Wednesday, June 25, 2014

பத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ?)


             வாத்தியார் தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கார். மத்தவங்க எழுதற பதில்கள படிக்கறதுல இருக்கிற சுகம் நாமளே பதில் சொல்லி அதை வாசிக்கறதுல இல்ல.. இருந்தாலும்  வாத்தியார் கேட்டப்புறம் தட்ட முடியுமா?
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

பதில் : காலையில எழுந்ததும் அம்மாகிட்ட வாழ்த்து வாங்கிட்டு, புறப்பட்டு நண்பர்கள பார்த்து அவங்க வாங்கி வச்சிருக்கிற (பக்கிகளா, வழக்கம் போல கேக் வாங்கலையா) நான் வாங்கிட்டு போன கேக்கை வெட்டி எல்லாரும் சாப்பிட்டுட்டு, அப்புறம் புதுசா ரிலீஸ் ஆன ஏதாவது ஒரு படம் பார்த்துட்டு, மதியம் நல்ல ஹோட்டலா பார்த்து பிரியாணி( சிக்கன், மட்டன் எதுவானாலும் பரவாயில்லே). அப்புறம் அட்ரஸ் தேடிப்  பிடிச்சு காந்தி வீட்டுக்கு (ஆமா மகாத்மா காந்தி தான் ) போயி 1950 க்கு அப்புறம் நாடு அலங்கோலமான அப்டேட் கொடுக்கணும். இரவு வந்து  எங்க பாட்டி (அம்மாவோட அம்மா, இப்ப உயிரோட இல்ல) மடில படுத்துகிட்டு, தாத்தாக்கு நான் எழுதின கதைகள், கவிதைகள் எல்லாம் படிச்சு காண்பிக்கணும். (அவரும் இப்ப உயிரோட இல்ல).. உயிரோட இல்லாதவங்க கூட எப்படி உரையாட முடியும்னு கேட்கறீங்களா? அப்போ நூறு வயசுல நான் மட்டும் உயிரோட இருப்பனா என்ன?
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

பதில் :  நான்  காட்டும் அன்பை அலட்சியப்படுத்தும் மனிதர்களை வெறுக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
3.கடைசியாக சிரித்தது எப்போதுஎதற்காக?

பதில் :  உதட்டளவு சிரிப்பு என்பது எப்போதும் இருக்கு.. அரங்கம் அதிர சிரித்தது சமீபத்தில் சீனு மற்றும் வாத்தியாரோட (அன்னைக்கு ஸ்கூல் பையன் மட்டம் போட்டுட்டார்) முண்டாசுப்பட்டி படம் பார்த்த போது. 
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பதில் : மொதல்ல UPS ஆன் பண்ணுவேன்.. ஹஹஹா.. புத்தகங்கள் இருக்கு.. கையில கொஞ்சம் காசு எடுத்துகிட்டு பைக்கில் அல்லது காரில் ஊர் சுற்ற கிளம்பிடுவேன். 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

பதில் :  வாழ்த்துகள்.. "கல்யாணம் ஆயிடுச்சு இனி நீ கணவன், நான் மனைவி ன்னு யோசிக்காம எப்போதும் நல்ல நண்பர்களா இருங்க போதும்.. எந்த பிரச்சனை வந்தாலும்  உங்களுக்குள்ளயே தீர்த்துக்க பாருங்க.. "

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

பதில் : எந்த பிரச்சனையையும் 'பேசித்' தீர்த்துவிடலாம் என்று தீர்க்கமாக நம்பி தோல்வியடைந்தவன் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன்.. இதற்கு மேல் எந்த பிரச்சனையையும் தீர்க்க கிளம்புவதாக இல்லை.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

பதில் : சிறுவயதிலிருந்தே அப்பாவின் அட்வைஸ் (ஆர்டர்?). கொஞ்சம் வளர்ந்ததும் தாயிடமும், பருவ வயதில் நண்பர்களிடமும், திருமணத்திற்கு பிறகு மனைவியிடமும் ன்னு மத்தவங்க அட்வைஸ் கேட்டே வளர்ந்துட்டேன்.. இனி சரியோ, தப்போ, நான் எனக்குள்ள இருக்கிற ஒரு புத்திசாலி 'ஆவி' கிட்ட மட்டும் தான் அட்வைஸ் கேக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

