Monday, June 9, 2014

பயணிகள்-நிழற்குடை - 2014JUN09



ஹேட்ஸ் ஆப் டு யூ விஜய் டிவி..!

                    திருநங்கைகளை பற்றிய ஆழமான கலந்துரையாடல் இந்த வார நீயா நானாவில்.. அவர்களுக்கும் ஒரு மனதுண்டு, ஆண், பெண் போல் ஆசாபாசங்கள் உண்டு என்றெல்லாம் திருநங்கைகளை இதுவரை வெறும் காட்சிப் பொருளாய் பார்த்தவர்கள் கூட எண்ணியிருக்க கூடும். அவ்வளவு டச்சிங்காக இருந்தது நிகழ்ச்சி.. அதிலும் ஒருவர் கணவரைப் பற்றி கூறியபோது நெகிழ்ச்சியாக இருந்தது. சில திருநங்கைகள் காசு பிடுங்குவதற்காக சில தவறான வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். அந்த மோசமான அனுபவம் எனக்கும் உண்டு.. அவர்களுக்கு வாழ ஓர் அங்கீகாரம் கொடுத்துவிட்டால் நிச்சயம் அது போன்றவற்றை தவிர்த்து விடுவார்கள் என்பது திண்ணம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஜய் டிவிக்கு ஒரு சலாம்..!



இந்த வார மிக்ஸிங்..!

அமைச்சர் ஆவியானந்தா!


ஒய் மீ ஆல்வேஸ்? 

                           அரும்பாடுபட்டு லைசன்ஸில் முகவரி மாற்றி வந்த எனக்கு வந்தது மற்றொரு சோதனை. சில பொருட்கள் வாங்க RS புரம் சென்ற நான் அனாமிகாவை (எனது i20) அங்கு ஒரு ஹோட்டலின் முன் இருந்த பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இன்ஜினை ஆப் செய்தேன். அதே நேரம் வண்டியே குலுங்கும் அளவுக்கு ஏதோ இடித்தது போல உணர்ந்தேன். சீட் பெல்டை கழற்றிவிட்டு வெளியே இறங்க, அதற்குள் ஒருவன் டூவீலரை அவசர அவசரமாக கிளப்பி எதிர் திசையில் சென்றான். ஒன்றும் புரியாமல் காரை சுற்றி வந்த எனக்கு தலை சுற்றியது. காரின் முன்புறம் இருந்த பம்பர் உடைந்தும் , Fog லைட் தொங்கிக் கொண்டும் இருந்தது. டூ வீலரை பார்க் செய்ய வந்தவன் இடித்து விட்டு அப்படியே ஓடிவிட்டான். அவனை சிறிது நேரம் திட்டிவிட்டு தண்டச் செலவு அழுதுவிட்டு வந்தேன். வானத்தை நோக்கி ஒரே கேள்வி கேட்டேன்.. ஒய் மீ ஆல்வேஸ்?


இணையத்தில் 'பிடித்தது':


ஆகச்சிறந்த ரணம் எதுவெனில்,

பிரியங்கள் நிறைந்திருந்த தருணங்களை

பிரியமற்ற தருணத்தில் நினைப்பது தான்.



ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று..

                           அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருந்த சமயம், சென்னை ஏர்போர்ட்டில் டாக்ஸிக்காக வெயிட் செய்து கொண்டிருந்தேன். அந்நேரம் அங்கு வந்த ஒருவன் திண்டிவனத்திலிருந்து வந்ததாகவும், பர்ஸை திருடிவிட்டார்கள் என்றும், ஏதாவது உதவி செய்யுமாறும் கேட்டு நின்றான். அவன் உடையும் கோலமும் பரிதாபப்பட வைத்தது. அழைத்து சென்று அருகிலுள்ள டீக்கடையில் இருவருக்கும் டீ சொல்லி, அவனுக்கு வடையும் வாங்கிக் கொடுத்து பின் அவன் கையில் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினேன். பின்னர் மூன்று வாரங்களுக்கு பிறகு திரும்ப அமெரிக்கா செல்ல ஏர்போர்ட் வந்தபோது அதே ஆள் மீண்டும் யாரிடமோ காசு கேட்டுக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் எதிர்திசையில் சென்று மறைந்துவிட்டான். சென்ற மாதம் நண்பன் ஒருவன் யு.எஸ்ஸிலிருந்து வந்திருந்தான். அவனைப் பார்க்க விருதுநகர் சென்றிருந்தேன். அங்கே ஒருவன் இதுபோன்றே வந்து பணம் கேட்க, நான் கொடுக்க மறுத்ததோடு நண்பனையும் கொடுக்க விடவில்லை. "பார்த்தா Genuine ஆ தெரியராண்டா" என்ற அவனிடம் எனக்கு நடந்த கதையை கூறினேன். சமீபத்தில் மஞ்சப்பை என்ற படம் பார்த்த போது அதில் இதுபோன்ற காட்சி வந்ததும் எனக்கு இந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது.. உஷார் மக்களே.. இதுபோல நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள்..
                   

