இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய ஒரு சிறிய அலசல்.. நவம்பர் 9 ஆம் தேதியே வெளியாகும் என்று கூறப்பட்ட சில படங்களும் பல்வேறு காரணங்களால் தாமதமாக தீபாவளியன்று தான் வெளியாகிறது..
துப்பாக்கி - தீபாவளித் திரைப்படங்களில் அதிக பொருட் செலவில் உருவானதும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் வெளிவர இருக்கும் படம் இது. விஜய் நண்பன் திரைப்படத்திற்குப் பின் நடித்து வெளிவர இருக்கும் படம். ட்ரைலர் நமக்கு இது ஆக்க்ஷன் விருந்தாக இருக்கும் என்பதை சொல்கிறது..
போடா போடி - சிம்பு, வரு சரத்குமார் நடித்து வெளிவர இருக்கும் இந்த படத்தில் நட்பு, காதல் செண்டிமெண்ட் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். பாடல்கள் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளதால் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது..
அம்மாவின் கைபேசி- அழகி, ஒன்பது ருபாய் நோட்டு எனும் அழகிய காவியங்களை கொடுத்த தங்கர் பச்சானின் இயக்கத்தில் சாந்தனுவின் மாறுபட்ட தோற்றத்தில் வெளிவர இருக்கும் குறைந்த பட்ஜெட் படம்.
ஜப் தக் ஹை ஜான் - பாலிவுட் பாஷா ஷாருக் கான் நடித்து வெளிவர இருக்கும் ஹிந்திப் படம் இது. ஏ. ஆர். ரகுமான் இசை என்பதால் படத்திற்கு வட இந்தியாவில் மட்டுமல்லாது தமிழ் நாட்டிலும் கூட்டம் இருக்கும்.
சன் ஆப் சர்தார் - காஜோலின் கணவர் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடித்து வெளிவர இருக்கும் இந்தப் படம் ஒரு நகைச்சுவை விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..
நீர்ப்பறவை - தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் இது. விஷ்ணு, சுனைனா நடித்திருக்கும் இந்தப் படத்தில் வைரமுத்துவின் வைர வரிகள் பலம் சேர்க்கின்றது. பெரிய திரைப்படங்கள் வெளியாவதால் இந்த படம் ஒரு வாரம் கழித்து வெளியாகலாம் ..
அப்ப, நீங்க எந்த படம் பாக்க போறீங்க??
தீபாவளி அன்று உறவினர் வீட்டிற்கு செல்வதற்கே நேரம் கிடைக்காது... நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி...
ReplyDelete