Wednesday, April 24, 2013

ஐ.பி.எல் 6- முதல் சுற்றின் முடிவில்...


                                  இந்த வருட ஐ.பி.எல் ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பல கடைசி பந்து மேட்சுகளும் , சில சூப்பர் ஓவர் மேட்சுகளும் நடந்து முடிந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியின் வெற்றிக்கென ஓடி ஓடி உழைப்பது தெரிகிறது. இதோ எல்லா அணிகளும் கிட்டத்தட்ட முதல் சுற்றை  முடித்து விட்ட நிலையில் அணிகளின் நிலையையும், சாதனை வீரர்களையும் பார்ப்போம்..
                    

அணி
போ
வெ
தோ
புள்ளி
ர.வி
RCB
8
6
2
12
1.254
CSK
7
5
2
10
0.648
SRH
7
5
2
10
-0.104
RR
7
4
3
8
0.588
KXIP
7
4
3
8
0.343
MI
6
3
3
6
-0.194
KKR
6
2
4
4
0.021
PW
8
2
6
4
-1.467
DD
8
1
7
2
-0.954

                       பட்டியலின் கடைசியில் இருக்கும் அணி டெல்லி.. மும்பையுடன் விளையாடிய ஒரே ஒரு போட்டியில் மட்டும் வீரு  வீறு கொண்டு எழுந்தாலும் மற்ற போட்டிகளில் சேவாக், ஜெயவர்தனே, வாண்டமேர்வ், வார்னர்  நெஹ்ரா மற்றும் மோர்னே மார்கல் போன்ற சிறந்த வீரர்கள் சோபிக்காததே காரணம். இனிவரும் எல்லா போட்டிகளிலும் ஜெயித்தாலும் இவர்கள் ப்ளே -ஆப் சுற்றுக்கு வருவது கடினம். ஆனால் இவர்கள் ஒன்றிரண்டு போட்டிகளில் ஜெயிப்பத்தின் மூலம் மற்ற அணிகளின் விதியை தீர்மானிக்கலாம்.

                       புனே வாரியர்ஸ் அணி நான்கு புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் உள்ளது. பெங்களூரு அணி நிகழ்த்திய அந்த கொடூரத்தை மறந்துவிட்டு போராடினால் மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்கலாம். 

                        கொல்கத்தா சிறப்பாக துவங்கி பின் மரண அடிகளை வாங்கி கொஞ்சம் பின்தங்கி இருக்கிறது.  சுனில் நரேன் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. யூசுப் பதான் மற்றும் கம்பீர் அதிரடி காட்டினால் கொஞ்சம் முன்னுக்கு வரலாம்.

                        மும்பை அணியின் ஒவ்வொரு வீரர்களும் நட்சத்திர வீரர்களே, ஆயினும் ஆறாவது இடத்தில் இருப்பதற்கு காரணம் முதியோர்களை அணியில் வைத்துக் கொண்டு, எத்தனை தினேஷ் கார்த்திக் போலார்டு மற்றும் ரோஹித் சர்மா வந்தாலும் இவர்கள் மேலே வருவது கடினம் என்றே தோன்றுகிறது. ப்ளே -ஆப் வாய்ப்புகளை கஷ்டப்பட்டு தான் பெற வேண்டும்.

                          ஆச்சர்யம் ஆனால் உண்மை. கில்கிறிஸ்ட் தவிர பெரிய தலைகள் அதிகமில்லாமல் நல்ல முன்னேற்றம் காட்டியுள்ளது ப்ரீத்தி ஜிந்தாவின் கிங்க்ஸ் 11 படை. இவர்கள் இதே போல் விளையாடினால் மற்றவர்களை விட மேல வர முடியும்.

                           ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வழக்கம் போல் மிதமான வேகத்தில் மேலே வருகிறது. ஷேன் வாட்சன், டிராவிட் , ரகானே தொடர்ந்து அசத்தி வருகிறார்கள். ப்ளே -ஆப் வாய்ப்புகள் அதிகம் உள்ளது இந்த அணிக்கு. 


                          சன்  குழுமத்தின் அணி சர சரவென மேலே சென்ற போதும் இவர்கள் பேட்டிங் பிரமாதமாக இல்லை. பந்துவீச்சு சிறப்பு.. பீல்டிங்கும் ஒகே.. மும்பைக்கும் இவர்களுக்கும் ப்ளே- ஆப்பில் நுழைய கடும் போட்டி இருக்கும்.

