சொந்த அலுவல் காரணமாக கேரளா வரை சென்று திரும்பிய அலுப்பில் ( கேரளாவின் உள்ளூர் சாலைகள் இன்னும் மேம்படுத்தப் படாமலே இருக்கிறது.) காலை எட்டரை மணி வரை நன்றாக உறங்கிவிட்டேன். தீடீரென்று திங்கட்கிழமை "மின்னல்வரிகள்" பாலகணேஷ் அவர்கள் அழைத்து ஞாற்றுக்கிழமை கோவையில் சிந்திப்போம் என்று கூறியது நினைவுக்கு வர மொபைலை எடுத்து அவரை அழைத்தேன். மதியம் சந்திப்பதற்கு ஒரு அப்பாயின்மென்ட் வாங்கிவிட்டு மற்ற காரியங்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
ஒன்றரை மணியளவில் பாலகணேஷ் சாரை சந்திப்பதற்காக நானும் அனாமிக்காவும் பயணமானோம். சிவானந்தாகாலனி பஸ் ஸ்டாப்பில் வைத்து அவரையும் பிக்கப் செய்து கொண்டு புரூக்பீல்ட்ஸ் மாலுக்கு பயணமானோம். ( வெளியூரிலிருந்து வரும் எல்லோரையும் நேராக இங்கே அழைத்து வருவது வாடிக்கையாகிவிட்டது). சென்றமுறை பாலகணேஷ் சாரை முதல் முறையாக பார்த்தபோது எங்களுக்குள் நிகழ்ந்த அதிகபட்ச உரையாடலே "ஹாய்" என்பதாக இருந்தது. இந்தமுறை அவரின் எழுத்துக்களின் ரசிகன் என்ற முறையில் நிறைய பேச முடிந்தது. அவருக்கும் என் எழுத்துக்கள் பிடித்தது என் பாக்கியம்..
மாலுக்கு செல்லும் வழியிலேயே "உலக சினிமா ரசிகன்" பாஸ்கரன் சாரையும் அழைத்து மாலுக்கு வருமாறு அன்புக்கட்டளை விடுத்தோம். அனாமிக்காவை பார்க்கிங்கில் விட்டுவிட்டு நாங்கள் மட்டும் புட்கோர்ட்டிற்கு சென்றோம். அங்கே KFC இல் ஒரு சிக்கன் பர்கரை வாங்கிக் கொண்டபோது தான் கூட்டம் கரைபுரண்டோடியதை காண முடிந்தது. வெவ்வேறு வயதுகளில் பெண்களும், அம்மணிகளுமாய் ( மீட்டிங்கில் கொவைநேரம் ஜீவா மிஸ்ஸாயிருந்ததை உணர முடிந்தது) எதிரில் தென்பட அவர்களை கண்டுகொள்ளாமல் நாங்கள் பேச ஆரம்பித்தோம். (நம்புங்க!!)
சற்று நேரத்தில் பாஸ்கரன் சாரும் வந்துவிட சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பல்வேறு விஷயங்கள் பேசினாலும் மூவருக்கும் பொதுவாக சினிமா விஷயங்களே அதிகம் பேசப்பட்டது. ( ஆவியின் கருத்துக் கணிப்பில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டோர் உலகில் எங்கு சந்தித்துக் கொண்டாலும் அவர்கள் பெரும்பாலும் விவாதிப்பது அரசியல்,சினிமா அல்லது இசை பற்றித்தான்.)
அதற்குப் பிறகு ஒரு சினிமாவிற்கு செல்லலாம் என்பது என் திட்டமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன் பார்த்த திருமதி தமிழ் என்ற உலக சினிமாவின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளாததால் பாலகணேஷ் சார் அன்புடன் அதை மறுத்துவிட்டார்.
பின் அவரை மீண்டும் சிவானந்தா காலனியில் விட்டுவிட்டு பின் "கோணங்கள் பிலிம் சொசைட்டி" திரையிட்ட "அமோர்" எனும் பிரெஞ்சு மொழி படம் பார்க்க சென்றோம். (படத்தின் விமர்சனத்தை விரைவில் ஆவி டாக்கீஸில் எதிர்பார்க்கலாம்) படம் முடிந்து நேராக "தி வில்லேஜ்" எனும் ரெஸ்டாரெண்ட்டில் இரவு உணவை முடித்துவிட்டு இரவு பத்து மணிக்கு அனாமிகாவும் நானும் வீடு வந்து சேர்ந்தபோது ஒரு நாளை பயனுள்ளதாய் (?!!) செலவு செய்த திருப்தி மனதிற்குள்!!
இனிய சந்திப்பு...
ReplyDeleteஅம்மணி என்றாலே ஜீவா அவர்களின் ஞாபகம் வந்து விடுகிறது...!
மின்னல் சார் : இன்னுமா மீளவில்லை...