பதில் : அவங்களுக்கு போன் பண்ணி, இல்லேன்னா நேரில் பார்த்து ஏன் அப்படி செஞ்சாங்க ன்னு தெரிஞ்சுக்குவேன். அவங்க செய்ததில் ஏதாவது நியாயமான காரணம் இருந்தா அதை திருத்திக்க முயற்சி செய்வேன். வேண்டுமென்றே அப்படி செய்தாங்கன்னு தெரிஞ்சா நம்மையும் மதிச்சு நம்மள பத்தி ஒரு நியுஸ் பரப்பியிருக்கானே ன்னு ஒரு சின்ன 'தேங்க்ஸ்' சொல்லிட்டு அவங்க ரிலேஷன்ஷிப்ப கட் பண்ணிடுவேன்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

பதில் : அது நண்பரின் வயதையும், மனைவி எப்படி இறந்தார் ங்கறதையும் பொறுத்தது..

 நண்பர் இளம் வயதினரா இருந்தா வேற கல்யாணம் பண்ணிக்க சொல்வேன். நடுத்தர வயது ஆள்கிட்ட என் சோகக் கதைகளை கூறி எம்பதைஸ்(Empathaize) செய்வேன். பெரியவங்களா இருந்தா மௌனமா நின்னுட்டு வந்திடுவேன். 
அதே போல மனைவி ஆக்சிடென்ட்ல ஏதும் இறந்திருந்தா ஐயோ பாவம் இப்படி ஆயிடுச்சே ன்னு சொல்வேன். நோய் வந்து இறந்திருந்தா  கருணையே இல்லையே இந்த கடவுளுக்குன்னு அவரை கோச்சுக்குவேன். கள்ளக் காதல் வெளியே தெரிஞ்சு தூக்கு மாட்டிருந்தா வாடா மாப்ளே சரக்கடிக்கலாம் ன்னு கூப்பிடுவேன்..

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

பதில் : கேக்குற கேள்விய தெளிவா கேக்கணும் இல்ல.. இப்படி பொதுவா கேட்டா என் பதில் கொஞ்சம் பெருசா இருக்குமே பரவாயில்லையா? 

தனிமை - நான் விரும்பியோ விரும்பாமையோ எனக்கு நிறைய தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.  சிறு வயதில் விவரம் தெரிஞ்சதுல இருந்து அம்மா ஆபிஸ்ல இருந்து வர்ற வரைக்கும் தனிமை தான். சனிக்கிழமைகளில் கூட அலுவலகம் சென்று விடுவார் என்பதால் தனிமையில் ஒரே ஆளாக கேரம், செஸ், ஏன் சில சமயம் "ஒன் மேன் கிரிக்கட்" கூட விளையாடி இருக்கேன். அப்போ எனக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. அம்மா வர்றதுக்குள்ள அவங்களுக்கும் சேர்த்து காபி, மேகி எல்லாம் செய்து கொள்ள பழகிகிட்டேன்.
 
பள்ளி முடிந்ததும் பாலிடெக்னிக், தொலைதூர ஊர்.தனி அறை.. இப்போ கொஞ்சம் நண்பர்கள் இருந்தாங்க.. இருந்தாலும் தனியா இருக்கும்போது நான் சமையல் செய்ய கத்துகிட்டேன். எப்பவாவது ஓவியம் வரைய பிடிக்கும். முதல் காதலிக்கு கொடுக்க கடிதங்கள் பல எழுதுவேன்.. (அதுல ஒண்ணு கூட இன்னைக்கு வரைக்கும் கொடுக்கல.) நிறைய்ய்ய சினிமா பார்த்து தனிமையை அண்ட விடாமல் செய்வேன்.

கல்லூரி நாட்களில் நிறைய இசை கேட்க ஆரம்பித்தேன். சிட்னி ஷெல்டன், ராஜேஷ் குமார், தமிழ்வாணன் இவங்க எல்லாம் துணைக்கு இருப்பாங்க.. சென்னையில் முதல் வேலை மேன்ஷன் வாழ்க்கை, மெடிக்கல் ரெப் நண்பர்கள் வரும் வரை பக்கத்துல இருக்கிற மெரீனா பீச்சுக்கு வாக்கிங் போவேன். அமெரிக்க வாசம், அபார்ட்மெண்டில் நண்பர்கள் இருந்த போதும் தனிமையான தருணங்கள் நிறைய இருந்தன. அப்ப லேப்டாப் தான் தனிமை நிவாரணி.

