Thursday, June 12, 2014

ஆவி டாக்கீஸ் - Edge of Tomorrow




கண்விழிக்கிறான்... தன் பதவிக்குரிய மரியாதை தரப்படாமல் ஒரு சாதாரண வீரனாக போர்க்களத்துக்கு அனுப்பப் படுகிறான். ராட்சத மிருகங்களை வேட்டையாடுகிறான். நாயகியை காப்பாற்ற முயல்கையில் உயிர் துறக்கிறான். மீண்டும்..

கண்விழிக்கிறான்... மரியாதை தரப்படாமல் ஒரு சாதாரண வீரனாக போர்க்களத்துக்கு அனுப்பப் படுகிறான். மிருகங்களை வேட்டையாடுகிறான். நாயகியை காப்பாற்றுகிறான். தப்பி வரும்போது நாயகி இறக்கிறாள். அவளை பார்த்தபடி இருக்கும் இவன் மேல் ஒரு டாங்கர் மோத இறக்கிறான். மீண்டும்..

கண்விழிக்கிறான்...  போர்க்களத்துக்கு அனுப்ப தயார் செய்யப்  படுகிறான். நாயகியை காப்பாற்றுகிறான். தனக்கு இருக்கும் சக்தியினை அறிகிறான். கடமையை உணர்கிறான்.இறந்தால் மீண்டும் தான் வாழ்ந்த அந்த ஒரு நாளுக்கு பின்னோக்கி செல்ல முடியும் என அறிந்து இறக்கிறான்.. மீண்டும்..

கண்விழிக்கிறான்... போர்க்களத்துக்கு அனுப்ப தயார் செய்யப்  படுகிறான். நாயகியுடன் சேர்ந்து மிருகத்தை கொல்ல  பயிற்சி எடுக்கிறான். தோல்வியடைகிறான். நாயகி அவனை சுட்டுக் கொல்கிறாள். மீண்டும்..

கண்விழிக்கிறான்...  நாயகியுடன் சேர்ந்து மிருகத்தை கொல்ல பயிற்சி எடுக்கிறான். ஜெயிக்கிறான் ..வினோத ஜந்துவின் ஆணிவேரான ஒமேகாவை கொல்லச் செல்கிறார்கள். தோல்வி அடைகின்றனர். தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறான்.. மீண்டும்..

கண்விழிக்கிறான்... 

இப்படி செத்து செத்து விளையாடி கடைசியில வினோத ஜந்துவை கொன்று பிரான்ஸை டாம்க்ரூஸ் காப்பாற்றினாரா, இல்லையா என்பது தான் கதை.. ஷப்பா.. இதுக்கு மேல இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுத ஒண்ணும் இல்ல.. நல்ல படம். சுவாரஸ்யம் அதிகம். ஆங்காங்கே இயல்பான நகைச்சுவையும்..  ஆக்க்ஷனுக்கும் குறைவே இல்லை. 3டியில் பார்க்கும் போது இன்னும் ஜோர்!! குட்டிப் பசங்களோட போகும்போது அவங்க கேக்குற டவுட்டுகளுக்கு தயாரா போங்க!!


பி.கு:  ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துல மூணு தடவ திரும்பத் திரும்ப ஒரே காட்சி வந்ததுக்கு சலிச்சுகிட்டவங்க தயவு செய்து இந்தப் படத்தை தவிர்த்து விடவும். மற்றபடி நல்ல படம்தான்!!

இந்தப் படம் டிவிடியில் பார்க்க உகந்ததல்ல. முடிந்தால் திரையில் காணவும். இல்லாவிட்டால் பார்க்காமல் விட்டுடுங்க.. படத்தின் பிரம்மாண்டத்தை திரையரங்கில் மட்டுமே ரசிக்க முடியும்..!


22 comments:

  1. வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///////// மிருகத்தை கொ"ள்ள"/ சுட்டுக் கொ'ள்'கிறாள்.///அவ்ளோ காண்டாயிட்டீங்க போல?ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. இந்த லட்சணத்துல இதை ரெண்டு முறை ப்ரூப் வேற பார்த்தேனாக்கும்..! (என் தலையில் நானே ரெண்டு குட்டு வச்சுகிட்டேன்.) :)

      திருத்திட்டேன்.. 'டைப்போ'க்களை..

      Delete
    2. எட்டத்துல இருக்குறதால (கொட்டுலேருந்து)தப்பிச்சீங்க,ஹ!ஹ!!ஹா!!!

      Delete
  2. நடுவுல காபி சாப்பிட, ஒண்ணுக்குப் போக எழுந்து போய்வந்தா எத்தனாவது தரம் அவர் எழுந்தார் என்ற கணக்கு விட்டு விடும் இல்லே?

