Friday, April 26, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (காதலா? கத்தாஸா?)-4

முந்தைய பதிவுகளுக்கு...




                                   ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த திங்கள் கிழமை வந்ததும் காலையில் நேரமாகவே எழுந்து அசோகன் கடையில் காலை உணவை முடித்துக் கொண்டு, நேராக லைப்ரரியின் முன் சென்று நின்றேன். என்னைப் பார்த்ததும் இளங்கோ மாஸ்டர் மாலையில் வரும்படி சொல்லி அனுப்பினார்.  அங்கே நின்றிருந்த சீனியர் தீபக்  என்னை அழைத்து, " என்னடா, சீனியர் ஏதாவது செய்ய சொன்னா செய்ய மாட்டீங்கறியாமே.." என்றான். அவனுக்கு பதிலேதும் சொல்லாது நான் நின்றிருக்க அப்போது அவ்வழி வந்த என் வகுப்பில் படிக்கும் ஜீவா என்ற மாணவன் இடைபட்டு " அண்ணே, அவன் நம்ம பய தான்னே, நான் அவன்கிட்டே சொல்றேன்" என்றான். "சொல்லி வை ஜீவா" என்றபடி நகர்ந்தான் தீபக். "மச்சி சீனியர் சொன்னா செஞ்சுட்டு போக வேண்டியது தானே, காலேஜ் வந்தமா, பிகர் பாத்தாமான்னு இல்லாம இவன்கிட்ட எல்லாம் ஏன் மொறைச்சுக்கிற?" எனவும் இன்று மாலையோடு இந்த சீனியர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என மனதில் வெறி தோன்றியது, குறிப்பாக இந்த தீபக்கின் முகத்தில் முதல் குத்து விட வேண்டும் என மனம் எண்ணியது.

                                         வகுப்பில் நுழைந்ததும் கண்ணில் பட்டது ரமாதான். ஒரு பச்சை நிற சுடிதாரில் "கேரளா ஸ்டைலில்" தலை பின்னிக் கொண்டு நெற்றியில் ஒரு சந்தனப் பொட்டுடன் அமர்ந்திருந்தாள். இடப்புறம் சங்கீதாவும், வலப்புறம் மற்ற பெண்களும் இருந்த போதும் லென்ஸ் போகஸில் அவள் மட்டுமே தெரிய மனசுக்குள் "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே" பீட் அடிக்க ஆரம்பித்தது.  அவளிடம் பேச வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. பாஸ்கர் வருவதற்குள் பேசி விடவேண்டும். இல்லையென்றால் அவர்கள் முன் வைத்தே ஏதாவது சொல்லி விடுவான் என்ற தவிப்பு வேறு. முதலில் சங்கீதாவிடம் பேசிவிட்டு பின் அப்படியே அவளிடம் பேசலாம் என்று எண்ணி தயாரானேன்.

                                        அவள் புறமாக திரும்பி "சங்கீதா, குட் மார்னிங்" என்றேன். அவளும் பதிலுக்கு குட் மார்னிங் சொல்ல " ம்ம் .. படம் எப்படி இருந்தது.." என்றேன்.  கேட்ட பின்புதான் வேறு ஏதாவது கேட்டு தொலைத்திருக்கலாம் என்று தோன்றியது. "பயங்கர போர். உனக்கு பிடிச்சுதா" என்று கேட்டதும் அவள் முதல் முறையாக ஒருமையில் அழைத்ததை கவனித்தேன். அவ்வாறு  அவள் வேண்டுமென்றே அழைத்ததாய் உணர்ந்தேன். நானும் "இல்லப்பா, போர் தான்.. உன் ப்ரெண்ட்சுக்கு பிடிச்சுதா?" என்று கொஞ்சம் குரலை உயர்த்தி அவளுக்கும் கேட்கும் வண்ணம் கேட்டேன். "அய்யோ, அவங்களுக்கு சுத்தமா பிடிக்கலே. ஆனா ரமாவுக்கு விஜயகாந்த்னா ரொம்ப பிடிக்குமாம். அதனால அவ மட்டும் ரசிச்சு பார்த்தா.. " என்று கூற அவள் திரும்பி ஒரு சிறிய புன்னகை மட்டும் சிந்தினாள். நல்லவேளை படத்தைப் பற்றி மோசமாக நான் எதுவும் சொல்லி வைக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு " அப்படியா, விஜயகாந்தோட எந்த படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்" என்றேன் அவளை நோக்கி.

