Friday, March 8, 2013

நான்காம் பிறை (3D)- திரை விமர்சனம்

                               கொஞ்ச நாள் முன்னாடி, பேட்மேன் கதைய எடுக்கறதா சொல்லி ஒரு இயக்குனர் காமெடி படம் எடுத்திருந்தார்.. இப்போ மலையாள இயக்குனர் வினயன் புகழ்பெற்ற டிராகுலா எனும் காவியத்தை காமெடியாக கொ(கெ)டுத்திருக்கிறார்.                               ருமேனிய டிராகுலா, மலையாள மாந்தரிகம், ஹீரோ இன்ட்ரோ  சாங், ஒரு ரொமேன்டிக் சாங், ஒரு பைட் இப்படி ஒரு குப்பை படத்திற்கான எல்லா அம்சங்களும் நிறைந்த திரைச்சித்திரம்.. இந்த படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நினைத்த போதும் கடும் உழைப்பை சிந்தி (உறிஞ்சி?) நடித்திருக்கும், டிராகுலாவாக வரும் நாயகன்  சுதீர் மற்றும் நாயகியின் தமக்கையாக வரும் ஷ்ரத்தா தாஸ் ஆகியோருக்காக இந்த விமர்சனம்... (மேலும் என் வாசகர்களை இந்தப் படத்தை தயவு செய்து திரையரங்கில் சென்று பார்த்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று சொல்லவும் தான்)


                               கதை- தேனிலவுக்காக ருமேனியா செல்லும் ஹீரோ தான் சென்ற வேலையை விட்டுவிட்டு டிராகுலாவுடன் பேச முயல அது அவனைக் கொன்று விட்டு அவன் உடலில் புகுந்து கொள்கிறது.. ருமேனியா போர் அடித்துவிட்டதோ என்னவோ, சுற்றிப் பார்க்க சென்னை மாங்காட்டுக்கு வருகிறது டிராகுலா. வந்த  இடத்தில் கதாநாயகியை பார்த்து ( மாவீரன் ராம்சரண் காஜலை பார்ப்பது போல்) முன் ஜென்மத்தில் தன் காதலி என்று கண்டுபிடிக்கும் போது "உலகத்துல எவ்வளவோ பொண்ணுக இருக்கும் போது நீ ஏன் ஜெஸ்ஸிய  லவ் பண்ணினே" என்று கேட்க தோன்றுகிறது..


                              அப்புறம் என்ன, அவரை அடைவதற்காக அவரது அக்காவை டிராகுலாவாக மாற்றுகிறார் (என்ன லாஜிக்கோ?) தடுக்க வரும் பூசாரியை அடித்து  கொள்கிறார்.. (நம்ம சிங்கம் படத்துல வில்லன் கிட்ட டயலாக் பேசிக்கிட்டே  வர்ற சூர்யா திடீர்னு அப்பாவியா பின்னாடி நிக்கிற ஒருத்தர அடிப்பாரே அது மாதிரி).. படத்துல கதாநாயகிய காதலிக்கும் ஒரு டம்மி பீஸ் ( அப்பாஸ போட்டிருக்கலாம்)  மற்றும் மனோதத்துவ நிபுணர் பிரபு, மந்திரவாதி நாசர் கூட்டணி ஒன்று சேர்ந்து டிராகுலாவை சூரிய வெளிச்சத்தில் காய வைத்து வடாம் போடுவது தான் கிளைமாக்ஸ்.. திரையரங்கை விட்டு நாம் வெளிவரும் போது மனதில் நிற்பது அநியாயமாய் இழந்து விட்ட நூற்றி நாற்பது ( 120+ 3D glass  20) மட்டுமே!!

30 / 1004 comments:

  1. உனக்கு எவ்ளோ நல்ல மனசு...எங்கள காப்பாத்த வந்திருக்கும் ஐந்தாம் பிறை...

    ReplyDelete
  2. கடைசி இரண்டு வரிகள் அருமை

    ReplyDelete
  3. படத்துல நீங்க போட்டிருக்கற பொண்ணுதான் ஷ்ரத்தா தாஸா? அழகாத்தான் இருக்குது! ஆனா அதுக்காகவெல்லாம் படம் பாத்துர முடியாதுப்பா. இ.தொ.காட்சிகளில் முதல் முறையாக வர்றப்ப வேணா பாத்து வெக்கலாம்! ஹி... ஹி...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...