Wednesday, May 1, 2013

கிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்!!

               

                               கிறிஸ்டோபர் நோலனுக்கும் நலன் குமாரசாமிக்கும் என்ன சம்பந்தம்னு பார்கறீங்களா.. கிறிஸ்டோபர் நோலன் என் மனம் கவர்ந்த ஹாலிவுட் இயக்குனர். இவருடைய முதல் படமான "Following", பெரிய நட்சத்திர வேல்யு இல்லாத நடிகர்களை வைத்து, தன் கதையின் மீது தான் கொண்ட அபரிமிதமான நம்பிக்கையின் காரணம் வெறும் ஆறாயிரம் டாலரில்  அற்புதமாக எடுத்திருந்தார்.. பெரிய வசூல் இல்லாவிட்டாலும் (ஐம்பதாயிரம் டாலர் வரை சம்பாதித்தது) இந்தப் படத்தின் மூலம் ஹாலிவுட்டின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர். இவரே தயாரித்த இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு இதை கதை திரைக்கதை எழுதி இயக்கியதோடு ஒளிப்பதிவு செய்ததும் இவரே.



                                இதற்குப் பிறகு இவர் எடுத்த மேமேன்ட்டோ (நம்ம ஊர் கஜினி) படத்தில் இவருடைய பின்னோக்கி கதை சொல்லும் யுத்தி பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படமும் வசூலில் மகசூல் செய்யவில்லை என்றாலும் உலகத்திற்கு தன்னை ஒரு சிறந்த இயக்குனராய் தன்னை நிரூபிக்க உதவியது இந்தப் படம். இதன் பிறகு இவர் எடுத்த இன்சோம்னியா, தி ப்ரெஸ்டீஜ்  படங்கள் வித்தியாசமான திரைப்படங்களை விரும்பியவர்களுக்கு விருந்தாய் அமைந்தது.


     
                               பின்னர் வெளிவந்த பேட்மேன் பிகின்ஸ், சூப்பர் ஹீரோ ரசிகர்களை இவரை பின்பற்றும்படி செய்தது. இதன் தொடர்ச்சியாக வந்த டார்க் நைட் அவதாருக்குப் பின் அதிக வசூல் செய்த படமாக இன்றளவும் உள்ளது. இவருடைய இன்செப்ஷன் திரைப்படம் ஆஸ்கார் அரங்கில் பல பிரிவுகளில் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே..  சரி இவருக்கும் நம்ம நலன் குமாரசாமிக்கும் என்ன சம்பந்தம்.. இருவரும் நல்ல உலக சினிமா படைச்ச இயக்குனர்கள். முதல் படத்திலேயே என் மனம் கவர்ந்த இயக்குனர்கள்.


                               நாளைய இயக்குனர் எனும் தனியார் தொலைக்காட்சி இயக்குனர் தேடலில் கிடைத்த ஓர் உலக சினிமா இயக்குனர். தமிழில் என்றில்லை, உலகிலேயே இனி புதிதாய் சொல்வதற்கு என்று ஒரு கதை இருப்பதாய்  எனக்கு தோன்றவில்லை.. தான் சொல்ல வந்த கருத்தை/கதையை மக்கள் மனம் உணர்ந்து அவர்கள் ரசிக்கும் வண்ணம் படைக்கும் திறமை ஒரு சிலரிடமே காண்கிறோம். அந்த வகையில் நலன் வெற்றி பெறுகிறார்.



                            இவரும் நோலனைப் போலவே அதிகம் பிரபலமாகாத விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரை வைத்து இயக்கியிருக்கும் "சூது கவ்வும்" படம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஒரு முழு நீள எண்டர்டெய்னர்.. விறுவிறு க்ரைம் கதையில் காமெடி கலந்து கலக்கியிருக்கிறார் இயக்குனர். இனிவரும் படங்களில் முத்திரை பதிப்பார் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்..




14 comments:

  1. என்னது அதிகம் பிரபலமில்லாத விஐய் சேதுபதி///
    அவரு ஏற்கனவே பீட்சா, ந.கொ.ப. கா. ல ஹிட் ஹீரோ..
    படம் ரொம்ப அருமை..

    ReplyDelete
    Replies
    1. மச்சி.. ரெண்டு படம் ஹிட்டுன்னாலும் மக்கள் மத்தியில இன்னும் அவ்வளவு பிரபலம் ஆகலையே.. அத சொன்னேன்.. மற்றபடி எனக்கும் விஜய் சேதுபதி பிடிக்கும்..

      Delete
  2. சரி .விமர்சனம் எங்க.?மார்க் எங்க

    ReplyDelete
  3. சூது கவ்வும் - மனதை கவ்வும் ?!

    ReplyDelete
    Replies
    1. சும்மா ஜாலியா பார்க்கலாம்.. படத்தின் துவக்கத்தில் வர்ற முகேஷ் சொல்ற கருத்து தவிர வேறெந்த கருத்தும் சொல்லல இந்த படத்துல..

      Delete
  4. நோலன் நலன் கலக்கீட்டீங்க !

    ReplyDelete
    Replies
    1. அது எதேச்சையா அமைஞ்ச ஒரு பெயர் ஒற்றுமை.. நம்புங்க..

      Delete
  5. வித்தியாசமான முறையில் ஒரு இயக்குனர் அறிமுகம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. சிறப்பான பதிவு! நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்கள்! படத்தைப்பார்க்கலாம் என்ற எண்ண‌ம் வந்து விட்டது!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க.. நல்லா சிரிச்சுட்டு வரலாம்..

      Delete
  7. புதுப் புது அறிமுகங்கள். நான் நாளைய இயக்குனரை மிகவும் ரசித்துப் பார்ப்பேன்.
    மிக நன்றி ஆனந்த விஜயராகவன்.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...