Thursday, November 1, 2012

SKY FALL - திரை விமர்சனம்.

                                ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் 007 படம். டேனியல் க்ரெய்க் நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்று கூறப் படுகிறது. 2008 இல் Quantum of Solace வெளியிட்டுக்குப் பின் சிறிது காலம் பொருளாதாரத் தட்டுப்பாட்டினால் தடைபட்டிருந்த படம் 2010 ல் உயிர்பெற்று இன்று நம் கண்களுக்கு விருந்தாய்!                                 நமது நாயகன் ஜேம்ஸ் பாண்ட் இந்த முறை துப்பு துலக்குவது MI6 உளவு நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட(படும்) தாக்குதல்களைப் பற்றி.. மேலும் அவர்கள் ஏஜென்ட் M ஐ ஏன் கொல்ல  முயற்சிக்கிறார்கள், இந்த தாக்குதல்களுக்கு பின்னால் இருப்பவர்கள் தனது நிறவனத்தின் நிழல்களா, அவர்களிடமிருந்து எப்படி MI6 ஐ 007 காப்பாற்றுகிறார் என்பது தான் கதையின் முடிச்சு.. 
                              


                                    டேனியல் க்ரேய்க் - நாம் முன்னர் பார்த்த படங்களில் இருந்த அதே முக பாவனைகள்.. தலைதெறிக்க ஓடும் காட்சிகள், எதிரியிடம் மாட்டிக்கொள்ளும் போது சேரில் கட்டி வைத்திருப்பது போன்ற காட்சிகள் ஏனோ முந்தைய படங்களையே நினைவு படுத்துகிறது.. மேலும் ரொமேன்ஸ்  காட்சிகளில் (?!!) மனிதர் பிரிட்டிஷ் நாட்டின் சர்தார் வல்லபாய் படேல் பட்டம் வெல்கிறார்.. (கிளம்புங்க சார் காத்து வரட்டும்..!)

                                   படத்தின் கதை ஏஜென்ட் M ஐ சுற்றியே இருப்பதால் ஜுடி டென்ச்சின்  கதாப்பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ( ஆனா கடைசில கொன்னுப் புட்டாங்களே..!) ரொம்ப நாளைக்கு அப்புறம் "மணி பென்னி " கேரக்டர் வருகிறது. ஒரு "Gun "ம்  ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர் மட்டும் கொடுத்துச் செல்லும் போது "Q " ஏமாற்றுவது பாண்டை மட்டுமல்ல.. நம்மையும் தான்.. வில்லனை இன்னும் கொஞ்சம் வலிமையாக காட்டியிருக்கலாமோ?? (நம்ம ஊர் மதன் பாப் மாதிரி அடிக்கடி சிரிக்கிறார்)                          இசை அதிரடி.. குறிப்பாக வில்லன் தப்பிச் செல்லும்போது Subway க்கு குண்டு வைத்து தகர்க்கும் காட்சியில் அரங்கமே அதிர்கிறது. ஒளிப்பதிவு அருமை.. லண்டன் மற்றும் பாண்டின் பிறந்த ஊரைக் காட்டும் போது கொள்ளை அழகு. அவருடைய வீடு நாம் முன்பே ஹாரி பாட்டர் படத்தில் பார்த்ததாய் ஞாபகம்..

                          தமிழ் சினிமாக்களையே இப்போது  நாம் உலகத் தரத்துடன் பார்த்துப் பழகி விட்டதலாயோ என்னவோ இது போன்ற படங்களின் மேல் நாம் அளவுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்புடன் செல்கிறோம்.. எது எப்படியோ, படத்தின் முதல் பதினைந்து  நிமிடங்களை தவற விடாதீர்கள். ( சிறப்பான ஸ்டன்ட் காட்சிகள் நிறைந்த மயிர் கூச்செறியும் நிமிடங்கள் அவை).. SKYFALL  - அடி பலமில்லை.


80 / 100

4 comments:

 1. ரொமேன்ஸ் காட்சிகளில் (?!!) மனிதர் பிரிட்டிஷ் நாட்டின் சர்தார் வல்லபாய் படேல் பட்டம் வெல்கிறார்.. (கிளம்புங்க சார் காத்து வரட்டும்..!)

  ReplyDelete
 2. முதல் தேதி...முதல் படம்...முதல் விமர்சனம்...ஆவி வேகமா அலையுது...

  ReplyDelete
 3. நன்றி மாப்ளே. ௦௦7 படத்த சீக்கிரம் பாக்கலேன எப்டி??

  ReplyDelete
 4. அதற்குள்ளே பார்த்தாச்சா...? சுருக்கமான விமர்சனத்திற்கு நன்றி...

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...