                           இரண்டாமிடத்தில் சூப்பர் கிங்ஸ். ஒவ்வொரு ஐ.பி.எல்லிலும் தடுமாற்றத்துடன் தொடங்கி பலம் பெறுவது இவர்கள் வாடிக்கை. இந்த முறை சில வெற்றிகளை குவித்த போதும் எந்த வெற்றியும் எளிதில் கிட்டவில்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்த வெற்றிகள் அவை.. நல்ல விஷயம் ஒவ்வொரு போட்டியில் ஒவ்வொரு வீரர்கள் அசத்தி வருவது. கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புகள் உள்ளது.                           முதலிடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதல் சில போட்டிகளில் கொஞ்சம் தடுமாறினாலும் பின் சுதாரித்து இந்த ஐ.பி.எல் லின் சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது.. அதிரடி என்ற சொல்லுக்கு கெய்ல் என்று அர்த்தம் உள்ளதோ என்ற ஐயம் வருமளவிற்கு இவர் அடித்த 175 ரன்களை இன்னும் பல வருடங்கள் பேசும் இவ்வையகம். உடன் கோஹ்லி, டிவில்லியர்ஸ், சௌரப் திவாரி பேட்டிங்கில் அசத்த பந்து வீச்சிலும் அசத்தி வருகிறார்கள். சென்னை மட்டுமே இவர்களுக்கு கோப்பை வெல்ல பெரும் சவாலாக இருக்கும் என்ற போதும் இனி வரும் போட்டிகளிலும்  இதே ஜோருடன் ஆடி ஜெயிக்க வேண்டும்.. 

                                             

8 comments:

 1. ~முதியோர்களும்~ "வீறு" கொண்டு எழுந்தால் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. ஓ.. நீங்க சீனியர் சப்போர்டரா.. நீங்களா நாங்களான்னு பார்த்துடலாம் DD..

   Delete
 2. யப்பா... கெய்ல் அடித்த அந்த 175 ரன்கள் இந்த சீரிஸில் அந்த அணி கப் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும் பேச வைத்துக் கொண்டிருக்கும். மேட்ச் முடி்ந்ததும் எதிரணி வீரர்கள், ‘‘ஒரே ஒருத்தன் ரெண்டு நேரம் மூச்சுத் திணறத் திணற ஓடவிட்டு எங்கள‌ை அடிச்சான்மா’’ என்று புலம்பியதாகக் கேள்வி! ஹா...! ஹா..!

  இதையே வேற மாதிரி சொல்றதுன்னா... ‘இந்த கெயில் சரியான சோம்பேறிய்யா! ஒண்ணு, ரெண்டு ரன்னா ஓடி எடுக்கறதுக்கு சோம்பல் பட்டுக்கிட்டு ஒடம்பு வணங்காம நாலும் ஆறுமா அடிச்சுத் தள்ளுறான். இவனைப் போயி எல்லாரும் புகழறாங்களே...’ என்றும் எதிரணி வீரர்கள் புலம்பியிருக்கக் கூடும்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. கலக்கல் சார்.

   உண்மைதான் சார்.. அடியா அது.. இடி மாதிரியில்லே விழுந்தது.. பீல்டிங் நிறுத்தினது சரியில்லே.. ஸ்டேடியத்தின் கூரையிலே ரெண்டு பேர நிறுத்தியிருந்தா முன்னாடியே அவுட் பண்ணியிருக்கலாமில்லே..

   Delete
 3. அது சரிய்யா அப்பாடக்கரே..! கமெண்ட் பாக்ஸ்க்கு கீழே ‘இதுவும் பிடிக்கும் படிங்க’ன்னு எழுதிப் போட்டிருக்கீங்க. கீழ எதையும் காணமே! எதுவும் பிடிக்கும் எங்களுக்கு? (கேட்டா கோச்சுக்கப் போறீங்களோன்னுதான் இத்தன நாள் கேக்கல)

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி.. ஒரு சின்ன ஓட்டை.. கண்டுபிடிச்சு சொன்னதுக்கு நன்றி.. சரி பண்ணிடறேன்..

   Delete
 4. RCB கோப்பயை அடிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. கெய்ல் வாழ்க...!

  ReplyDelete
  Replies
  1. என்னாச்சு தம்பி, KKR சப்போர்ட் பண்ணலையா இப்போ??

   Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...