சமீபத்தில் ரசித்த பாடல்:

சத்தியமா நஸ்ரியாவுக்காக அல்ல..! ஹிஹிஹி..





கிஸு கிஸு கார்னர்: இவங்களுக்குள்ள மெய்யாலுமே 'அதுவா'?


                     சாதாரணமா விளையாடிக்கிட்டுருந்த ஒருத்தன் மரண அடி அடிக்கிறான்னா ஒண்ணு அவன் யூசுப் பதானா இருக்கணும்.. இல்லீன்னா பையன் லவ்வுல விழுந்திருக்கணும்.. குவாலிபையர் மேட்சுல அடி பின்னுனத பார்த்தா அப்படித்தான் தோணுது..இவங்களுக்குள்ள மெய்யாலுமே அதுவான்னு கேட்டா, உலக நாயகன், நாயகன்ல சொல்ற அதே பதில்தான்.. "தெர்லியேபா"..!

உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, வர்ட்டா...!
              
                                  ***************** X *******************





35 comments:

  1. அமைச்சர் ஆவியானந்தா!//

    அமைச்சர் பிஞ்சானந்தா...

    ReplyDelete
    Replies
    1. நல்லா இல்லையா அண்ணே?

      Delete
  2. அமைச்சர் ஆவியானந்தா
    அருமை

    ReplyDelete
  3. இது போல் ஏமாற்றுபவர்கள் இருப்பதால் உதவி செய்யும் நோக்கமே போய் விடுகிறது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே!

      Delete
  4. விஜய் டிவி நான் பாக்காததால இங்க தெரிஞசுக்கிட்டதுல மகிழ்ச்சி. அந்த ‘திருப்பிப் போட்ட கடவுள்’ அனாமகாவோட பின்பக்கத்துலதான் இடிச்சுட்டு ஓடியிருக்கணும்னு நினைக்கிறேன். (முன் பக்கம் அடிபட்டதுன்னு எழுதிருக்க) இந்த மாதிரி பொறுப்பில்லாத ஜந்துக்கள் சென்னைலதான் இருக்குன்னு நினைச்சிருந்தேன். மனிதர்கள் எங்கும் ஒரேவிதம் தான் போலும். ஆவியமைச்சரே.... அசர வெச்சுட்டீர் போஙகோ...

    ReplyDelete
    Replies
    1. இல்ல சார் பிரன்ட் பம்பர் தான்.. அவனும் எனக்கு பேரலல்லா பார்க்கிங் பண்ண வந்திருக்கான் பக்கி..!

      Delete
    2. //. ஆவியமைச்சரே.... அசர வெச்சுட்டீர் போஙகோ...//

      குரு எவ்வழியோ சிஷ்யர்களும் அவ்வழியே!! :)
      நன்றி சார்

      Delete
  5. விஜய் டிவி நீனா நானாவின் சிறந்தவைகளில் ஒன்று...

    மிக்ஸிங் பிரமாதம்...

    உழைப்பை மறந்தவர்கள்... நூதன திருட்டு எங்கும் உண்டு...

    ReplyDelete
    Replies
    1. //மிக்ஸிங் பிரமாதம்...//
      நன்றி DD..

      Delete
  6. உருப்படியானா நீயா நானா எபிசோட்களில் இதுவும் ஒன்று.
    இவர்களைப் பற்றிய கவிதைப் பதிவு ஒன்றையும் எழுதி இருந்தேன்.
    நாங்கள் யார்?

    ReplyDelete
    Replies
    1. இப்போதான் படிச்சேன் நன்றாக இருந்தது,..

      Delete
  7. என்னண்ணே... எல்லாம் மிக்ஸ் பண்ணி குடுத்து இருக்கீங்க... நானும் நீயா நானா பாத்தேன். நிஜமாவே நல்ல நிகழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. வாம்மா தங்கச்சி.. தளப்பக்கம் ரொம்ப நாளா பார்க்க முடியலையோ.. காலேஜில் ஆணி ஜாஸ்தியோ? ;-)

      Delete
  8. இவங்களுக்குள்ள மெய்யாலுமே அதுவான்னு கேட்டா, உலக நாயகன், நாயகன்ல சொல்ற அதே பதில்தான்.. "தெர்லியேபா"..!
    உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, வர்ட்டா...!
    >>>
    அதிமுக்கியமான கவலைப்பா உனக்கு ஆவி!
    >>

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. இல்லையா பின்ன..

      Delete
  9. நீயா? நானா?வில் மொக்கை தலைபுலாம் பார்த்த எனக்கு நேத்தைய நிகழ்ச்சியை மிஸ் பண்ணிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா.. திரும்ப டெலிகாஸ்ட் பண்ணும்போது பாருங்க அக்க.. நல்ல ஷோ அது..

      Delete
  10. குடை வெயிலுக்கு இதமாக நிழல் தந்தது!///ஆவி யானந்தா நல்லா இல்ல.எதுக்குங்க உங்களுக்கு இதெல்லாம்?ஒரு அரசராவோ,இளவரசராவோ மிக்ஸ் பண்ணுங்க.

