கல்லூரி கலாட்டாக்கள், இளைஞர்களின் காதல், நட்பு என முதல் பாதி முழுக்க குறும்பு பட சாயல் இருக்க, காதலில் ஜெயித்த ஹீரோ பாடங்களில் கோட்டை விட, காதலியோ கல்லூரியிலேயே முதல் மாணவியாய் வந்து மேல்படிப்புக்கு அமெரிக்கா செல்கிறார்.. சரி அத்துடன் காதல் முடிந்தது என்று பார்த்தால் மூன்றே மாதத்தில் அங்கிருந்து திரும்பி வரும் காதலி தான் கர்ப்பம் என்றும் அதற்கு காரணம் ஹீரோ தான் என்று கூறி அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். பின் மூன்று வருடங்கள் கழித்து பொறுப்பில்லாமல் சுற்றும் ஹீரோ தன் குழந்தையின் தந்தை தானல்ல, மகேஷ் என்று தெரிந்து கொண்டு அந்த மகேஷை தேடி அலைகிறான்.. அந்த மகேஷ் கிடைத்தானா.. அவனுக்கும் தன் மனைவிக்கும் என்ன சம்பந்தம் என்று கண்டுபிடிப்பதே கதை.
மூன்று நிமிடம் ஓடிய ட்ரைலரில் இருந்த சுவாரஸ்யம் படத்தில் இல்லை. இருப்பினும் ஜெகனின் ஒன் லைனர்களும் உடல் மொழியும் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.. கல்லூரியில் நடக்கும் கதையாக இருந்தாலே ஒரு ஆண் புரோபாசரையும், லேடி புரோபாசரையும் வைத்து பின்னப்படும் மொக்கை காமெடிகள் இதிலும் உண்டு. அளவுக்கு அதிகமான இடங்களில் இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாச பஞ்ச் டயலாக்குகளும் இளைஞர்களை (?!!) கவர்வதற்காகவே வைக்கப்பட்டுள்ளது.
கதாநாயகன் சந்தீப் நிறைவான அறிமுகம். ஜெகனின் காமெடிகளுக்கு சப்போர்ட் கொடுத்து தன் கேரக்டரை நிலைநிறுத்துகிறார். நாயகி டிம்பிள் கொடுத்த (?!!) வேடத்தை தாராளமாக செய்திருக்கிறார். இயக்குனர் மக்களிடம் கைதட்டல் வாங்குவதற்காகவே சில காட்சிகளை புகுத்தியிருப்பது தெரிகிறது.. உதாரணத்துக்கு நாயகன் கார் ஓட்டும் போது முன்னால் வந்து விழும் குடிகாரனின் காட்சி முடிந்த பின்னும் "குடிகாரனும் கொழந்தையும் ஒண்ணு" என்று டயலாக் பேசி செல்வதெல்லாம் டூ மச்.
கோபி சுந்தரின் இசை இரைச்சல் இல்லை.. ஆனாலும் "ஏமாத்திட்டா" பாடலைத் தவிர வேறேதும் மனதில் நிற்கவில்லை. இயக்குனர் கிளைமாக்சில் கொடுக்க நினைக்கும் ட்விஸ்ட் ஆவின் பாலில் முக்கியெடுத்த பப்படமாய் போகிறது. வாழ்க்கையில் செம்ம போர் அடிக்கும் ஒரு மட்ட மத்தியானத்தில் போனால் போகிறதென்று இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
30 / 100
\ \\\\
ரிஜெக்டட்....
ReplyDeleteWorst..
Deleteவேதனையை அனுபவித்து, எங்களையெல்லாம் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி !
ReplyDeleteதயவு செய்து போயிடாதீங்க..
Deleteசமீபத்துல ஒரு விஷப் பரீட்சை பண்ணி சூடு பட்ருக்கோம். அடு்தத விஷப் பரீட்சை கொஞ்ச காலம் கழிச்சுத்தான்! அதனால நானும் இந்தப் படத்தை ரிஜெக்ட் பண்றேன் யுவர் ஹானர் ஆவி!
ReplyDelete