Wednesday, March 13, 2013

TALAASH (Hindi) - திரை விமர்சனம்

                                    அமீர் கானின் சிறப்பான நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் இது. வசூலில் பெரும் சாதனை படைக்கவில்லை என்றாலும் என்னைப்  பொறுத்தவரை இது ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர்.


                               
                                     திரைப்படத்தின் முதல் காட்சியே படத்தின் பலம். நள்ளிரவில் கடலின் ஓரமாக இருக்கும் சாலையில் வேகமாக வரும் ஒரு கார், அதே வேகத்தில் பாதை மாறி கடலில் தவறி விழுகிறது. மறுநாள் காலையில் உள்ளிருந்து கார் வெளியேற்றப்படும் போது அதனுள்ளே இறந்த நிலையில் ஒருவர் கிடக்கிறார். இந்த கேஸை கையாள வரும் இன்ஸ்பெக்டர் சுரான் (அமீர்கான்) தன் விசாரணையில், இறந்தவர் குடி மற்றும் போதையிலோ இல்லை என்பதையும், அவருடன் யாரும் பயணிக்கவில்லை என்பதும், மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையிலும் இல்லை என்பதும் அறிந்து குழம்புகிறார்..



                                       அப்போது அவருக்கு உதவ வருவது ரோசி (கரீனா கபூர்) எனும் பாலியல் தொழிலாளி. கொலை சம்பந்தப்பட்ட விவரங்களை சுரானுக்கு அளிக்கிறார். இதற்கிடையே சுரானுக்கும் அவர் மனைவி ரோஷினிக்கும் (ராணி முகர்ஜி) மனஸ்தாபம் வருகிறது.. இதற்கு காரணம் சில வருடங்களுக்கு முன் கடலில் தவறி விழுந்து இறந்து போன அவர்கள் பிள்ளை கரன் ஆவியாக வந்து பேசுகிறான் என்று ரோஷினி சொல்வதை சுரான்  நம்ப மறுப்பதால். இந்த கொலையின் முடிச்சுகளை அமீர்கான் எப்படி அவிழ்க்கிறார் என்பது தான் கதை.



                                        தமிழில் கமல் எப்படியோ, அது போல ஹிந்தியில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டவர் அமீர்கான்.  மனைவியிடம் ஆவிகளுடன் பேசுவது வெறும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என கூறும் இடத்தில் அவருடைய நடிப்பு, சிறப்பு. ராணி முகர்ஜி, இவருக்கு படத்தில் அதிகம் வேலை இல்லையென்றாலும் தன் பங்கை நன்றாக செய்திருக்கிறார். கரீனா கபூர் அசத்தல் நடிப்பு. படத்தில் இவர் வெறும் கிளாமருக்காக சேர்க்கப் பட்டிருக்கிறார் என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் கடைசியில் இவரே கதாநாயகி என்று உணர வைக்கிறார்..



                                          தலாஷ் என்றால் தேடு என்று அர்த்தம். இந்த நல்ல படத்தை இணையத்தில் தேடாமல்,  DVD இல், அதுவும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்..

80 / 100


4 comments:

  1. 100க்கு 80 மார்க்கா...? ஆவிக்கு தாராள மனசோன்னு தோணற அதே சமயத்துல அந்த அளவுக்கு அந்தப் படத்துல விறுவிறுப்பு இருக்குதான்னு பாத்துடணும்கற நெனப்பும் வருது. அதனால நிச்சயமா பாத்துடறேன் - டிவிடி வாங்கி!

    ReplyDelete
  2. மெட்ராஸ்பவனில் என்ன சஸ்பென்ஸ் என்று எழுதி விட்டார்.. இருந்து கண்டிப்பாக படமாக பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  3. படம் பார்க்கத்தூண்டிலிடுகிறது உங்கள் விமர்சனம் முயற்சிக்கிறேன் :-}

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...