திருமணத்திற்கு பிறகு தனிமையான தருணங்கள் தொலைந்து போய்விட்டதாகவே எண்ணியிருந்தேன். அதெல்லாம் இல்ல உனக்கு அறிமுகம் ஆனா முதல் நண்பனே நாந்தான்னு தனிமை இப்போ மீண்டும் வந்து ஒட்டிக்கிச்சு. ஆனா இப்போ அவனை கவனிக்க நேரம் இல்ல.. வேலை, முகநூல், சினிமா, பதிவுகள், இசை, நட்புகள் ன்னு ரொம்ப பிஸியா இருக்கேன்.. தனிமைய எங்காவது பார்த்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க.. சொல்வீர்களா?  சொல்வீர்களா?

                                                        சரி இப்ப யாரை கோர்த்து விடறது? ம்ம்ம் எல்லாரும் எழுதிட்ட மாதிரி தெரியுது.. நான் சொல்றவங்க இதுவரைக்கும் எழுதலேன்னா எழுதுங்க ப்ளீஸ்.. 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் சார், KGG சார் (நீங்க எழுதிட்டீங்கன்னு நினைக்கிறேன்), சுப்புத் தாத்தா, உலக சினிமா ரசிகன், 'இரவின் புன்னகை வெற்றிவேல்', குடந்தையூர் சரவணன், துளசிதரன் சார்..


47 comments:

 1. ஒவ்வொரு பதிலிலும் ஆவி'ஸ் டச் தெரியுது நண்பா....

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் தேங்க்ஸ்..

   Delete
 2. கலாய்க்கிற மாதிரியும் சீரியஸா பதில் சொல்ற மாதிரியும் இருக்கே... டூ இன் ஒன்!

  ReplyDelete
 3. #நான் எனக்குள்ள இருக்கிற ஒரு புத்திசாலி 'ஆவி' கிட்ட மட்டும் தான் அட்வைஸ் கேக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.#
  புல்லரிக்குது ஆவி ஜி ,எப்படி இப்படி ஒரு நல்ல முடிவுக்கு உங்களால் வர முடிந்தது ?
  தம3

  ReplyDelete
  Replies
  1. வந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுட்டேன் ஜி!!

   Delete
 4. பாஸு இன்னிக்கு என்ன சீரியஸ் மோட் ஆண் பண்ணி விட்ருகீன்களா :-)

  ReplyDelete
  Replies
  1. மதியம் அந்த மோட்ல இருந்தது உண்மைதான்.. இப்போ ரிலீஸ் ஆயிட்டேன்.. ஹஹஹா..

   Delete
 5. பதில்கள் அருமையாக இருந்தது ஆ.........வி.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க..

   Delete
  2. முன்னே பகவான் ஜி..! இப்போ கில்லர்ஜி யா? ஆவிஜி அவதாரம் எடுக்க வச்சுருவீங்க போலிருக்கே? ;-)

   Delete
 6. ரொம்ப ஓவரா போயிட்டமோன்னு நீ யோசிக்கற அளவுக்குல்லாம் இல்ல ஆவி... பதில்களை நல்லாவே சொல்லி இருக்கே. பட், மீ-க்கு ஒரு மேட்டரு பிரிலப்பா... ஒன்மேன் கிரிக்கெட்...? எப்புடி நீயே பந்தை வீசிட்டு, அதையும் விட வேகமா போய் பேட்டால அடிப்பியா...? அவ்வ்வ்வ்...!

  ReplyDelete
  Replies
  1. ஆமா சார்.. அதுல பியுட்டி என்னன்னா பேட்டிங் பண்ணிட்டு அடிச்ச பந்த கேட்ச்சும் பிடிக்கணும்.. ஹஹஹா.. ஒன் மேன் கிரிக்கெட் ரொம்ப இண்டரெஸ்டிங் ஆன கேம்..!

   Delete
 7. அருமை அருமை..!! #point8 ஆவி நீங்க அவ்ளோ நல்லவரா..??? ;-)

  ReplyDelete
  Replies
  1. தெரியாதாடா அம்பி நோக்கு?

