ஹேட்ஸ் ஆப் டு யூ விஜய் டிவி..!
திருநங்கைகளை பற்றிய ஆழமான கலந்துரையாடல் இந்த வார நீயா நானாவில்.. அவர்களுக்கும் ஒரு மனதுண்டு, ஆண், பெண் போல் ஆசாபாசங்கள் உண்டு என்றெல்லாம் திருநங்கைகளை இதுவரை வெறும் காட்சிப் பொருளாய் பார்த்தவர்கள் கூட எண்ணியிருக்க கூடும். அவ்வளவு டச்சிங்காக இருந்தது நிகழ்ச்சி.. அதிலும் ஒருவர் கணவரைப் பற்றி கூறியபோது நெகிழ்ச்சியாக இருந்தது. சில திருநங்கைகள் காசு பிடுங்குவதற்காக சில தவறான வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். அந்த மோசமான அனுபவம் எனக்கும் உண்டு.. அவர்களுக்கு வாழ ஓர் அங்கீகாரம் கொடுத்துவிட்டால் நிச்சயம் அது போன்றவற்றை தவிர்த்து விடுவார்கள் என்பது திண்ணம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஜய் டிவிக்கு ஒரு சலாம்..!
இந்த வார மிக்ஸிங்..!
அமைச்சர் ஆவியானந்தா!
ஒய் மீ ஆல்வேஸ்?
அரும்பாடுபட்டு லைசன்ஸில் முகவரி மாற்றி வந்த எனக்கு வந்தது மற்றொரு சோதனை. சில பொருட்கள் வாங்க RS புரம் சென்ற நான் அனாமிகாவை (எனது i20) அங்கு ஒரு ஹோட்டலின் முன் இருந்த பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இன்ஜினை ஆப் செய்தேன். அதே நேரம் வண்டியே குலுங்கும் அளவுக்கு ஏதோ இடித்தது போல உணர்ந்தேன். சீட் பெல்டை கழற்றிவிட்டு வெளியே இறங்க, அதற்குள் ஒருவன் டூவீலரை அவசர அவசரமாக கிளப்பி எதிர் திசையில் சென்றான். ஒன்றும் புரியாமல் காரை சுற்றி வந்த எனக்கு தலை சுற்றியது. காரின் முன்புறம் இருந்த பம்பர் உடைந்தும் , Fog லைட் தொங்கிக் கொண்டும் இருந்தது. டூ வீலரை பார்க் செய்ய வந்தவன் இடித்து விட்டு அப்படியே ஓடிவிட்டான். அவனை சிறிது நேரம் திட்டிவிட்டு தண்டச் செலவு அழுதுவிட்டு வந்தேன். வானத்தை நோக்கி ஒரே கேள்வி கேட்டேன்.. ஒய் மீ ஆல்வேஸ்?
இணையத்தில் 'பிடித்தது':
ஆகச்சிறந்த ரணம் எதுவெனில்,
பிரியங்கள் நிறைந்திருந்த தருணங்களை
பிரியமற்ற தருணத்தில் நினைப்பது தான்.
ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று..
அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருந்த சமயம், சென்னை ஏர்போர்ட்டில் டாக்ஸிக்காக வெயிட் செய்து கொண்டிருந்தேன். அந்நேரம் அங்கு வந்த ஒருவன் திண்டிவனத்திலிருந்து வந்ததாகவும், பர்ஸை திருடிவிட்டார்கள் என்றும், ஏதாவது உதவி செய்யுமாறும் கேட்டு நின்றான். அவன் உடையும் கோலமும் பரிதாபப்பட வைத்தது. அழைத்து சென்று அருகிலுள்ள டீக்கடையில் இருவருக்கும் டீ சொல்லி, அவனுக்கு வடையும் வாங்கிக் கொடுத்து பின் அவன் கையில் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினேன். பின்னர் மூன்று வாரங்களுக்கு பிறகு திரும்ப அமெரிக்கா செல்ல ஏர்போர்ட் வந்தபோது அதே ஆள் மீண்டும் யாரிடமோ காசு கேட்டுக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் எதிர்திசையில் சென்று மறைந்துவிட்டான். சென்ற மாதம் நண்பன் ஒருவன் யு.எஸ்ஸிலிருந்து வந்திருந்தான். அவனைப் பார்க்க விருதுநகர் சென்றிருந்தேன். அங்கே ஒருவன் இதுபோன்றே வந்து பணம் கேட்க, நான் கொடுக்க மறுத்ததோடு நண்பனையும் கொடுக்க விடவில்லை. "பார்த்தா Genuine ஆ தெரியராண்டா" என்ற அவனிடம் எனக்கு நடந்த கதையை கூறினேன். சமீபத்தில் மஞ்சப்பை என்ற படம் பார்த்த போது அதில் இதுபோன்ற காட்சி வந்ததும் எனக்கு இந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது.. உஷார் மக்களே.. இதுபோல நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள்..
சமீபத்தில் ரசித்த பாடல்:
சத்தியமா நஸ்ரியாவுக்காக அல்ல..! ஹிஹிஹி..
கிஸு கிஸு கார்னர்: இவங்களுக்குள்ள மெய்யாலுமே 'அதுவா'?
சாதாரணமா விளையாடிக்கிட்டுருந்த ஒருத்தன் மரண அடி அடிக்கிறான்னா ஒண்ணு அவன் யூசுப் பதானா இருக்கணும்.. இல்லீன்னா பையன் லவ்வுல விழுந்திருக்கணும்.. குவாலிபையர் மேட்சுல அடி பின்னுனத பார்த்தா அப்படித்தான் தோணுது..இவங்களுக்குள்ள மெய்யாலுமே அதுவான்னு கேட்டா, உலக நாயகன், நாயகன்ல சொல்ற அதே பதில்தான்.. "தெர்லியேபா"..!
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, வர்ட்டா...!
***************** X *******************