                                      "ம்ம்..சின்னக் கவுண்டராம்" பதில் அவளிடமிருந்து இல்லை. என் பின்னாலிருந்து. சற்றே திரும்பிய போது அங்கே பாஸ்கர் அமர்ந்திருந்தான். வடிவேலு ஸ்டைலில் "வந்துட்டான்யா, வந்துட்டான்யா" என்பது போல் பார்த்தேன். " எப்படா வந்தே?" என்றேன். "நீ கடலைய விதைக்கும் போதே வந்துட்டேன்டா". சங்கீதாவும் ரமாவும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்து கொள்ள ஆசிரியை உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. குள்ளமாகவும், சாந்தமாகவும் இருந்த அவர்களுக்கு குரல் சம்பந்தமே இல்லாமல் வி.டி.வி. கணேஷ் போல் இருந்தது. அவர்கள் இருந்த நாற்பது நிமிடமும் ஆங்கிலம் முதல் தாளை தமிழிலேயே எடுத்தது வியப்பாக இருந்தது.

                                       அன்று மாலை வழக்கம் போல் மாணவர்கள் கிராயூரை நோக்கி படையெடுக்க, நானோ எனக்கிருந்த காதலா, கராத்தேவா? என்ற கேள்வியில் கராத்தே ஜெயிக்க கல்லூரி மைதானம் நோக்கி ஓடினேன். கல்லூரியை விட்டு வெளியே செல்லும் போது அவள் நான் கராத்தே செய்து கொண்டிருப்பதை பார்க்க கூடும் என்ற சந்தோஷம் வேறு. இளங்கோ மாஸ்டரும் வந்துவிட மொத்தம் பதிமூன்று பேர் இருந்தோம். முதல் நாள் வார்ம் அப் மட்டும் செய்து கொள்ளலாம் என்றும் அடுத்த நாளில் இருந்து கத்தாஸ் (கராத்தே யுத்திகள் ) கற்றுத் தருவதாயும் கூறினார். அன்றே ஒரு டெய்லர் வந்து கராத்தே உடைக்கு அளவெடுத்து சென்றார். எங்களை வரிசையாக நிற்க வைத்தார். முதல் ஆளாக நானும் என் பின்னே பாஸ்கர் மற்றும் கடைசியில் அன்புவும் நின்றிருந்தோம்.



                                     இளங்கோ மாஸ்டர் முன்னே வந்து அவரது வலது காலை தூக்கி இடுப்பளவில் வைத்து அசைக்காமல் அப்படியே ஒரு நிமிடம் நின்றார். பின் எங்களை அதே போல் செய்யப் பணித்தார்.  எல்லோரும் காலைத் தூக்க முதலில் என்னிடம் வந்து வெரிகுட் என்றார். பின் பாஸ்கரிடம் சென்று முட்டி மடக்காதே என்றார். இப்படியே மற்ற பதினோரு பேருக்கும் சொல்லி வர அதற்குள் பாஸ்கர் காலை கீழே வைத்திருந்தான். எனக்கு கால் தொடைப் பகுதி வலித்த போதும் "வெரிகுட்" சொல்லிட்டாரே என்ற காரணத்தால் பொறுத்துக் கொண்டு நின்றேன். காலை கீழே வைத்து விட்ட பாஸ்கரை "டேய் காலை தூக்கு. இது கூட பண்ண முடியலேன்னா உன்னால எப்படி கராத்தே கத்துக்க முடியும் என்று கடிந்து கொண்டார். மாஸ்டரின் செயல் பிடிக்காததால் பாஸ்கர் பேக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

                             ஓரிரு வாரங்கள் கராத்தே கற்றுக் கொண்டதும் ஒரு புது தன்னம்பிக்கை பிறந்தது. ஒவ்வொரு முறை கிக் செய்யும் போதும், பஞ்ச் கொடுக்கும் போதும் மனசுக்குள் ஜாக்கி ஜான் போல் உருவகப் படுத்திக் கொண்ட போது இன்னும் ஈடுபாட்டுடன் செய்ய முடிந்தது. அப்போது ஒரு வெள்ளிக் கிழமை மாலை கல்லூரியை விட்டு கிளம்பிய போது ரமா  "ஆனந்த்"  என்றபடி என்னை நோக்கி ஓடி வந்தாள்..