    ReplyDelete
    Replies
    1. //ஆவி யானந்தா நல்லா இல்ல//

      சரி அடுத்து ராஜா வேஷம் போட்டுடுவோம்.. ஒரு நல்ல கலைஞன் எல்லா வேஷமும் போட வேண்டாமா? ;-)

      Delete
  11. சுவாரஸ்யக் கலவை. எதற்காக அந்த மேக்கப் போட்டிருக்கிறீர்கள்? அதே அல்லது வேறு சீரியல்? ரசித்தேன். திருனங்கள் ஒருவர் எழுதிய புத்தகம் ஒன்று நன்றாயிருந்ததாய் விமர்சனம் படித்துக் குறித்து வைத்திருந்தேன். (இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு திருநங்கைகள் எழுதிய வெவ்வேறு புத்தகங்கள் உண்டு) எந்தப் புத்தகம் என்று நினைவில் இல்லை.

    கடைசிப் படத்தில் இருப்பது யார்?

    ReplyDelete
    Replies
    1. //கடைசிப் படத்தில் இருப்பது யார்?//

      சுரேஷ் ரெய்னா - ஸ்ருதி ஹாசன்

      Delete
    2. அது மேக் அப் அல்ல சார்.. போட்டோஷாப்.. இதுவரை அவர்களைக் (திருநங்கைகளை) பற்றி படித்ததில்லை.. நேற்று கேட்டபோது பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன் சார்..

      Delete
  12. சத்தியமா நஸ்ரியாவுக்காக அல்ல..! ஹிஹிஹி..///பொய்!!!!!!!!!!!!!!!!!!!!!இப்ப தான் பாத்தேன்........பொய்...பொய்...பொய்....!

    ReplyDelete
  13. பிடித்தது பிடிச்சுருக்கு ...

    ReplyDelete
  14. அமைச்சர் ஆவியானந்தா மிக்சிங்க் சூப்பர் ஆவி! திருநங்கைகளை குறையோ, கேலியோ செய்வதைய் விட அவர்களும் இந்த சமூகத்தில் உள்ளவர்கள்தான் என்று கவனிக்கப்படவேண்டியவர்கள்!

    வஒய் மீ ஆல்வேஸ்....ஆவி அனாமிகா முன்பக்கம் அடி வாங்கினாரா? பின்பக்கம் அடி வாங்கினாரா? முன்பக்கம் என்றால் உனகளுக்கு அந்த ஆளைப் பிடித்திருக்கலாமே என்றுதான்....., ஈயேன் என்று......அனுபவங்கள் எங்களுக்கும் உண்டு ஐயோ அதை ஏன் கேக்கறீங்க ஆவி !!!!

    பங்களுர் டேய்ஸ் படமே அருமையான படம் பார்த்துவிட்டோம்....எங்களுக்கு பிடித்திருந்தது......அஞ்சலி மேனன் நல்ல டைரக்டராக மிளிர்ந்து வருகின்றார்.....நஸ்ரியாவைப் பார்த்த போது தங்கள் நினைவைத் தவிர்க்க முடியவில்லை ஆவி!!!!
    மாங்கல்யம் பாட்டை மிகவும் ரசித்தோம்! அருமையான பாட்டு !!!!

    சுரேஷ் + ச்ருதி ஹாஸன் =?!!! அப்பூடியா? மெய்யாலுமா?

    ReplyDelete
    Replies
    1. //அமைச்சர் ஆவியானந்தா மிக்சிங்க் சூப்பர் ஆவி///\

      நன்றி சார்..

      //முன்பக்கம் என்றால் உனகளுக்கு அந்த ஆளைப் பிடித்திருக்கலாமே // முன்பக்கம் தான்.. நான் சீட் பெல்டை கழற்றி விட்டு வருவதற்குள் அவன் வந்த வழியே டூ வீலரில் ஓடி விட்டான்.. :(

      Delete
    2. //பங்களுர் டேய்ஸ் படமே அருமையான படம் //

      இங்கே இரவு பத்து மணிக்காட்சி என்பதால் பெரும்பாலான நல்ல படங்களை தவற விடுகின்றேன்.. பார்க்க வேண்டும்..

      //நஸ்ரியாவைப் பார்த்த போது தங்கள் நினைவைத் தவிர்க்க முடியவில்லை ஆவி!!!!//

      ஹஹஹா


      //அப்பூடியா? மெய்யாலுமா?/

      அப்படித்தான் கேள்விப்பட்டேன் சார்.. நிஜமான்னு தெரியாது..

      Delete
  15. அமைச்சர் ஆவியானந்தா - கலக்கல்....

    நீயா நானா - நிகழ்ச்சி அதிசயமாக அன்று பார்த்தேன். முழுவதும் பார்த்தேன். மனதைத் தொட்ட நிகழ்ச்சி அது.

    ReplyDelete
  16. அமைச்சர் ஆட்சயபாத்திரம் !ஹீ

    ReplyDelete
  17. மைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களின் பதிவைக் கண்டேன்.வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...