ஒரு மந்திரி பொண்ணை, ஒரு மிடில்க்ளாஸ் பையன் லவ் பண்றான். அந்த பொண்ணும் அவனை உயிருக்குயிரா லவ் பண்றா.. நண்பர்கள் இவங்க காதலுக்கு உதவறாங்க. மந்திரி அதுக்கு நோ சொல்றார். கல்லூரியின் கடைசி நாளில் கிளிகளுக்கு ரெக்கை முளைத்து பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி NH4 ல பறந்து போயிடுது.. மந்திரி அவங்கள புடிக்க ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏற்பாடு பண்றார். அவரு புடிச்சாரா, இவங்க மாட்டுனாங்களா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்ல வந்திருக்கும் படம்தான் இந்த உதயம்.
சித்தார்த் கேரக்டரை அருமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.. பொறுமை, தைரியம், புத்திசாலித்தனம் இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் அவ்வளவு அழகாக பொருந்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், ஆக்ஷனிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக ஹைவேயின் குறுக்கே போலிஸ் வண்டியை வழிமறிக்கும் காட்சியில் நல்ல நடிப்பு. நாயகி அஸ்ரிதா, புதுமுகம் என்றாலும் இளைஞர்களை கவரும் முகமாக இருக்கிறார். தமிழ் உச்சரிப்பில் இன்னும் தேற வேண்டும் என்றாலும் கான்வெண்டில் படித்த பெங்களூரில் வாழும் பதினேழு வயது பெண் கேரக்டர் என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.
படத்தின் மற்றொரு பலம் போலீஸாக வரும் கே.கே.மேனன்.. போலீசுக்கே உரிய கம்பீரமும், மிடுக்கும் இவரிடம் மிளிர்கிறது. ஆரம்பம் முதலே இவரை பாசக்கார கணவராகவும், அன்பான அப்பாவாகவும் காட்டும் காட்சிகளிலேயே நமக்கு படத்தின் முடிவு தெரிந்து விடுகிறது எனினும் அவர் அஸ்ரிதாவை கூட்டிக் கொண்டு போகும் போது மனம் பதைபதைக்கிறது. மற்றொரு முக்கிய ப்ளஸ் வெற்றிமாறனின் திரைக்கதை.. சிம்பிளான கதையில் திருப்பங்களை தந்து ஆடியன்சை இருக்கையில் கட்டிப் போடுவது நல்ல திரைக்கதை மட்டுமே..
ஜி.வீ.பிரகாஷ் இசையில் யாரோ இவன் பாடலும் ஓரக் கண்ணாலே பாடலும் இனிமை. ஆயினும் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாமோ? சித்தார்த்தின் நண்பர்கள் மற்றும் போலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் நம்மை அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்க்ஷன் என சரிவிகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை குடும்பத்துடன் பயணம் செய்ய நிச்சயம் இனிமையாக இருக்கும்.
85 / 100
குடும்பத்துடன் பயணிக்க ஏற்றது இந்த நெடுஞ்சாலை - கடைசி வரி பன்ச்சே அருமையான விமர்சமாயிடுத்து ஆவி! இதை தைரியமாப் பாத்துர்றோம் நாங்க. (புதிய பவர்(?) ஸ்டார் உதயமாகியிருக்கும் ‘திருமதி தமிழ்’ பாத்து விமர்சனம் எழுதற திடநெஞ்சம் உங்களுக்கு இருக்கா?)
ReplyDeleteபடம் நல்லாயிருக்கு சார். ஆவி டாக்கீஸ் குழு கொஞ்சம் தரமான படங்்களை மட்டும் தான் பார்க்க அனுமதிக்கும்.ஹி ஹி..
Deleteவிமர்சனம் அருமை... விரைவில் பார்த்துவிடுவோம்...
ReplyDeleteகண்டிப்பா நண்பா
Deleteமிக நேர்தியான கதை, திரைகதை, வசனம். சமீபத்தில் ரசித்த படம்....
ReplyDeleteசித்தார்த் நடிப்பு சூப்பர்
ஆமாம் நண்பா..
Deleteபடம் நல்லா இருக்குன்னு சொல்லிட்ட...ம்ம்ம்..நான் போய் மாட்டிகிட்டேன் கெளரவத்துல.....
ReplyDelete
ReplyDelete//நாயகி அஸ்ரிதா, புதுமுகம் என்றாலும் இளைஞர்களை கவரும் முகமாக இருக்கிறார்//
இது போதும். கதை எப்படி இருந்தா என்ன....