Saturday, March 30, 2013

சென்னையில் ஒரு நாள் - திரை விமர்சனம்

                             

                           மலையாளத்தில் வெளிவந்து சிறப்பாக ஓடிய "ட்ராபிக்" எனும் திரைப்படத்தின் ரீமேக்கே இந்த "சென்னையில் ஒரு நாள் திரைப்படம். பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பது இதன் சிறப்பு.                                   உடல் உறுப்புகளை தானம் செய்வதை மையக் கருத்தாக கொண்ட இந்த படம் நகர்வது, ஒரு சாலை விபத்தை மையமாக கொண்டு. தன் மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தும் தொலைக்காட்சி பேட்டி  கொடுத்துவிட்டு வரும் நடிகர் ஷைனிங் ஸ்டார் பிரகாஷ் ராஜ். இவரது மனைவி ராதிகா.. இவரை பேட்டி எடுக்க தன் நண்பனின் டூ-வீலரில் செல்லும இளைஞன். சில விஷமிகளால் துரத்தப்பட்டு பின் அதனால் வாகனத்தை வேகமாக செலுத்தி இளைஞனின் மரணத்திற்கு காரணமாகும் ஒரு பெண். இந்த விபத்தில் மரிக்கும் இளைஞனின் இதயத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகரின் மகள், இதை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்க்க உதவும் காவலர் சேரன் மற்றும் டாக்டர் பிரசன்னா.. இந்த முயற்சிக்கு ஆதராமாக நிற்கும் கமிஷனர் சரத்குமார்..                                   மலையாளத்தில் திரைக்கதை அசுர வேகத்தில் நகரும்.. ஒவ்வொரு நொடியிலும் நமக்கு இதயத்துடிப்பு  அதிகமாகி அந்த இதயத்தை கொண்டு சேர்க்க வேண்டி நாமும் வேண்டுவோம். ஆனால் இங்கே ம்ஹும், ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை, மிடுக்காக இருந்த போதும் எடுப்பான நடிப்பை வெளிப்படுத்தாத சரத், வாங்கிய சம்பளத்தை விட முன்னூறு மடங்கு அதிகம் நடித்து (?!!) சொதப்பியிருக்கும் சேரன், இளமையான இனியா,  பிரசன்னாவை விட கெஸ்ட் ரோலில் வரும் சூர்யா கூட அதிகம் பேசுகிறார். பின்னணி இசையும் பின்னடைவே.. இப்படி  படத்திற்கு  பலமாக இருக்க வேண்டிய எல்லாமே பலவீனமாகிவிட்ட போதும், சிறப்பான கதையும், அளவான நடிப்பை வெளிப்படுத்தி கொஞ்சம் தாங்கிப்பிடிக்கும் ராதிகா, "பூ" பார்வதி, ஜெயபிரகாஷ் மற்றும் அவர் மனைவி லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..                                      சென்னையில் ஒரு நாள், இன்னும் கொஞ்சம் நல்ல நாளாக இருந்திருக்கலாம்..


60 / 100

15 comments:

 1. என்ன நண்பா.. விமர்சனம் அவ்வளவுதானா...

  ReplyDelete
 2. அதே தான், தமிழ் சினிமாவின் மாயையை நம்பி ஏமாந்துவிட்டேன், மலையாளத்தில் எதார்த்தம் முக பாவம் எதிலும் கொஞ்சம் கூட மிஸ் ஆகாமல் எடுத்து இருப்பார்கள்... பின்னணி இசை மகாமட்டம்

  ReplyDelete
 3. ஸ்கூல் பையன்-அதிக எதிர்பார்ப்புடன் சென்று ஏமாற்றம் அடைந்தேன். இந்த படத்துக்கு இந்த விமர்சனம் அதிகம் நண்பா..

  ReplyDelete
 4. சீனு- ஆமா ஸார்.. ரொம்ப ஆர்வமா போய் பார்த்து ஏமாந்தேன். முதல் முறை பார்க்கிறவங்களுக்கு பிடிக்கலாம்.

  ReplyDelete
 5. விமர்சனத்திற்கு நன்றி... (உங்கள் சன் டிவியில்... அப்போது பார்க்கிறேன்... விரைவில் வந்து விடும்...)

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 6. நன்றி தனபாலன்..

  ReplyDelete
 7. உங்க விமரிசனம் படி பார்த்தா தனபாலன் சார் சொல்றபடி சண்டி வி ல கூடிய சீக்கிரமே எதிர்பார்க்கலாம் போலத்தான் இருக்கு

  ReplyDelete
 8. பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 9. தொலைக்காட்சி விளம்பரத்தில் "க(ga)ரம் கொடுப்போம்" என்று சுர்யா அழுத்தி சொல்லும்போதே விளங்கிவிட்டது...

  ReplyDelete
 10. இந்தப் படத்தின் விமர்சனத்தை சீனு என்னிடம் நேரில் சொன்னார். அதே கருத்தை ஆவியும் இங்கு பிரதிபலித்திருப்பது மிக வியப்பு! மலையாளத்தை விட மேக்கிங்கில் நன்றாகவும், தரத்தில் குறைவாகவும் உள்ளது என்பதே பொதுவான கருத்து. (ஆவி கருத்துகளுக்கு பதில் தராம ‘பிரபல’ பதிவராகிட்டாரோன்னு கடந்த ரெண்டு பதிவுகளைப் பார்த்தப்ப நினைசசேன். இப்ப பதில் தந்துட்டீங்க) வலைச்சரத்தில் அறிமுகம் பெற்றமைக்கு மனம் நிறைய நல்வாழ்த்துகள் நண்பா!

  ReplyDelete
 11. பூந்தளிர்- ஏப்ரல் பதினாலு டிவி ல வந்துடும்.. ;-)

  ReplyDelete
 12. புலோலியூர் கரன்- வருகைக்கு நன்றி

  ReplyDelete
 13. கலாகுமரன் சார், கரெக்டா சொன்னிங்க

  ReplyDelete
 14. பாலா சார், முதலாவதா சீனு சாரின் கருத்தும் என் கருத்தும் ஒரே போல் இருந்தது எனக்கும் வியப்பு! மகிழ்ச்சி!

  அப்புறம் நேரமின்மை காரணமாக மட்டுமே பின்னூட்டம் அளிக்க இயலவில்லை. இன்னும் "பிற பல" எழுத்தாளர்கள் போலத்தான் நானும்.. "பிரபல" பதிவர் ஆகிவிட்டதாய் நீங்க சொல்றதால நம்பறேன்.. ஹி ஹி

  ReplyDelete
 15. இந்த ரிஸல்ட் சூரியா வரும்போதே தெரியும்.. ;-)

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...