பயணம் என்ற பெயரில் என் வாழ்க்கைப் பயணத்தை இதுவரை பதிவு செய்து வந்தேன்.. நான் வாழ்க்கையில் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி ஒரு சிறிய தொடராக எழுதும் ஆவல் நீண்ட நாட்களாகவே என் மனதின் ஓரத்தில் இருந்தது.. என் எழுத்துக்கு இதுவரை ஆதரவு கொடுத்த என் வாசகர்கள் இந்த தொடருக்கும் வரவேற்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த தொடரை தொடங்குகிறேன்.. (நான் சமீபத்தில் பயணித்த மலேசியா-சிங்கப்பூர் அனுபவத்திலிருந்து துவங்குகிறேன்..)
பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 1; ஸ்தலம்: 1; தொலைவு: 1.
மை டியர் மலேசியா
எவ்வளவு முறை சுவைத்தாலும் ஐஸ்க்ரீமைப் பார்த்தவுடன் சுவைக்கத் துடிக்கும் குழந்தைபோல், புதிய இடங்களைக் காண்பதில் தான் என்னே ஆனந்தம்!! நாள்காட்டியை அக்டோபர் பதினெட்டு எப்போது வருமென்று தினம் பதினெட்டு முறை பார்த்தபடியே ஆவலாய்க் காத்திருந்தேன். பத்து நாட்களுக்கு முன்னரே விசாவிற்காக பாஸ்போர்டை சென்னைக்கு அனுப்பியிருந்தேன். மலேசியன் ரிங்கட் (மலேசியாவின் கரன்சி ) மற்றும் சிங்கப்பூர் டாலர் வாங்குவதற்காக பல ட்ராவல்ஸ் மற்றும் வங்கிகளில் விசாரித்து பின் (1 ரிங்கட் - 17.50 ரூபாய் , 1 சிங்கப்பூர் டாலர் - 44.20 ரூபாய் ) X E கரன்சி எக்ஸ்சேஞ்சிடம் வாங்கிக் கொண்டேன். கோவையிலிருந்து சென்னையை அடைந்த போது க்ளாஸில் நிறையும் ஒயின் போல் என் மனம் சந்தோஷத்தில் நிறைந்து கொண்டிருந்தது..
சென்னை ஏர்போர்ட் நவீனமாகவும், மிகுந்த அழகுடனும் காட்சி அளித்தது.. (இரண்டு மாதங்களில் இது இரண்டாவது முறை, இருப்பினும் அதன் அழகை ரசிக்கத் தவறவில்லை). AIR ASIA எனும் அந்த "பறக்கும் மாட்டு வண்டியில்" மீண்டும் ஏறி உற்கார்ந்த போது என் தலை விதியை நானே நொந்து கொண்டேன். (அது பற்றி இன்னொரு பதிவில் விளக்கமாக சொல்கிறேன் ).
மூச்சு முட்டினாலும் திறக்க முடியாத சன்னல்களின் ஊடே அந்த அதிகாலை ஆகாயத்தைப் பார்த்த போது மனதிற்குள் ஒரு இனம் புரியா பரவசம்.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காதலி போல் அத்தனை அழகு.. உருண்டு திரண்டு மெல்ல மெல்ல ஓடிவந்து, பிய்த்துப் போட்ட இலவம்பஞ்சுக் கூட்டங்களாய் மிதந்து வரும் அழகில் மயங்காதவர் எவரும் இருக்க முடியாது.. ( FLIGHT ஏறியதும் அடித்து பிடித்து விண்டோ சீட் வாங்கி உறங்கும் மக்களே, கொஞ்சம் தலையை திருப்பி இயற்கையின் பேரழகைப் பருகுங்கள்)
இதோ இன்னும் பத்து நிமிடங்களில் கோலாலம்பூரில் தரையிறங்கப் போகிறோம்..
தொடரும்...
நாங்களும் தொடர்ந்து வருகிறோம்...
ReplyDeleteவாங்க நண்பா, சேர்ந்தே பயணிப்போம்!
ReplyDeleteபடங்களுடன் பயணம் அருமை சகோ,,, தொடருங்கள்,,
ReplyDeleteபடங்கள்.. கிராபிக்ஸ் கலக்கல். கண்ணிற்கு குளிர்ச்சியாக இருக்கிறது. பறக்கும் மாட்டு வண்டி வாகனம் கேள்விப் பட்டதே இல்லை. அனுபவம் தொடரட்டும்...பெற்றுக்கொள்ள காத்திருக்கிறோம்.
ReplyDeleteப்லைன்ல ஏறினதும் யார அடிச்சு, யார புடிச்சு விண்டோ சீட் வாங்கறதுன்னு சொல்லிகொடு அனு!
ReplyDeleteதொழிற்களம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
ReplyDeleteகலாகுமாரன் - உங்கள் கருத்துகள் ஊக்கமளிப்பதாய் உள்ளது.. நன்றி, தொடர்ந்து பயணிப்போம்!!
ReplyDeleteAnonymous said...
ReplyDelete// Is that you madhan??
பறக்கும் மாட்டு வண்டி....இதென்ன புதுசா இருக்கு...
ReplyDeleteபயணம் சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுக்கு நன்றி மச்சி.. பறக்கும் மாட்டு வண்டி பற்றிய பதிவு விரைவில்.. ( விட மாட்டேனாக்கும்..!)
ReplyDelete