Monday, April 1, 2013

எனக்கு பிடித்த பாடல்-1 (கப்பலேறி போயாச்சு)

                             சில பாடல்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அப்படி என் மனதில் இடம்பிடித்த ஒரு சில பாடல்களை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்..



                                 கப்பலேறிப் போயாச்சு, சுத்தமான ஊராச்சு கண்ணம்மா எனத் தொடங்கும் இந்தப் பாடல் இந்தியன் திரைப்படத்தில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிய இரவில் நாட்டு விடுதலைக்காக தன் மனைவியை விட்டுப் பிரிந்த கணவனும், கணவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் மனையாளின் உணர்ச்சிமயமான வெளிப்பாடுமே இந்தப் பாடல்.  நாடு விடுதலை அடைந்த போது அடைந்த மகிழ்ச்சியை என் தலைமுறையினருக்கு அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய இந்த பாடல் என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பாடலாகும்..

7 comments:

  1. எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். கமலஹாசன் சுகன்யாவின் முகபாவனைகளை ரசிப்பேன். கடைசியில் பல உடைகளில் ஆடும் டான்ஸ் சூப்பர்..

    ReplyDelete
  2. உங்களுக்கு பிடித்தபாடல் எங்களுக்கும் பிடித்துவிட்டது. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.. வரிகளும் அத்தனை அருமையாய் இருக்கும்

    ReplyDelete
  4. முடிவில் இருவரின் கண் கலங்கும் நடிப்பு அருமையாக இருக்கும்...

    புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. ஸ்கூல் பையன், பூந்தளிர், சீனு சார், தனபாலன்- எல்லோருக்கும் நன்றி..

    ReplyDelete
  6. இந்தப் பாடல் எனக்கும் மிகப் பிடித்தது ஆனந்த். அதிலும் கடைசியில் வெவ்வேற பாரம்பரிய உடைகளில் கமல் + சுகன்யா மாறும் அந்த கிராபிக்ஸ் வேலையை மிக ரசிப்பேன் நான்.

    ReplyDelete
  7. ஆமா பாலா சார், நாட்டின் பல்வேறு கலாசாரங்களை ஒரே நிமிடத்தில் காட்டியிருப்பார் இயக்குனர்.. அது மட்டுமல்ல கதாநாயகன் கொடுத்து சென்ற குங்குமம் முடிந்து கடைசி பொட்டு வைக்கும் நேரத்தில் அங்கே ஆவலுடன் வரும் கணவன்காதல் ரசம் சொட்டும் காட்சியது...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails