ஹிந்தி டெல்லி பெல்லி தமிழ்க் கலாச்சாரத்துடன் சேட்டையாகி இருக்கிறது. கண்ணன் சார் ரீமேக்க விட்டு வெளியே வாங்க.. ஹிந்தியில் படத்தை பார்த்தவர்கள் அந்த அளவுக்கு இல்லை என்று சொல்லப்போவது உறுதி.. காரணம் அந்தப் படம் புகழ் பெற காரணமாயிருந்த சில முக்க்க்க்கிய காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கென நீக்கியது தான்.. இருந்தாலும் குடும்பத்துடன் சென்றால் மூட்டைப் பூச்சி இல்லாவிட்டாலும் கொஞ்சம் நெளிய வேண்டி இருக்கும்..
சரி, கதைக்கு வருவோம்.. 'ஒல்லி பெல்லி' இலியானாவின் பெயரில் தெருவோரக் கடையில் அசுத்தமான சூழலில் விற்கப்படும் சிக்கன் லெக் பீஸை வாங்கி உண்ணும் "காமெடி சூப்பர் ஸ்டார்" (அப்படிதான் டைட்டில்ல போடுறாங்க) சந்தானத்தின் பெல்லியில் நடக்கும் சேட்டைகளால் எப்படி சந்தானம், ஆர்யா மற்றும் பிரேம்ஜி ஒரு கடத்தல் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கரு.. ஹீரோ ஆர்யாவுக்கு கூட இன்ட்ரோ சாங்கோ, அதிரடி அறிமுகமோ இல்லை.. ஆனால் சந்தானத்திற்கு எல்லாம் உண்டு. படத்தின் பெரும்பகுதி அவரைச் சுற்றியே நடக்கிறது. ஆர்யா ரொமேன்சிற்கும், ஹீரோ வேல்யுவிற்க்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்..
ஆர்யாவின் கேர்ள் பிரண்டாக ஹன்சிகா.. ஆர்யாவை ஒரு தலையாய் காதலிக்கவும், கடைசி காட்சிக்காகவும் அஞ்சலி.. போன படத்தில் குண்டா குஷ்பு மாதிரி இருந்த ஹன்சிகா சிக்குன்னு ஸ்லிம்ரன் மாதிரி ஆகிவிட்டார்.. நாசர் அதிகம் பேசாமல் அரங்கை அதிர வைக்கிறார்.. அதுவும் வைரக்கற்கள் என நினைத்து ஒரு டப்பாவை திறக்க, அதில் சந்தானத்தின் "ஸ்பெஷல் சேம்பிள்" இருப்பது கண்டு பொருமும் போது கலகல..
சிறிது நேரம் வந்தாலும் ஹவுஸ் ஓனர் ஆலி (தெலுங்கு காமெடியன்), ஷாயாஜி ஷிண்டே மற்றும் சித்ரா லட்சுமணன் (அவர் பேர மங்கூஸ் மண்டயன்னே மாத்தீட்டாங்க).. ஒவ்வொருவரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கும் காமெடி என்றாலும் ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்ட தவறவில்லை.. அதிலும் சந்தானம் படம் நெடுக "மூக்கின் மேல்" விரல் வைக்க வைக்கிறார்..
தமனின் இசையில் இரண்டு பாடல்கள், பரவாயில்லை.. பின்னணி இசை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.. பிரேம்ஜிக்கு சோலோ சாங் எல்லாம் தேவையா.. (அதுக்கு சந்தானத்திற்கு கொடுத்திருக்கலாம்).. சந்தானம் கனவு காணும் முதல் பாடலுக்கு நீது சந்திரா நடனமாடியுள்ளார்.. மொத்தத்தில் கவலைகளை மறந்து சிரித்துவிட்டு வரலாம்.. சேட்டை - செம்ம ரகளை..
63 / 100
அட.சுடச்சுட.
