முந்தைய பதிவுகளுக்கு...
முதல் முறையாக அவள் என் பேர் சொல்லி அழைத்ததும் புளங்காகிதமடைந்த நான் நின்று அவள் இதழிலிருந்து வரும் சொற்களுக்காய் காத்திருந்தேன். "ஆனந்த், நாளைக்கு ஏதாவது ப்ளான்ஸ் இருக்கா உங்களுக்கு?" என்றாள். " ஒண்ணும் முக்கியமான வேலை இல்லை.. ஏன் ரமா?" "இல்லே, நாளைக்கு காலைலே நாமக்கல் ஆஞ்சிநேயர் கோவில் பக்கத்துல வேதாத்திரி மகரிஷியோட யோகா கிளாஸ் நடக்குது.. சங்கரியும், விஜியும் இன்னைக்கு நைட் ஊருக்கு போறாங்க.. சங்கீதாவுக்கு ஏதோ ஒர்க் இருக்காம்.. அவதான் சொன்னா நீங்க வாரா வாரம் நாமக்கல் போவீங்கன்னு.. நான் எங்கயும் தனியா போனதில்ல..இப் யு டோன்ட் மைண்ட் என் கூட வர முடியுமா??" என்று கேட்டாள்.
தேவதையின் முகம் பார்க்க,
ஏங்கி நின்ற பக்தன் நான்!!
தேவதையே வரம் கொடுக்க,
மறுப்பொன்று சொல்வேனோ??
சந்திரனும் சூரியனும்
உனைப்பார்க்கத் தவங்கிடக்க-
என்னுடனே நீ நடக்க
சம்மதமும் அவசியமோ ??
ஒரு நிமிடம் உறைந்து போயிருந்த என்னிடம் "பிஸியா இருந்தா பரவால்லே, நான் அடுத்த வாரம் போய்க்கிறேன்" என்றாள். "இல்லே, இன்பேக்ட் நாளைக்கு நானே நாமக்கல் போகணும்னு ப்ளான் வச்சிருந்தேன்.. நோ ப்ராப்ளம். காலைலே ஒன்பது மணிக்கு கிராயூர் வந்திடறேன்.. அங்கிருந்து போயிடலாம்." என்றேன். "ம்ம்.. சரி.." என்றவாறு முன்னே சென்றாள். சொல்லி வைத்தது போல் அவள் சென்றதும் அங்கே பாஸ்கர் வந்தான்.. "என்னடா, என்ன சொல்லிட்டு போறா?" என்று கேட்டான். "ஒண்ணுமில்லே டா, மேத்ஸ் நோட்ஸ் கேட்டா" என்று சரளமாக ஒரு பொய் சொன்னேன். " சரி, அய்யனார்லே பூவே உனக்காக படம் போட்டிருக்கான், போலாமா?" என்று கேட்டான்.. விஜய் படங்களின் மேல் அவ்வளவு ஈர்ப்பு இல்லையென்றாலும் இந்த படத்தின் பெயரைக் கேட்டதும் சரியென்று சொல்லிவிட்டேன்.
மாலையில் படத்திற்கு சென்றோம். அதுவரை நான் கண்டிராத அளவிற்கு பயங்கரமான கூட்டம். அந்த கூட்டத்தினூடே சென்று இருவருக்கும் டிக்கட் வாங்கி வந்தான் பாஸ்கர். நெருக்கமான இருக்கைகள் கொண்ட அந்த திரையரங்கில் ஒருவாறாக இடம் பிடித்து அமரவும் படம் போடவும் சரியாக இருந்தது. படம் ஆரம்பித்தபோதும் என் மனம் ரமாவின் வார்த்தைகளையே அசை போட்டுக் கொண்டிருந்தது. படத்தின் நாயகியின் உருவத்திற்கு பதில் ரமாவின் உருவமே திரையில் தெரிந்தது. சொல்லாமலே யார் பார்த்தது என்றபோது என் நெஞ்சோடு பூத்திருந்த பூவும் தலையாட்டியது.
இடைவேளையின் போது பாஸ்கர் என்னிடம் அதிகம் பேசவில்லை. பார்ப்பதற்கும் டல்லாக இருக்கவும் "என்னடா தலை வலிக்குதா" என்றேன். ஒன்றுமில்லை என்பது போல் தலையாட்டினான். மீண்டும் படம் ஆரம்பித்த போது நாயகனின் காதலை நிராகரித்துவிட்டு நாயகி வேறொருவரை திருமணம் செய்வதாய் ஒரு காட்சி.. அதை பார்த்துக் கொண்டிருக்கும் போது அருகில் யாரோ அழுவது போல் தோன்றியது. திரும்பி பார்த்த போது பாஸ்கர் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தான். என்னவென்று கேட்டபோது ஒன்றும் சொல்லாமல் கண்ணை துடைத்துக் கொண்டான்.