(தொடரும்)





21 comments:

  1. Hayaayyyo! Anand-kku Karate Theriyuma? konjam thalliye ninnu pazhaganumppa!

    ReplyDelete
    Replies
    1. மின்னலே படத்துல ஐ.ஜி. ய தெரியும்னு விவேக் சொல்வாரே.. அது போல எனக்கும் கராத்தே தெரியும்.

      கதை சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடி நீங்களா முடிவு பண்ணிகிட்டா எப்படி வாத்தியாரே??

      Delete
  2. ஆக அடுத்த பகிர்வில் சண்டைக் காட்சியை எதிர்ப்பார்க்கலாம்...?

    ReplyDelete
    Replies
    1. ஆக்ஷன் வேணுங்கறீங்க..

      Delete
  3. ரமா "ஆனந்த்" என்றபடி என்னை நோக்கி ஓடி வந்தாள்..
    ///
    அடுத்து ஃபைட் தானே மச்சி...

    ReplyDelete
    Replies
    1. மச்சி நம்ம பய சாது. வம்புச் சண்டைக்கு போக மாட்டான்.

      Delete
    2. அப்புறம் இந்த பதிவுல மொதல்ல வர்றது பிரபல பதிவர் ஜீவான்னு சொல்ல மளந்துட்டேன்.

      Delete
  4. பழைய நியாபகங்களைக் கூட இப்போது நடந்தது போல் விவரித்து சொல்றீங்க, எல்லாரும் முடிக்கும் பொது ஒரு சஸ்பன்சொட முடிச்சி எங்கள தூங்க விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிடீங்க

    ReplyDelete
    Replies
    1. காலைலயே என்ன தூக்கம் சீனு??

      Delete
  5. கதையே இல்லாட்டியும் ஹரி படம் எப்புடி இன்ட்ரஸ்டிங்கா இருக்குமோ அதே மாதிரி இந்த பதிவும் வாசிக்குறதுக்கு ரெம்ப இன்ட்ரஸ்டிங்கா நல்லாருக்குங்க . சூப்பர் ...!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி வருகைக்கும், பதிவை ரசித்ததற்கும்

      Delete
  6. தொடர் கதை சுவாரசியமாக செல்கிறது...தொடர் கதைக்கு உரிய அம்சத்துடன் பயணிக்கிறது உங்கள் எழுத்துக்கள்..படிக்கும் போது சூழ்நிலையை கண்முன் கொண்டு வருகிறீர்கள்.பொருத்தமான படங்கள். இன்னும்..ம்ம்ம் சொல்லிக்கொண்டே போகலாம்...

    ReplyDelete
    Replies
    1. படங்கள் நேரம் எடுத்து தேர்வு செய்தது உண்மைதான்.. அதை கவனித்து பின்னூட்டமிட்ட உங்களுக்கு ஒரு "ஓ"..

      Delete
  7. சுவாரஸ்யம்+ ஆர்வம் அதிகரிக்க வைக்கிறது! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  8. அடுத்த பதிவில் ROMANCE எதிர்பார்க்கலாமா???? ;-)

    ReplyDelete
    Replies
    1. அது இல்லாமலா.. கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் ரொமேன்ஸ் - இதுதானே விஜய் பார்முலா..

      Delete
  9. ஆவி உங்க favourite ஹீரோ விஜயகாந்தா ?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இல்லீங்க.. ரமாவுக்கு தான் ரொம்ப பிடிக்கும்..

      Delete
  10. காதலோடு கராத்தேவுமா ?

    ReplyDelete
    Replies
    1. காதலே ஒரு வகையில் கராத்தே தானே?

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...