ReplyDeleteகில்மா படம் ஒண்ணு ரிலீஸ் ஆச்சே..அது நாளைக்கா.?
ReplyDeleteஎன்னங்க மார்க் ரொம்ப நிறைய கொடுத்திருக்கீங்க.....
ReplyDeleteபிரேம்ஜிக்கு சோலோ சாங்...!? அப்போ ரகளை தான்...
ReplyDeleteவிமர்சனத்திற்கு நன்றி...
கோவை நேரம்- மச்சி ஏதோ, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்னாலான சேவை..
ReplyDeleteஅதென்ன "KILL MA" படம்.. ஆக்க்ஷன் படமா??
என் ரேட்டிங்கில ஐம்பது தான் பாஸ்மார்க்.. இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்..
ReplyDeleteதனபாலன்- அந்த ஒரு இம்சை மட்டும் தான் தாங்க முடியல.. மத்தபடி படம் நல்லா இருக்கு..
ReplyDelete//மூட்டைப் பூச்சி இல்லாவிட்டாலும் கொஞ்சம் நெளிய வேண்டி இருக்கும்..// ஹா ஹா ஹா
ReplyDelete// "காமெடி சூப்பர் ஸ்டார்"// அட ஆண்டவா இது உனக்கே அடுக்குமா
ஆனாலும் இந்தப் படத்த தியேட்டர்ல பொய் பாக்குற ஐடியால இல்ல சார்..
பின்னூட்டத்தில்முக்கிய குறிப்பு :-)
உங்கள விட ரொம்ப போடி பையன் நானு , என்ன சார்ன்னு லா கூப்டாதீங்க... சீனுன்னு கூப்டுங்க போதும் டாட் :-)
அப்படியே ஆகட்டும் சீனு.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Delete//அதென்ன "KILL MA" படம்.. ஆக்க்ஷன் படமா??// haa haa haa
ReplyDeleteஇந்தப் படம் தியேட்டர்ல பாக்கற உத்தேசம் எனக்கு இல்ல. அந்த பிரேம்ஜி மூஞ்சைப் பாத்தாலே எனக்குப் பிடிக்காது (கரப்பான்பூச்சி மண்டையன்). டிவில போடுறப்ப பாத்துக்கறேன்... அதுசரி... எப்படிய்யா இப்படி உடனே படத்தப் பாத்துட்டு சுடச்சுட விமர்சனம் எழுத முடியுது? மேல... ஐ மீன் மே மாசத்தல கோவை வர்றப்ப ட்யூஷன் எடுத்துக்க உத்தேசம்!
ReplyDeleteஆமா ஸார்.. பிரேம்ஜி வர்ற காட்சி எல்லாம் மொக்கைதான்.. கோவைக்கு வர்றீங்களா, வாங்க வாங்க..
Deleteஅப்ப நாளைக்கு ரகளை தான்..
ReplyDeleteஎங்க கோவைலையா இல்லே பொள்ளாச்சில யா??
Deleteகோவைல தான்... இனி பொள்ளாச்சி பக்கம் போக ரொம்ப நாள் ஆகும்.. ;-)
Deleteம்ம்..என்சாய்..
Deleteகொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத தமிழ்ப்படங்களில் இதுவும் ஒன்று...
ReplyDeleteஎன்ன நண்பா இப்படி சொல்லீட்டீங்க? தமிழ் சினிமால லாஜிக் பாக்கறீங்களா? இந்த படத்துல குறைவான லாஜிக் மீறல்களே உள்ளது.. :-)
Delete@கோவை ஆவி: அண்ணாச்சி படம் பார்த்தேன், வயிறு குலுங்க மட்டும் அல்ல கொஞ்சம் கலக்கியும் விட்டது:-)
ReplyDeleteசந்தானத்தின் பெயர் நடு பக்க நக்கி. பெயர்களை எங்கே கண்டுபிடிகிறார்கள் என்று தெரியவில்லை :-)
வருகைக்கு நன்றி நண்பரே!!
Delete