Sunday, March 17, 2013

வத்திக்குச்சி- திரை விமர்சனம்

                                      உதவி செய்ய நல மனது மட்டும் தான் வேண்டும், முன்பின் அறிந்திருக்க வேண்டிய  இல்லை என்ற நல்ல கருத்தை கொஞ்சம் வன்முறையின் துணையோடு சொல்ல வந்திருக்கும் படம் தான் வத்திக்குச்சி.



                                        ஆட்டோ ஒட்டி வாழ்க்கையை ஓட்டும் நாயகன், ஸ்போக்கன் இங்க்லீஷ் கிளாசில் ஆங்கிலம் கற்று காதல் வயப்படும் எதிர் வீட்டு பெண் நாயகி, நாயகனை கொல்வதற்காக அவனை விடாமல் துரத்தும் மூன்று குரூப்புகள்,  அவர்கள் நாயகனை ஏன் கொல்லத் துடிக்கிறார்கள் என்ற சஸ்பென்சை வைத்துக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாயகன் தப்பித்தானா? அவன் காதல் கை கூடியதா? என்ற கேள்விகளே கிளைமாக்ஸ்.

               
                                     புதுமுகம்  திலீபன் (இவர் இயக்குனர் முருகதாசின் தம்பியாம்),  முக பாவங்களில் இன்னும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. காதல் காட்சிகளில் ஏனோ அப்பாஸை நினைவு படுத்துகிறார். அசாத்தியமான உயரம் சாதகமான விஷயம் என்றாலும் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கடைசி காட்சிகளில் தேமே என்று நிற்பது பலவீனம். எனினும் முதல் படம் என்பதால் மன்னிக்கப்படலாம்.


                                        அஞ்சலி வழக்கம் போல் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். "என்னை பலபேர் பார்த்து காதலிக்கிறான். அவன்கிட்ட எல்லாம் நான் போய் கூடாதுன்னு சொல்ல முடியுமா? அது மாதிரி தான் உன்கிட்டயும் சொன்னேன்" என்று திலீபனைப் பார்த்து கூறும்போது அவர்  கண்களே ஆயிரம் கவிதைகள் பேசுகிறது.



                                         விறுவிறுப்பான த்ரில்லர் கதையை கொடுக்க இயக்குனர் கின்ஸ்லின் முயன்றிருக்கிறார். கதைக்கென அவர் தேர்வு செய்த நடிகர்கள் ஜெகன், ஜெயப்ரகாஷ், சம்பத், சரண்யா, ராஜா என ஒவ்வொருவரும் அருமை. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் மற்றவர்களை துவம்சம் செய்வதை நம்பும்படியான காட்சிகளை வைத்தது வித்தியாசமான அதே சமயம் புத்திசாலித்தனமான காட்சியும் கூட. ஜிப்ரானின் இசையில் மூன்று பாடல்கள் இனிமை. இந்த வத்திகுச்சி சட்டுன்னு பத்திகிச்சி..!

70 / 100



2 comments:

  1. என்னங்க மார்க்கை ஓவரா அள்ளி வீசி இருக்கீங்க! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...