   Delete
 8. இரண்டாவது உங்களால் முடியாது...

  ஐந்தாவது // நல்ல நண்பர்களா இருங்க போதும் // - சூப்பர்...!

  /// தனிமையை அண்ட விடாமல் செய்வேன்... ///

  பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. பதில்கள் அனைத்தும் அருமை....

  அழகாக மற்றும் நறுக்கென்று சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete

 10. படங்களுடன் சிறப்பாக பதில்களை தந்து இந்த தொடர் ஒட்டத்தில் பங்கு கொண்டதற்கு மிகவும் நன்றி & பாராட்டுக்கள்

  ReplyDelete
 11. உங்கக்கிட்ட இருந்து இப்படி ஒரு சீரியஸ் பதிவை எதிர்பார்க்கல ஆவி! நாமலாம் சீரியசாகிட்டா எப்படி?

  ReplyDelete
  Replies
  1. நேத்து இருந்த மூட்ல அப்படி வந்திடுத்து.. இனி 'அந்த' தவறு நடக்காம பார்த்துக்கறேன் அக்கா.. ;) ;)

   Delete
 12. நூறு வயது வாழ்வது சாத்தியத்திலிருந்து நிச்சயமாக மாறி வருகிறது. இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள் அறுபது சதவிகிதம் சதத்தைத் தொடக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. விளையாட்டான கேள்வி(?) என்றாலும் விவரமுள்ளவர்கள் நூறு.என்பது சாத்தியம் என்றறிந்து தங்களைத் த்யார் செய்து கொள்வது மேல் என்றே நினைக்கிறேன்.

  எட்டாவது கேள்விக்கு யாராவது நேர்மையாகப் பதில் சொல்வார்களா என்று பார்க்கிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. அறுபது சதவிகிதம் பேரா.. ரொம்ப ஜாஸ்தி சார்..

   //எட்டாவது கேள்விக்கு யாராவது நேர்மையாகப் பதில் சொல்வார்களா என்று பார்க்கிறேன்.//

   நேர்மைன்னா என்னம்மா ன்னு ஹமாம் விளம்பரத்தில் ஒரு குழந்தை கேட்கும்.. அதே கேள்வியை உங்களை பார்த்து கேட்க தோணுதே சார், கேட்கலாமா? ;-)

   Delete
 13. கலக்கலான பதில்கள் கோவை ஆவி. பதில் ஒவ்வொன்னும் அருமை.

  ReplyDelete
 14. ஒரு வகையில எண்ணிப் பார்த்தால் பாவமாய் இருக்கிறது இன்னொரு வகையில
  நீங்கெல்லாம் தனிமையைச் சகித்துக்கொள்ள வேண்டியவங்க தான் என்று இறுமாப்பு வருதே ஏன் எனில் நீங்க தான் ஆவியாச்சே :))) ஆவிச் சகோதரா பதிகள் அனைத்தும் மனதோடு ஒட்டிக் கொண்டது வாழ்த்துக்கள் .என்னுடைய வாழ்த்துத் தான் உண்மையானது காரணம் 7 வது வாக்கையும் போட்டு அரங்கில் ஏற்றும் வாய்ப்பு எனக்குத் தான் இன்று :))

  ReplyDelete
  Replies
  1. ஹஹாஹ நன்றி சகோ..

   Delete
 15. கடைசி பதில் கொஞ்சம் ஆவியின் மீதான வாழ்க்கையை கவனிக்க தூண்டுகிறது ....

  ReplyDelete
 16. ஐந்து மற்றும் ஆறாவது கேள்விக்கான ஒரு நிமிஷம் பன்மையில் சொல்லணுமோ... கேள்விகளுக்கான பதிலில் ஒரு சிறு முரண்! இல்லை?

  ஒன்பதாவது கேள்விக்கான பதில் செம! என்னையா தொடரச் சொல்கிறீர்கள்? ஆவியை எழுதச் சொல்லி போட்டுட வேண்டியதுதான்! அதாங்க... கோஸ்ட் ரைட்டிங்! அல்லது நான் KGG கிட்டேயே பொறுப்பை ஒப்படைச்சுடறேன்!

