Wednesday, May 8, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (முதல் பயணம்)-6

                                         மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து பெட்டியிலிருந்த சட்டைகளில் எனக்குப் பிடித்த நீலத்தை எடுத்த போது அவள் அதிகம் பச்சை நிற உடைகள் அணிந்து வந்தது நினைவுக்கு வர ஒரு கரும்பச்சை நிற சட்டையை எடுத்து அணிந்து கொண்டேன். கரைபுரண்டோடிய உற்சாகத்தை பார்த்து சந்தோஷப்பட்ட அன்பு என்னிடம் வந்து "எப்படி சொல்லணும்னு முடிவு பண்ணிட்டியா.. ஆல் தி பெஸ்ட்  டா". "தேங்க்ஸ் டா" என்று கூறியவாறே ஏழு மணிக்கே வீட்டைவிட்டு கிளம்பினேன். கிராயூர் செல்ல பத்து நிமிடங்களே பிடிக்கும் என்றாலும் வீட்டில் இருக்க பொறுமையில்லை.

                                         வீட்டிற்கு அருகில் ஒரு மெக்கானிக் ஷாப்பும் ஒரு டீக்கடையும் இருந்தது. டீக்கடைக்கு சென்று டீ சொல்லிவிட்டு கடையின் முன்னே நின்றிருந்தேன். எங்கிருந்தோ திடீரென்று வந்த ஒரு கருப்பு நிற நாய் என்னருகில் வந்து நின்றது. நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு என்னை முறைப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தது. சிறு வயது முதலே நாய்கள் என்றால் மெத்தப் பயம் எனக்கு.. அமைதியாக நின்று கொண்டிருந்த அந்த நாய் சட்டென்று என்னை நோக்கி குரைக்க தொடங்கியது. நான் சற்று நகர்ந்து கடைக்கு வெளியே வந்து நின்றேன்.

                                        அதுவும் விடாமல் என்னை நோக்கி குரைத்தபடியே இருந்தது. "சூ..சூ" என்று அதை விரட்டப் பார்த்தேன். இப்போது மெல்ல எனை நோக்கி ஓடி வர ஆரம்பிக்க நான் கற்றுக் கொண்ட கத்தாஸுகள் அதற்கு முன்னே எடுபடாது என உணர்ந்த நான் ஓட ஆரம்பித்தேன். அவனும் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல் என்னை விடாமல் துரத்த என் வாழ்வில் அவ்வளவு வேகமாக நான் எப்போதும் ஓடியதில்லை. திரும்பிப் பார்க்கக் கூட தைரியமின்றி வண்டிகேட் பஸ் ஸ்டாண்டையும் தாண்டி மின்னல் வேகத்தில் ஓடி சர்க்கரை ஆலையின் அருகில் வந்து நின்றேன். திரும்பி பார்த்த போது நல்ல வேளை.. அவன் வரவில்லை. அருகிலிருந்த ஒரு மரத்தடியில் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.. அங்கிருந்து கிராயூர் நடக்கும் தூரமே என்பதால் நடந்து செல்லத் தீர்மானித்தேன்.

                                        கிராயூரை அடைந்த போது மணி எட்டாகியிருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் ஓட்ட வேண்டுமே என்று எண்ணி அருகிலிருந்த மாணிக்கத்தின் வீட்டில் சென்று இளைப்பாறினேன். எட்டே முக்காலுக்கு அங்கிருந்து கிளம்பி கிராயூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்து நின்றேன். ஒரு பதினைந்து நிமிடத்தில்  தொலைவில் அவள் வருவது தெரிந்தது. இன்றும் பச்சை நிற சுடிதாரே அணிந்திருந்ததை பார்த்த போது மனதிற்குள் சந்தோசம். "ஹாய்  ஆனந்த்" என்றபடி கையசைத்தாள். நானும் பதிலுக்கு கையசைத்தேன். அருகில் வந்த போது தான் கவனித்தேன். எப்போதும் போல இன்றும் முகப்பூச்சுகளோ உதட்டுச் சாயமோ  எதுவும் இல்லாமலும்,  நேர்த்தியாக வாரப்பட்ட கூந்தலும், அதில் குடிகொண்டிருந்த மல்லிகையும் அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது.