படம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது நான் வற்புறுத்திக் கேட்டதால் ஊரில் இருந்த அவனுடைய முன்னாள் காதலி பற்றியும், அவள் அவனுடைய காதலை நிராகரித்து விட்டு திருமணம் செய்து கொண்டதையும் கூறினான். அவனிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்பதாலும், அவனுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று தெரியாததாலும் அவன் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாக வந்தேன். என் வீட்டை நெருங்கும்போது என்னிடம் "அனுபவிச்சு சொல்றேண்டா, தெரியாமக் கூட லவ் எல்லாம் பண்ணிடாதே. அது போல வலி எதுவும் குடுக்காது" என்று கூறிவிட்டு சென்றான்..
அவன் கூறியதை கேட்டபோது மனம் பாரமாக இருந்தது. ஹிருதயத்தை யாரோ ஓங்கிக் குத்தியது போன்ற உணர்வு. வேகமாக அன்பழகனின் அறைக்கு சென்றேன். அப்போதுதான் உறங்க ஆரம்பித்திருப்பான் போலும். அவனை உலுக்கி எழுப்பினேன். தூக்க கலக்கத்துடன் எழுந்து உட்கார்ந்து "என்னடா" என்றவனிடம் "நாளைக்கு ரமாவிடம் என் லவ்வ சொல்லப் போறேன்" என்றேன்..
(தொடரும்)

ஒரு அழகான காதல் கதையைப் படிக்கும் உணர்வு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி நண்பா..
Deleteமனதில் இருந்த காதலியே...
ReplyDeleteமனைவியாக வரும் போது
சோகம் கூட சுகமாகும்...
வாழ்வு இன்ப வரமாகும்....
அப்புறம் மச்சி...
அப்புறம் என்ன?
Deleteசோதனை மேல் சோதனை
போதுமடா சாமி,
வேதனை தான் வாழ்க்கையென்றால்
தாங்காது பூமி..
அடாடா... நண்பனின் அனுபவம் நாம லேட் பண்ணிரக் கூடாதுரா, உடனே ரமாட்ட சொல்லிடணும்னு தூண்டிருச்சு போலருக்கு...! அழகா வளர்ந்துட்டு வந்த அந்த லவ்வச் சொன்னீங்க, அதோட க்ளைமாக்ஸை எதிர்பார்க்க வெச்சுட்டீ்ங்களே... !
ReplyDeleteவிஜய்யை பே(ரரசுவுக்கு).முன், பே.பின் -அப்படின்னு ரெண்டாப் பிரிக்கலாம். பே.மு. விஜய் மிக இயல்பா நடிச்சு மனசைக் கவர்வாரு. பூவே உனக்காகவுலயும் அப்படித்தான். ஆக்ஷன் ஹீரோவாக்கிக் கெடுத்தாரு புண்ணியவான்!
நண்பனின் கதை கேட்டபோது வருத்தப்பட்ட மனசு, உடனே எப்படி அந்தர் பல்டி அடிச்சுதுங்கற காரணம் இன்னும் புரியவேயில்ல சார். உங்க கமெண்ட் என் எழுத்துகளுக்கு ஊக்கம் கொடுக்குது. நன்றி..
Deleteநீங்க சொல்வது சரிதான். பூவே உனக்காக, கா.மரியாதை, து.ம.துள்ளும் படங்கள் விசை நடித்து எனக்கு மிகவும் பிடித்தவை.
Deleteசுவையாக செல்கிறது அனுபவத் தொடர்! தொடர்ந்து வருகிறேன்! நன்றி!
ReplyDeleteநண்பா, நீங்க ரசித்து மகிழ்ந்தது சந்தோசமாக இருக்கு. தொடர்ந்து வாங்க..
Deleteகதை ரொம்ப அருமையா போகுது. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் ...
ReplyDeleteROMANCE வந்தாச்சு...!! :D
ReplyDeleteவிஜய் படத்தின் மீது ஈர்ப்பு இல்லையா??? இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.. :@
//விஜய் படத்தின் மீது ஈர்ப்பு இல்லையா??? இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்..//
Deleteவிஜய் படத்தின் மீது ஈர்ப்பு இல்லையா??? இதை நான் வன்மையாக ஆதரிக்கிறேன் ஹா ஹா ஹா :-)
என்னது லவ்வா சொல்ல போறீங்களா... ரியல் ஸ்டோரி இட் இஸ் இன்ட்ரெஸ்டிங்க்
ReplyDeleteஎன்னப்பா திடீர்னு பாரதிராஜா மாதிரி பேச ஆரம்பிச்சுட்டே..
Deleteஹஹ லவ் வந்ததுமே பயமும் வந்து விட்டது போல..
ReplyDeleteவந்தாகனுமே.. வருகைக்கு நன்றி..
Delete