  அப்பாதுரை பின்னூட்டம் படித்து விட்டு மறுபடி 8வது கேள்விக்கு சென்று வந்தேன்! இதே பதிலை நான் 10வது கேள்விக்கும் சிபாரிசு செய்கிறேன்!!!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்.. உங்களுக்கும் அது நேர்மையான பதிலாக தெரியவில்லையா?

   //கோஸ்ட் ரைட்டிங் // ஹஹஹா

   Delete
  2. //ஐந்து மற்றும் ஆறாவது கேள்விக்கான ஒரு நிமிஷம் பன்மையில் சொல்லணுமோ... கேள்விகளுக்கான பதிலில் ஒரு சிறு முரண்! இல்லை? // அட ஆமா இப்போதான் கவனிச்சேன்..:)

   Delete
 17. மனம் திறந்த பதில்கள், கடைசி கேள்விக்கான பதில் என் மனதை அசைத்து பார்த்து விட்டது. நாணயத்தைப் போல தனிமைக்கு இரண்டு முகங்கள்....

  ReplyDelete
  Replies
  1. ஆமா சார்.. உண்மைதான்..

   Delete
 18. வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///நன்று,சில பதில்கள்(தனிமை)உறுத்திய போதிலும்............ஹூம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க.. இடையில கொஞ்சம் காணோம்..?

   Delete
 19. ஆவியின் பதிலிலும் ஆவி பறக்கிறது.

  வாழ்த்துக்கள் ஆவி.

  ReplyDelete
 20. எங்களையும் அழைத்ததற்கு மிக்க நன்றி முதல்ல.....ஆனா சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன்அவங்க அழைக்க....சகோதரி அம்பாளடியாள் அவர்களும் எங்களை அழைத்திருக்க...ஆனா நாங்கள் மைதிலி அவர்களது மெயில் முதலில் பார்க்க அதற்கு விடையளித்து விட்டோம்.....இப்போது நீங்களும் அழைத்திருகின்றீர்கள்....ம்ம்ம்சந்தோஷமாக இருக்கின்றது!

  ஆவி! அசத்திட்டீங்க போங்க! உங்க முதல் பதில்...ஆவி!!..ஆவிக்கேற்ற பதில்!!!!!!!!!!!

  5 வது பதில் நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்வது...எந்த உறவானாலும் முதலில் வேண்டியது நண்பர்கள் என்ற உணர்வு.....அது அப்பா, அம்மா பிள்ளைகள், சதோதரன், சகோதரி...கணவன் மனைவி, காதலன் காதலி எந்த உறவாக இருந்தாலும் முதலில் தேவை மிக நல்ல நட்பு....அதைத் தாங்கள் இங்கு சொல்லியிருப்பதை நாங்கள் மிகவும் ரசித்தோம்!

  6 , 7வது பதிலும் அசத்தல்.....10 வது தங்கள் தனிமையை எப்படி சமாளித்து....அதையும் அழகாக ரசித்திருக்கின்றீகள் என்பதற்கு பாராட்டுக்கள்......

  நல்ல பதில்கள்....வாழ்த்துக்கள் ஆவி!

  ReplyDelete
  Replies
  1. நம் எண்ண ஓட்டங்கள் ஒன்றாக இருப்பதாய் நீங்க சொல்வது சந்தோசம் அளிக்கிறது.. நன்றி சார்..

   Delete
 21. ஒவ்வொரு பதிலும் சிந்திக்க வைத்தன! முதல் பதில் ரொம்பவே பிடிச்சு இருந்தது! நன்றி!

  ReplyDelete
 22. தொடர் சுவாரஸ்யமாகத் தான் போகிறது....

  பதில்கள் நன்று.

  ReplyDelete
 23. கடைசி பதில் அறியாத ஆவியை அறிமுகம் செய்துள்ளது......

  ReplyDelete
 24. //KGG சார் (நீங்க எழுதிட்டீங்கன்னு நினைக்கிறேன்// ஹய்யா ஜாலி ஜாலி மீ எஸ்கேப்பு. ஸ்ரீராம் உங்களைத்தான் ஆவி கூப்பிட்டிருக்கார். எல்லா கேள்விகளுக்கும் சமத்தா பதில் சொல்லுங்க!

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...