பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 1; ஸ்தலம்: 2; தொலைவு: 3.
மை டியர் மலேசியா
(பத்து மலை)
விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் பத்து மலை (அ)
பத்து குகைக் கோவிலை அடைந்தேன். பழத்திற்காக தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு
பாலமுருகன் பழனிக்குச் சென்றதாய் கேள்விப் பட்டிருக்கிறோம்.. ஆனால் அவர் எப்போது
மலேசியாவிற்கு வந்தார் என்று யாருக்காவது தெரியுமா?
400 வருடங்களுக்கு முன்பு
இந்த பத்து மலை பழங்குடியினர் வசிக்கும் இருப்பிடங்களாய் இருந்திருக்கிறது. 1890 இல்
தம்புசாமிப்பிள்ளை என்பவர் இந்த குகையின் நுழைவாயில் வேல் வடிவில் இருப்பதைப்
பார்த்து இங்கு முருகனுக்கு இந்த கோவிலை நிர்மாணித்தார். (இவர்தான் கோலாலம்பூரில்
உள்ள மகாமாரியம்மன் கோவிலையும் நிர்மாணம் செய்திருக்கிறார்)
சுமார் 140 அடி(42.7 மீ) உயரம் கொண்ட இந்த முருகர்
சிலைதான் இன்றுவரை உலகிலேயே மிக உயரமான ஹிந்து கடவுள் சிலையாக இருக்கிறது. 2006 – ஜனவரி மாதம்
பொதுமக்கள் தரிசிப்பதற்காக திறக்கப்பட்ட இந்த சிலையை வடிவமைக்க 24 மில்லியன் ரூபாய்
செலவானதாம். தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட 300 லிட்டர் தங்க
பெயின்ட் கொண்டு இந்த ஜொலிக்கும் முருகனுக்கு வண்ணம் கொடுக்கப்பட்டதாம்.மேலும்
சிலையை வடிவமைக்க சுமார் மூன்று ஆண்டுகள் ஆனதாம்..
குகைக் கோவில்- இந்த மலையில்
மூன்று முக்கிய குகைகளும் ஒரு சிறிய குகையும் உள்ளன. அவற்றில் இந்த கோவில் குகை ( Temple
Cave ) மிகப் பெரியது.தரையிலிருந்து
நூறு மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த
குகைக்கு செல்ல 272 படிக்கட்டுகள் ஏற வேண்டும். ஒவ்வோர் வருடமும் தைப்பூசத் திருவிழாவிற்கு கூடும்
அன்பர்களின் எண்ணிக்கை ஏராளம்.
அடிவாரத்தில் அமைந்துள்ள Art Gallery Cave மற்றும் Museum Cave ஹிந்து
கடவுள்களின் சிலைகளும், ஓவியங்களும் நிறைந்தது. மலையின் இடது புறத்தில் ராமாயணக்
குகை ஒன்று உள்ளது. ராமரின் புகழ் சொல்லும் இந்த குகைக்கு போகும் வழியில் ஐம்பது
அடி உயரமுள்ள ஒரு ஆஞ்சிநேயர் சிலையும் உள்ளது..
குகைகளுக்குச்
செல்லும் வழியில் ஏராளமான புறாக்கூட்டங்களையும், குரங்குகளையும் காணலாம். பல்வேறு
உணவகங்களும், இளநீர் கடைகளும் சுற்றிலும் உள்ளதைக் காணலாம். இந்த ஸ்தலத்திற்கு
மலேசியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாட்டவரும் வந்து செல்வதால் ஆண்டு
முழுவதும் திருவிழாக் கோலம பூண்டிருக்கும். பக்தி, கோவில்கள், குகைக்களுக்காக
மட்டுமல்லாமல் ஆஜானபாகுவாக நின்றிருக்கும் அழகன் முருகனைக் காண்பதற்காகவாவது
ஒருமுறை இங்கு வந்து செல்ல வேண்டும்..!
பத்து மலையிலிருந்து புறப்பட்டு நேராகச்
சென்றது கெந்திங் ஹைலண்ட்ஸ்.. நிறைய இயற்கை/ செயற்கைக் காட்சிகள் நிறைந்த ஒரு
முக்கியமான இடம் அது. எல்லாரும் புகைப்படக் கருவிகளுடன் தயாரா இருங்க..
பயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)
பயணத்தின் சுவடுகள்-1(மை டியர் மலேசியா)
ஆஹா... படங்களும் பகிர்வும் அருமை... வாழ்த்துக்கள்... விளக்கமான தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteஅதானே....அவரு எப்படி பாஸ்போர்ட் விசா எடுத்து வந்து இருப்பாரு..? மயில் மூலம் பறந்து வந்து இருப்பாரோ...
ReplyDeleteமக்களோடு மக்களாக வரிசை கட்டி நிற்கும் புறாக்கள் எக்ஸலன்ட் !
ReplyDelete