் நம் ஊரிலும் செய்தால்
வெளிநாட்டுப் பயணிகள் கூட தமிழை ஆர்வமாக படிக்க ஏதுவாக இருக்கும் என்று தோன்றியது.
முன்பே வாங்கி வைத்திருந்த விசாவை அங்கிருந்த அலுவலரிடம் கொடுத்து
மலேசியாவில் நுழைந்ததற்கான முத்திரையை பெற்றுக் கொண்டு, வெறும் பேக்-பேக் ( BACK-PACK) மட்டுமே இருந்ததால்
நேராக ஏர்போர்ட்டின் நுழைவாயிலுக்கு வந்தேன். நுழைவாயிலின் அருகில் ஒரு சிறிய கடையில்
மலேசியாவின் சிம் கார்ட் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். சிம் கார்டு இலவசம்,
ஆனால் அதில் பேச வேண்டுமானால் முப்பது ரிங்கட்டுகள் செலுத்த வேண்டும்.
(கிட்டத்தட்ட இந்தியாவிற்கு முக்கால் மணி நேரம் பேசிக் கொள்ளலாம்). எதற்கும் இருக்கட்டுமென
ஒரு பேன்சி நம்பர் (?!) தேடி எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
ஏர்போர்ட்டிலிருந்து ஒரு வாடகை
வண்டியில் நேராக நான் பயணித்தது- பத்து மலைக்கு..
முருகனைக் கொஞ்சம் பொறுத்திருந்து தரிசிப்போமா??
மச்சி...கீதா லட்சுமி ...அந்த போட்டோல இருக்கிற பொண்ணா....?
ReplyDeleteமலேசியா போய் மலாய் வார்த்தை கத்துகிட்ட....வாழ்த்துக்கள்....
ReplyDeleteவித்தியாசமான பார்வையில் ஒரு பயணக்கட்டுரை..மிடுக்குடன் தொடரட்டும்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteடவுண் பஸ்ஸில் ஜன்னல் வழியே நுழைந்து சீட் பிடிக்கும் லாவகப்புத்தி பிளைட்டில் பயணிக்கும் போது இறங்குவதில் செயல்படும்.
ReplyDeleteபத்து செகண்டுக்குள் இறங்கா விட்டால் விமானம் வெடித்து சிதறி விடும் போல்
பரபரப்பாவார்கள்.
நான் கொடுத்த காசுக்கு உட்கார்ந்து கழிப்பவன்.
“ இறங்குறியா...தூக்கி வெளியே போடட்டுமா” என விமானப்பணிப்பெண் சொல்லும் வரை காத்திருப்பேன்.
உங்கல் பயணம் எனது மலேசிய பயண அனுபவத்தை கிளறி விட்டது.
நன்றி.
கோவை நேரம்- இல்ல மச்சி, அது வெறும் மாடல் தான்.. ஹிஹி..
ReplyDelete//மலேசியா போய் மலாய் வார்த்தை கத்துகிட்ட....வாழ்த்துக்கள்....//
இன்னும் ரெண்டு மூணு வருது.. அடுத்த போஸ்ட் ல..
ரமேஷ் வெங்கடபதி - வருகைக்கு நன்றி ரமேஷ்.. கருத்துக்கு நன்றி..
ReplyDeleteஉலக சினிமா ரசிகன் - ஒரு கட்டத்துல நான் பொறுமை இழந்துட்டேன்.. இப்படியெல்லாம் செய்யரதுனால தான் நம் நாட்டைப் பத்தி ஒரு தப்பான அபிப்ராயத்தை மற்றவர்களிடம் உருவாக்கிடறாங்க!! கருத்துக்கு நன்றி!!
ReplyDelete//உங்கல் பயணம் எனது மலேசிய பயண அனுபவத்தை கிளறி விட்டது.// அடுத்த போஸ்ட் தயாராயிடுச்சுன்னு சொல்லுங்க..!
இனிய பயணம்... வித்தியாசமாக இருந்தது... நன்றி...
ReplyDeleteபடத்தின் கீழேயே நீங்க மாடல் என்று குறிப்பு கொடுத்திருக்கனும்...பாருங்க ஒருத்தர் :(
ReplyDeleteஉங்க தயவில் நாங்களும் மலேசிய பாசை கத்துக்கிடறோம்.
வாங்க தனபாலன்!! கருத்துக்கு நன்றி!
ReplyDelete//கீழேயே நீங்க மாடல் என்று குறிப்பு கொடுத்திருக்கனும்...பாருங்க ஒருத்தர் :(//
ReplyDeleteஅந்த பொண்ணு நேம் பாட்ச் பாத்துருப்பீங்கனு விட்டுட்டேன்.. ஹிஹி
//உங்க தயவில் நாங்களும் மலேசிய பாசை கத்துக்கிடறோம்.//
"தொட்டனைத் தூறும் அறிவு" - இல்லையா??