    ReplyDelete
    Replies
    1. காபி டிக்கா, இன்டெர்வெல்லுக்கு கூட மக்கள் எழுந்து போகாதது ஆச்சர்யமா இருந்தது.. ;-)

      Delete
  3. இத்தனை ரிப்பீட்டுகளா...? 3டியில தரலைன்னா சுவாரஸ்யம் கம்மியாகியிருக்கும் இல்ல....?

    ReplyDelete
    Replies
    1. 3D சுவாரஸ்யத்தை கூட்டுச்சுன்னு வேணும்னா சொல்லிக்கலாம் வாத்தியாரே..!

      Delete
  4. ஆவி.பாஸ்,

    வாழ்க்கையிலும் ஒரு ரீ வைண்ட் பட்டன் இருந்தா நல்லா இருக்குமே என முதல்வன் படத்துல அர்ஜூன் அப்பா சொல்றாப்போல தான் "நாளைய விளிம்பில்"(ஹி...ஹி..edge of tomorrow) படமும், இப்படியான படங்களை" time loop" கான்செப்ட் என்கிறார்கள், இன்செப்ஷன், ரன் லோலா ரன், ஸ்லைடிங் டோர் எல்லாம் இதே வகையில் கொஞ்சம் மாத்தி யோசித்தவையே.

    ஒரு சின்ன கான்செப்ட் வச்சிட்டு , கம்பியூட்டர் கிராபிக்ஸ்,அனிமேஷன் ,மோஷன்/பெர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் என எல்லாம் பயன்ப்படுத்தி மேக்கிங்கில் வித்தியாசப்படுத்தி கல்லாக்கட்டுவது தான் ஹாலிவுட் பட உலகம்.

    இந்தப்படத்தில் பெரும்பாலும் மோஷன்கேப்சர்/பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் தான் ஆனால் அதை முன்னிருத்தி விளம்பரப்படுத்திக்கலை, டாம் குரூஸ் வரும் காட்சிகளில் எது ஒரிஜினல் எது அனிமேஷன்னு தெரியாத போல எடுத்திருக்கான்க, ஆனால் நம்ம ஊருல இன்னும் பொம்மையா காட்டிட்டு ,இப்படித்தான் எடுக்க முடியும்னு வேறக்கூசாம சொல்லிடுவாங்க :-))

    இந்த படத்துல கிராபிக்ஸ் வேலையில் மும்பையில் இருக்கும் கணீனி நிறுவனமும் நிறைய வேலை செஞ்சிருக்குனு போட்டிருக்காங்க, நம்ம ஊரு ஆட்கள ஹாலிவுட் படங்களில் வேலை செய்ய கூப்பிடுற காலம் இது ,ஆனாலும் நம்ம மக்கள் இன்னும் இது மாரி வேலைலாம் ஹாலிவுட்ல இருக்கவங்களால தான் செய்ய முடியும்னு நம்பிட்டு இருக்காங்க அவ்வ்!

    அடுத்த வருஷம் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்படலாம் ,அப்போ ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்க்கு விருது கிடைச்சா நம்ம ஆட்களும் கூட்டாத்தான் வாங்குவாங்க, அது போல முன்னரே வாங்கி இருக்காங்க "ஷ்ரெக்-2 படத்துல சென்னைய சேர்ந்த ஒரு பொண்ணு கூட வேலை செஞ்சி கூட்டா ஆஸ்கார் வாங்கியிருக்கு, அதெல்லாம் நம்ம ஊருல யாரும் கண்டுக்கிறது இல்லை அவ்வ்!

    இது போல படத்தையெல்லாம் மேக்கிங்கிற்காகவே ஒரு முறைப்பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. // டாம் குரூஸ் வரும் காட்சிகளில் எது ஒரிஜினல் எது அனிமேஷன்னு தெரியாத போல எடுத்திருக்கான்க,// சத்தியமான உண்மை..

      Delete
  5. திரையரங்கில் சென்றே ஒருமுறை பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பிரம்மாண்டத்தை பார்த்து அசந்துடுவீங்க..

      Delete
  6. வணக்கம்
    ஆவியப்பா

    பதிவை பார்த்தவுடன் சென்று பார்க்க வேண்டும் போல உள்ளது. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பார்த்துட்டு சொல்லுங்க..

      Delete
  7. வித்தியாசமாத் தான் யோசிச்சு இருக்காங்க..... பார்க்க முயல்கிறேன் ஆவி.

    ReplyDelete
  8. பார்த்துட்டோம்! நல்ல ஒரு படம்! விமர்சனம் அழகா எழுதி இருக்கீங்க ஆவி!

    ஏன் ஆவி, இவ்வளவு நல்லா எழுதற நீங்க ஒரு நல்ல நாளிதழ், வார இதழ்ல விமர்சனம் எழுதக் கூடாது!!!?? நீங்க அழகா எழுதற்துனால, எங்க சஜஷன்!

    ReplyDelete
    Replies
    1. வாவ்.. தலையில ஐஸ் வச்சது போல இருந்தது சார்.. ட்ரை பண்றேன் சார்..

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...