                                         "வந்து ரொம்ப நேரம் ஆச்சா, சாரி.. " என்றாள்.

முக்தி வேண்டி முனிவர்கள் தவம் கிடப்பர்-உன் 
முகம் காண தவங்கிடப்பதில்  தான் எனக்கு முக்தி ..

                                          "இல்ல.. இப்பதான் வந்தேன்.." காதல் வந்தால் கள்ளமும் கபடமும் உடனே வருகிறதே.. நான் சொல்லவும் பேருந்து வரவும் சரியாக இருந்தது. அந்தப் பேருந்து நாமக்கல் வரை செல்லும் என்பதால் ஏறிக்கொண்டோம். முன்னே இரண்டு இருக்கைகள் காலியாக இருந்தது. அவள் சென்று அமர்ந்து கொள்ள நான் அருகில் நின்று கொண்டேன். "ஏன் நிக்கறீங்க.. உக்காருங்க" என்று தனக்கு அருகில் இருந்த இருக்கையை தொட்டுக் காட்டினாள். முதல் நொடி கூச்சப்பட்டாலும் அடுத்த நொடி அமர்ந்து விட்டேன்.

                                        இப்போதே சொல்லி விடலாமா என்று எண்ணி என் இதழ்களைப் பிரிக்க, அவளோ "உங்க வீட்ல எவ்ளோ பேர்? " என்றாள்.. " மூணு பேர்" என்றேன். " நீங்க, அப்பா அம்மா மட்டும் தானா?" " இல்ல, ஒரு தங்கையும், பாட்டியும் இருக்காங்க.." "அப்புறம் மூணு பேர்னு சொன்னீங்க.." "ஆமாங்க, வீட்டுல என்னை ஆனந்துன்னும் கூப்பிடுவாங்க, ராஜான்னும்  கூப்பிடுவாங்க, அம்மா சிலசமயம் கண்ணான்னு கூப்பிடுவாங்க.. அதைத்தான் கேக்கறீங்கன்னு நெனச்சேன்." நான் சொல்லவும் அவள் இதழ்களில் பூத்திருந்த புன்னகை என் மனதை என்னவோ செய்தது. உறவினர்கள் அல்லாது வேறோர் பெண்ணுடன் இவ்வளவு அருகாமையில் அமர்ந்து சென்றது அதுவே முதல் முறை.

                                          அவளின் இந்த நெருக்கம் மனதிற்கு இனிமையாக இருந்தது. ஆனால் வயதுக்கே உரிய ஒரு தயக்கம், அருகருகே அமர்ந்தும் அவள் மேல் படாமல் சற்று தள்ளியே அமர்ந்திருந்தேன். அவள் சன்னலினூடே  வேடிக்கை பார்க்கும் அழகை ரசித்தேன். என் காதல் சொல்ல நல்ல தருணம் இதுதான் என எண்ணி குரலை சரி செய்துகொண்டு அவள் பக்கம் திரும்ப,  என் தோளில் யாரோ தட்ட, திரும்பிய போது கண்டக்டர் என்னிடம் "டிக்கட்" என்றார்."ரெண்டு நாமக்கல் குடுங்க" என்றவாறு பின்புற பாக்கெட்டில் கைவிட அங்கே எதுவும் தட்டுப்படவில்லை.. ஆமாங்க, பர்ஸ காணோம்..


தொடரும்..

20 comments:

 1. என்னாது பர்ஸ மறந்திட்டியா.? அடேய்..அவகிட்ட பிடுங்குற ஐடியால தான போன..?

