சினிமா பின்புலம் ஏதும் இல்லாமல் ஒருவர் திரைக் கடலில் எதிர் நீச்சல் போட்டு முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் அறிமுகமாகும் முதல் காட்சிக்கு விழும் கைதட்டல்களே அதற்கு சாட்சி. விஜய், தனுஷ், விஷால் எல்லாம் அதிரடிக்கு போய்விட கொஞ்சம் கருப்பா களையா, தமிழ்நாட்டு லவ்வர் பாய் கேரக்டர் இடம் காலியாயிருக்க, அங்கே கால்மேல் கால் போட்டு அமர்கிறார் இவர்.
குஞ்சிதபாதம் என்ற தன் பெயரை நண்பர்கள், ஆசிரியர் மற்றும் எதிர் வீட்டு குட்டிப்பையன் வரை எல்லோரும் சுருக்கமாக கூப்பிடுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் சிவா பின் தான் நேசித்த பெண் தன்னை நேசித்த போதும் இந்த பெயருக்காகவே இவரை விட்டு செல்லும் போது அவர் பெயரை மாற்றுகிறார். பெயரை மாற்றியதும் சுக்கிரன் ப்ரியா ஆனந்த் வடிவில் எதிரில் வந்து நிற்கிறான். அரும்பாடுபட்டு பள்ளி ஆசிரியரான ப்ரியாவை கரெக்ட் செய்த பின்பு இவருடைய பழைய பெயர் மீண்டும் வில்லத்தனம் செய்கிறது. அந்த பெயரால் ஏற்பட்ட களங்கத்தை (???) எப்படி துடைத்து நல்ல பெயர் (?!) வாங்குகிறார் என்பதே கதை.
படத்தின் முக்கிய பலம் இசை. "மூணு" படத்திற்கு பின் அனிருத் இளைஞர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து சிறப்பாக இசை அமைத்திருக்கிறார். "Poetu" தனுஷ் தேர்ந்திருக்கிறார். இடைவேளைக்கு முன்னரே நான்கு பாடல்கள் வந்த போதும் ரசித்து பார்க்க முடிந்தது. சிவகார்த்திகேயன் தனக்கென ஒரு தனி பாணியில் ஒன் லைன் டைமிங் நக்கலோடு கலக்கல் நடிப்பு. இன்னும் கொஞ்சம் மெருகேற்றிக் கொண்டால் தமிழ் சினிமாவில் நல்ல இடத்திற்கு செல்லலாம். ப்ரியா ஆனந்த் கீதா மிஸ் கேரக்டரில் என்னுடைய பள்ளிக் கால மிஸ்ஸை நினைவு படுத்தினார். பெரிதாய் நடிப்பதற்கு இடமில்லாவிட்டாலும் கொடுத்த பாத்திரத்தை நன்றாய் கழுவியிருக்கிறார்.. சாரி நடித்திருக்கிறார்.
படத்தின் இரண்டாம் பாதியில் வந்த போதும் எல்லோரின் நடிப்பையும் ஓவர்டேக் செய்வது "அட்டகத்தி" நந்திதா தான். இவர் மூலம் இயக்குனர் ஒரு நல்ல மெசேஜ் சொல்கிறார். விளையாட்டு துறையில் நடக்கும் வியாபாரங்களை துகிலுரித்துக் காட்டுகிறார். இவருடைய அப்பாவாக வருபவரும் கனகச்சிதமான தேர்வு. இவர்கள் மட்டுமல்லாமல் படம் முழுவதும் சிவாவின் நண்பனாய் பயணிக்கும் சதீஷ் கலக்கல். ஆனால் சந்தானத்தை காப்பி அடிப்பது போன்ற உணர்வு. மேலும் ஜெயப்ரகாஷ், நந்திதாவின் பாட்டி, சிவாவின் ஹவுஸ் ஓனர், மதன் பாப், ஆர்த்தி என ஒவ்வொருவரும் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.
தனுஷ் மற்றும் நயன்தாராவின் நடனம் படத்திற்கு தேவையில்லை என்றாலும் சி கிளாஸ் ரசிகர்களை குஷிப்படுத்த உதவுகிறது. கடைசியில் அட்டகத்தி தினேஷை பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் சாதுர்யம். மாரத்தான் நம்ம ஊருக்கு புதுசு என்றாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொல்லியிருப்பதால் ஒகே. அஞ்சு முதல் அறுபத்தியஞ்சு வரை எல்லாரும் ரசித்து பார்க்கலாம் இந்த எதிர் நீச்சலை!
78 / 100
தைரியமா எதிர்நீ்ச்சல் போடலாம் (பாக்கலாம்)னு சொல்றீங்க ஆவி. ரைட்டு! சிவகார்த்திகேயன் இன்னிக்கு தேதிக்கு நீங்க சொல்ற மாதிரி இயல்பா, கைத்தட்டலை அள்ளறார்தான்! (விஜய்கூட இப்படி வந்தவர்தானே) என்னிக்கு அவருக்கு ஆக்ஷன் ஹீரோவாகி 40 பேரை உதைச்சு ஒண்ரை கிலோமீட்டர் தூரம் பறக்க வெக்கலாம் தோணி சனி பிடிக்கப் போவுதோ?
ReplyDeleteவிஜய்க்கு இருந்த பின்புலம் இவருக்கு இல்லையே.. நல்ல கதைகளை தேர்வு செய்தால் நன்றாக வரலாம்..
Deleteம்ம்.படம் பார்க்கணும்.
ReplyDeleteநீ எப்போ மச்சி ஊருக்கு வர்றே?
Deleteசற்றே சீரியல் தனமான படமாக எனக்குப் பட்டது சார்.. அதிலும் அந்த பிளாஷ்பேக்கில் என்னால் உக்கார முடியவில்லை அத இன்னும் சுருக்கமா சொல்லி இருக்கலாம்...
ReplyDeleteபடத்துல எதுவுமே வித்தியாசமா இல்ல.. ஒரு ஹீரோ/யின்/நண்பன் இவங்களுக்குள்ள நடக்குற அலப்பறை.. இன்னும் எவ்ளோ நாள் தான் நம்மள கொலையா கொள்ளுவாய்ங்களோ...
மற்றபடி சிவா கார்த்திகேயனை ரசித்தேன்... படம் பார்த்தது அவருக்காக மட்டும் தான்.
சீனு, எனக்கு நந்திதாவை பிடித்த காரணத்தால் இரண்டாம் பகுதி அவ்வளவு இழுவையாக தெரியவில்லை.. நிறைய பேர் அப்படிதான் சொன்னார்கள்.
Deleteஅப்புறம் சீனு சார் எல்லாம் வேண்டாம், ஆவின்னு கூப்பிடுங்க போதும்.. :-)
78 மார்க்...! சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவர் ஆன மாதிரி தெரிகிறதே.... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல விமர்சனம்... நன்றி...
ஹி.ஹி.. இல்ல DD.. நாங்க புதுசா நஸ்ரியா ரசிகர் மன்றம் ஆரம்பிக்க போறோம்.. ;-)
Deleteபாத்துடலாம்....
ReplyDeleteபாருங்க..
Deleteஇப்பத்தா படம் பார்த்த.. படம் கண்டிப்பா ஒரு டைம் பார்க்கலாம்.. கீழ விழுந்துட்டு அப்பவு Win பண்றாரே, அதுதா கொஞ்சம் ஓவர்..
ReplyDeleteஅதுதாம்பா எதிர்நீச்சல்..
Delete