Wednesday, April 3, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா.. திரை விமர்சனம்
                                பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எப்பவும் நல்லது மட்டுமே செய்வார்கள்.. அவர் கண்டிப்பதும், வசை பாடுவதும் நமது நன்மைக்காகவே என்ற கருத்தை சொல்ல முழங்காலை சுற்றி மூக்கை தொட முனைந்திருக்கிறார் இயக்குனர் பாண்டியராஜ். பொறுப்பற்ற இரு இளைஞர்கள் அரசியலில் குதிக்க நினைத்து அடிபட்டு பின் ஒரு நிரந்தர தொழில் தேடி செல்வதை காதல் வார்னிஷ் அடித்து சொல்லியிருக்கிறார்..

                                 

                               இளைஞர்களை ஈர்ப்பதற்காகவோ என்னவோ சிவகார்த்திகேயன் மற்றும் விமலை வைத்து சரக்குடன் படத்தை துவங்குகிறார்.. சிம்பு மற்றும் யுவன் சேர்ந்து பாடும் அந்த புறம்போக்கு பாடலுடன் ஆரம்பித்து முதல் பத்து நிமிட மொக்கை பார்த்து மறுபடியும் ஒன்பதுல குருவான்னு நாம நினைக்கும் போது மூன்று சக்கர (??!!)) ஸ்கூட்டியில் நாயகி ரெஜினா வந்தவுடன் விறுவிறுப்புடன் எழுந்து நிற்பது சிவகார்த்திகேயன் மட்டுமல்ல.. திரைக்கதையும் தான்..                               நம்பர் ஒன், நம்பர் டூ இடங்களுக்கு வர முடியாவிட்டாலும் ரெஜினா நிச்சயம் தன் நடிப்பிற்காக இன்னும் சில படங்களில் தோன்றுவார் என நம்புவோம். சிவகார்த்திகேயன் நெற்றியில் பட்டையும், கழுத்தில் உத்திராட்ச கொட்டையுடன் மன்னன் ரஜினிகாந்த் போல் ( சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பொறுத்து கொள்ளவும்) அம்சமாக இருக்கிறார். இவருடைய டைமிங் சென்ஸ் பிரமாதம், ஆனால் மெரினா, கேபிகிரா போன்ற படங்களில் வீணடிக்கப் பற்றிருக்கிராரோ என்ற ஐயம்.. சிச்சுவேஷனுக்கு பொருத்தமாக இவர் பாடும் பாடல்கள் அருமை.. 'எதிர்நீச்சல்'  போடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


                             இதுவரை ஒரு ஐந்து ஆறு படங்கள் பார்த்த போதும் ஒன்றில் கூட முக பாவமோ, டயலாக் டெலிவரியோ மாற்றாமல் இதிலும் போரடிக்க வைக்கிறார் விமல். அதிலும் பிந்து மாதவியுடனான இவர் காதல் காட்சிகள் செம போர்.. விமலின் மாமனாராக வருபவர் குடித்துவிட்டு சொல்லும் கதை நல்ல ரசனை. பரோட்டா சூரிக்கு வழக்கம் போல் நண்பர் வேடம். சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.                            பாடல்கள், பின்னணி  இசை சுமார்.. கடைசி பத்து நிமிடங்கள் மட்டும் பட்டையை கிளப்பி இருக்கிறார் பாண்டிராஜ்.. நல்ல மெசேஜ் சொன்ன அவருக்கு ஒரு மெசேஜ்- சென்டிமென்ட் படங்கள் மட்டுமே எடுங்களேன், காமெடி எல்லாம் வேணாமே சார். ரொம்ப சொதப்பறீங்க..


50 / 100
13 comments:

 1. ஐம்பது ரொம்ப ஓவர் சார்... ஜஸ்ட் பாஸ் தான்... வேணும்னா ரெஜினாக்கு 25.. பிந்துக்கு 25 ஓகே ஓகே வா ஹா ஹா ஹா

  ReplyDelete
 2. என்னைப் பொறுத்த வரை ஐம்பது வாங்கினாதான் பாஸ் மார்க்.. ஒரு தடவை பார்க்கலாம்னு அர்த்தம்.. விகடன் மார்க் கூடவெல்லாம் கம்பேர் பண்ணாதீங்க சீனு சார்..

  ரெஜினாவுக்கு 25 என்ன 40 ஏ கொடுக்கலாம்.. hehehe

  ReplyDelete
 3. தினம் ஒரு படம் பார்த்து பதிவ போட்டு எஞ்சாய் பன்ற....

  ReplyDelete
 4. சரியாகத்தான் விமர்சனம் பண்ணுறீங்க .......ஒருமுறை பார்த்ததோட சரி அப்புறம் போஸ்டர கூட திரும்பி பார்ப்பதில்லை

  ReplyDelete
 5. ஓஹோ... ஐம்பது மார்க் அதற்குத் தானா...? வாழ்த்துக்கள்... ஹிஹி...

  ReplyDelete
 6. மிக மிகசுமாரான படம்... அவ்வளவே....

  ReplyDelete
 7. என்னங்கய்யா இது... அந்தப் பக்கம் பி.பிரபாகரன் இந்த ரெஜினாப்புள்ளக்கு விட்ட ஜொள்ளு ஆறா ஓடுது...! இங்க ஆவியும் வழியுது! அதுக்காகவாவது ஒரு தடவை படத்தப் பாத்துரலாமுன்னு தோணுதே நண்பா!

  ReplyDelete
 8. கோவை நேரம் - மாப்ளே, சில பேருக்கு தினமும் சரக்கடிச்சா சந்தோசம்.. சிலருக்கு சினிமா போதை.. ஒவ்வொருத்தருக்கு ஒரு பீலிங்ஸ், இல்லையா மச்சி..

  ReplyDelete
 9. சரளா- நீங்க படத்தை பற்றி சொன்னீங்களா இல்லை என் வலைதளத்தை பற்றி சொன்னீங்களான்னு புரிஞ்சிக்க முடியலை.. ;-) வருகைக்கு நன்றி,,

  ReplyDelete
 10. தனபாலன்- ஹிஹி..

  ReplyDelete
 11. ஸ்கூல் பையன்- சரிதான் நண்பா,

  ReplyDelete
 12. பாலகணேஷ் சார்- யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாதுன்னு பல முறை திருத்தி பிரசுரித்தும் எப்படியோ வழிசல் வெளியே தெரிஞ்சிடுச்சு.. நீங்களாவது சைலண்டா விட்டிருக்கலாமே.. :-)

  ReplyDelete
 13. புரோட்டா சூரிக்காகவே ஒரு டைம் பார்க்கலாம்.. சிவா வழக்கம் போல் சூப்பர்... But 50 மார்க் தானா???

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails