Tuesday, November 13, 2012

துப்பாக்கி- திரை விமர்சனம்..


                
          இதோ இப்போ வெடிக்குது, அப்போ வெடிக்குதுன்னு ஒரு வாரமா டென்சன் கிளப்பிகிட்டிருந்த துப்பாக்கி ஒரு வழியா தீபாவளிக்கு வெடிச்சிருச்சு.. நம்ம இளைய தளபதி விஜய், காஜல் அழகுவால் சாரி, அகர்வால் நடிச்சு முருகதாஸ் அண்ணன் இயக்கி வெளிவந்திருக்கும் படம். 



          ஹீரோ விஜய் - ஹேர்ஸ்டைல்  மாற்றம் (மிலிட்டரி கட்), கதைக்கு தேவையான நடிப்பை மட்டும் கொடுத்திருப்பது, கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் உடல் மொழி மற்றும் உச்சரிப்பையும் கொடுத்திருப்பது பாராட்டத் தகுந்தது.. ( குறிப்பாக பன்ச்  டயலாக் எதுவும் இல்லாதது ஆறுதல்) விஜயின் சிறந்த பத்து படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். 
           
           விஜய்க்கு சரிசமமாக நடித்திருப்பது வில்லன் வித்யுத் ஜமால் (பில்லா ல டிமித்ரியா வந்தாரே, அவரே தான்.) பொருத்தமான கதாப்பாத்திரம். மிரட்டலான நடிப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஜெயிக்கிறார்.. ஆனால் நம் மனதில்  நிற்பதென்னவோ வித்யுத் தான்..! 


             காஜல் அகர்வால், அழகுப் பதுமை வேடம். அம்மணி அட்டகாசமாய் வந்து போகிறார். எல்லோருக்கும் இது போல் ஒரு காதலி இருந்தால் நன்றாக இருக்குமென்ற ஆவலைத் தூண்டிப் போகிறார். (மீட் மை கேர்ள் ப்ரண்டு பாடலில் நம்மை கிறங்கடிக்கிறார்..) ஜெயராம் சர்ப்ரைஸ் பேக்கேஜ்..  சத்யன் இடையிடையே கிச்சு கிச்சு மூட்டுகிறார்..  கடைசியில் கண்கலங்க வைக்கிறார்.

             ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். ஆமாங்க மணிரத்னம் படங்களுக்கு பண்ணிட்டு இருந்தாரே அவரே தான். ஒவ்வோர் பிரேமிலும் ஒளி ஓவியத்தை காமிரா எனும் தூரிகை கொண்டு தீட்டி இருக்கிறார். (சார், உங்களுக்கு டைரக்ஷன் எல்லாம் வேண்டாம்.. உங்க ஒளிச் சேவை தமிழ் நாட்டுக்குத் தேவை.)


              மும்பை தொடர் குண்டுவெடிப்பை  பற்றிய கதை என்றாலும், காதல், நட்பு, தேசம், தியாகம், வில்லனின் வியுகத்தை உடைப்பது, ஹீரோவின் அடுத்த செயலை வில்லன் கணிப்பது.. வில்லனுக்கு தன்  தங்கையையே பணயக் கைதியாக அனுப்பி வைப்பது என காட்சிக்கு காட்சி திருப்பங்கள். சரி, கதைக்கு வருவோம்.. விடுமுறைக்கு வரும் ராணுவ வீரர் விஜய்,  மும்பையில் பரவியிருக்கும் தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கி அவர்களின் திட்டத்தை  தவிடுபொடியாக்கி அதன் வேர் வரை வெட்டி எறிவதே கதை.. 



          ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.. ஒரு பாடலை ஆண்ட்ரியாவுடன் விஜயே பாடியிருப்பது சிறப்பு ( நல்லவேளை இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய் என்ற வாசகத்தை காணோம்). ரீ-ரெக்கார்டிங் கலக்கல் (லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போட்டிருக்கீங்க பாஸு..!)


          ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியிருக்கும் தேசப்பற்றிற்காக  இயக்குனருக்கு ஒரு சல்யூட். தெளிவான கதை, அளவான வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, ஹாலிவுட் படங்களுக்கு இணையான காட்சியமைப்புகள், சண்டைக்காட்சிகள். துப்பாக்கி பர்பெக்ட் என்டர்டைனர் என்பதில் துளியும் ஐயமில்லை..       

80 / 100

டிஸ்கி – முருகதாஸ் சார், எல்லாம் சரி.. எதுக்கு சார் இந்த டைட்டிலே வேணும்னு கட்டிபுடுச்சு உருண்டு, சண்டை போட்டு வாங்கனிங்க? ஒரு பட்டாசுன்னு வச்சுருக்கலாம், சரவெடின்னு வச்சுருக்கலாம்.. கொஞ்சம் டவுட்ட கிளியர் பண்றீங்களா? 


2 comments:

  1. சுடச் சுட சினிமா விமர்சனம் படிக்க அருமையாய் இருந்தது. பாவம் விஜெய்க்கு அட்லாஸ்ட் ஓடுகிற(தியேட்டரை விட்டல்ல) படம் அமைந்துள்ளது மகிழ்ச்சி. எதும் போங்காட்டம் கிடையாதே(விஜய் ரசிகரோ) 80 மதிப்பெண் கொடுத்ததால் கேட்டேன்

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்... படம் செம ஹிட்...!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...