ஜீவா, உன் ராசி என்ன கன்னி ராசியோ??
Deleteஆமா D.D. இன்னும் அலைச்சல், வேலைப்பளுவிலருந்து நான் மீளாமத்தான் இருக்கேன். வர்ற ஞாயிறுக்கப்புறம் ஃப்ரீயாயிடுவேன்னு நம்பறேனுங்கோ! மிக்க நன்றி நண்பா!
Deleteசந்திப்பு பற்றிப் படிக்க மிகுந்த சுவாரசியமாக இருந்தது!
ReplyDeleteநன்றிங்க..
Deleteஉங்க காருக்கு செல்லப்பெயர் அனாமிகாவா!
ReplyDeleteசொல்லவேயில்லையே !
அருமையான பெயர்.
அனாமிகா அழகாகவும் இருக்கிறாள்.
ஜீவா வந்ததும் ஒரு டூர் புரோகிராம் போடுங்கள்.
என்னை விட்டுட்டீங்களே மூவரும்..
ReplyDeleteஎனக்கும் நீங்க இல்லாதது ரொம்பவே குறைதான் ஜீவா. நிச்சயம் வரும் மாதம் கோவை விசிட் மீண்டும் அடிச்சுடறேன்பா!
Deleteமாப்பு நீதான் ஊர்ல இல்லையே..
Deleteகோவை ஆவி எங்களையெல்லாம் மறந்துட்டீங்க.... அது சரி பால கணேஷ் சார் எப்படி இருக்கார்... பாஸ்கரன் சாரைப் பார்த்தும் ரொம்ப நாளாயிடுச்சு.... இரண்டு பேருக்கும் என் விசாரிப்புகளை தெரிவித்து விடுங்கள்..
ReplyDeleteசுவையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஅனாமிக்கா பற்றி ஒரு தனி பதிவை எதிர்பார்த்தேன்....
ReplyDeleteஆனந்து...! எழுத்தை ரசிச்சு அன்பாப் பழகற உங்க மாதிரி நண்பர்கள் அமையறது அதிர்ஷ்டம்தான்யா! கோவையில நான் பார்த்த அந்த அழகான... மாலும் (ஹி... ஹி...) உரையாடிய பொழுதுகளும் நினைவிலிருந்து நீங்காது. அப்புறம்... உங்க அனாமிகா மனசைக் கொள்ளையடிச்சுட்டா போங்க... நிச்சயம் மீண்டும் ஒரு முறை கோவை வரத்தான் வேணும்!
ReplyDeleteவாத்தியாரே. நல்ல அனுபவம் அது. நிச்சயம் மீண்டும் வாங்க..
Deleteசுவாரசியமான எழுத்து நடை கைவர பெற்று இருக்கிறது ஆவிக்கு ஜீவாவோடு அதிகமாக சுத்தியதால் ஏற்பட்ட தாக்கத்தை பார்க்க முடிந்தது எழுத்தில் மேலும் கருத்து கணிப்பு வரவேற்க்கபடுகிறது ..........இன்னும் உங்கள் எழுத்து மெருகேற வாழ்த்துக்கள் நான் இந்த சந்திப்புக்கு வர முடியாத வருத்ததோடு இதை எழுதுகிறேன்
ReplyDeleteநன்றி சரளா.
Deleteஎன்ன கொடுமை ஜீவா இது.
அனாமிகா என்றதும் எங்களுக்குள் பல்வேறு சிந்தனைகள் தட்டி எழுப்பட்டது நல்ல வேலை பாஸ்கர் சார் அந்த அனாமிகா கார் என்று சொல்லி தெளிவு படுத்தினார் ..........எங்களுகெல்லாம் புது சார் வாங்கினதுக்கு ட்ரீட் இல்லையா ?
ReplyDeleteமே 24 மாலை குடும்பத்தோட வாங்க.. ட்ரீட் கோடுக்கறேன்.
Deleteபாத்தீங்களா சரளா.. நம்மளையெல்லாம் விட்டுட்டு கலக்கியிருக்காங்க..போனாப்போகுது அனாமிகா வீட்டுக்கு வந்ததுக்கு ட்ரீட் வெச்சுடுங்க....
ReplyDeleteஎழில் மேடம், மே 24 மாலை குடும்பத்தோட வாங்க.. ட்ரீட் கோடுக்கறேன்.
Deleteநன்றி..
ReplyDeleteகோணங்கள் அமோர் இரண்டும் ஆவலைக் கிளப்பி விடுகின்றன. சுவாரசியமான பேச்சு, சுகமான பொழுதுபோக்கு. ப்ருக்பீல்டின் படங்கள் சில சேர்த்திருக்கலாமே?
ReplyDeleteகலந்துரையாடியதிலிருந்து கொஞ்சம் ஷேர் செய்திருக்கலாமே.....!!! :))
ReplyDelete