  ReplyDelete
  Replies
  1. என்ன மச்சி.. நான் அப்படியெல்லாம் செய்வேனா??

   Delete
 2. உள்ளத்தை அவளும்..உள்ளதை எவனும் கொள்ளை கொண்டனரோ?

  ReplyDelete
 3. //ஆமாங்க, வீட்டுல என்னை ஆனந்துன்னும் கூப்பிடுவாங்க, ராஜான்னும் கூப்பிடுவாங்க, அம்மா சிலசமயம் கண்ணான்னு கூப்பிடுவாங்க..// எண்ணமா ஸ்கோர் பண்றீங்க

  ஐயோ அடுத்த ட்விஸ்ட்டா நடத்துங்க நடத்துங்க ஹிஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. //" "ஆமாங்க, வீட்டுல என்னை ஆனந்துன்னும் கூப்பிடுவாங்க, ராஜான்னும் கூப்பிடுவாங்க, அம்மா சிலசமயம் கண்ணான்னு கூப்பிடுவாங்க.. அதைத்தான் கேக்கறீங்கன்னு நெனச்சேன்." //
   எப்படி சார். இயற்கையிலேயே இப்படி தானா?

   Delete
 4. முக்தி - என்னே பக்தி...!

  பர்ஸ் கடிக்கும் நாயாக இருக்குமோ...? ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. பாருங்க DD, என்ன தைரியம் அந்த நாய்க்கு??

   Delete
 5. நல்லா வெக்கறீங்க சஸ்பென்ஸு! அப்புறம் என்ன ஆச்சு?! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இதோ சீக்கிரம் வர்றேன் நண்பா.. கொஞ்சம் அலுவல் ஜாஸ்தி..

   Delete
 6. உங்க ஹ்யூமர் senseக்கு அளவில்லாம போச்சு... ;-) ஹையோ ஹையோ...!!

  ReplyDelete
  Replies
  1. தம்பிக்கே பிடிச்சுருச்சுன்னா நல்லா இருக்குன்னு தான் அர்த்தம்..

   Delete
 7. டீ கடைக் காரர் யாருக்கு டீ ஆத்து கிறார்..?! தம் பி தம்ரினு அவர் துரத்தலை யா? !

  ReplyDelete
  Replies
  1. ஓடின ஓட்டத்துல அவர யாரு பார்த்தா?

   Delete
 8. நாய்ன்னா எனக்கும் அலர்ஜிதான் ஆனந்து! கிர்ர்ன்னு அது ராகம் இழுத்தாலே நான் எஸ்கேப்! முதல்முறையா ஒரு உறவல்லாத இளம் பெணணின் அருகில் அமர்ந்து பயணம் செய்த அனுபவம் இப்பவும் என் மனசில் ஒரு ஓரத்துல தித்திப்பா ஒட்டிட்டிருக்குன்றதால அதை நீங்க ரசிச்சு எழுதியிருக்கறதை உணர்ந்து நானும் ரசிக்க முடிஞ்சது! பர்ஸை நீங்க எடுத்துப் போயி தொலஞ்சதா... இல்ல, அவள சந்திக்கப் போறோம்ங்கற பதட்டத்தல வீட்லயே மறந்து வெச்சு்ட்டு வந்து வழிஞ்சீங்களா?

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் அப்படிதானா சார்.. நீங்க போடுற பின்னூட்டத்தில இருந்து நான் சொல்ல வந்த விஷயத்த எவ்வளவு 'தெளிவா' சொல்லியிருக்கேன்னு தெரிஞ்சுக்கிறேன். நன்றி சார்..

   Delete
 9. நாயா..? அய்யோ எப்படி ஓடியிருப்பிங்க நினைச்சா பாவமா இருக்கு. அது என்ன அப்படி ஒரு அவசரம் பர்ஸ் எடுக்காம ....

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க.. இப்போ நினைச்சாலும் கதி கலங்குது..

   Delete
  2. காதலுக்காக வந்த அவசரம்..

   Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...