Friday, June 6, 2014

ஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..


இன்ட்ரோ  
                          சுவைத்து சாப்பிடக் கிடைத்த ஒரு வரம் தான் இந்த வாழ்க்கை என்ற ஒன் லைனரோடு தொடங்கும் படம், வாழ்க்கையை ருசிக்க ஒரு துணையும் வேண்டும் என்பதோடு முடிகிறது. மொழி, அபியும் நானும், தோனி வரிசையில்  உணர்வுப் பூர்வமான படங்களை  தயாரித்து வழங்குவதற்காகவே ப்ரகாஷ்ராஜுக்கு ஒரு "ஒ" போடலாம்.




கதை         
                            "இந்தப் பொறப்புதான் ருசித்து சாப்பிடக் கிடைத்தது" ன்னு கைலாஷ்கர் தமிழையும் சேர்த்து சுவைத்து சாப்பிடுவதோடு ஆரம்பம் ஆகிறது படம். பெண் பார்க்க செல்லுமிடத்தில் பெண்ணை மறந்து வடையை ருசித்து அதை செய்த சமையல்காரனை வீட்டுக்கு கூட்டி வரும் அளவுக்கு ரசனையுடன் சாப்பிடும் காளிதாசுக்கு, சிறுவயதில் தன் தாய் செய்து கொடுத்த 'குட்டி தோசை' ( அதென்ன குட்டி தோசைன்னு தெரியல, தெரிஞ்சவங்க இதுக்கு ரெசிபி அனுப்புங்கப்பா) நினைவில் நிழலாட அதை சாப்பிட விரும்பி ஒரு ராங் நம்பருக்கு போன் செய்கிறாள் கௌரி. தவறான இணைப்பு நட்பாய் பின் காதலாய் மலர அதை சொல்ல, நேரில் சந்திக்க தயங்கியபடியே இருவரும் தன் வீட்டில் இருக்கும் இளசுகளை அனுப்ப அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக இன்டர்வெல்.. இதற்கு மேல் கதை சொன்னால் அதன் 'சுவை' குறைந்து விடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              பிரகாஷ்ராஜ்- மனிதர் என்னவாய் ரியாக்க்ஷன்கள் கொடுக்கிறார். ஆதிவாசி தலைவனை மீட்க போலிஸ் ஆபிசருடன் மோதும் போது கோபக் கனல் வீசும் போதும், நட்பு காதலாய் மாறும் தருணத்தில் வெட்கப் புன்னகை சிந்தும் போதும், கிளைமாக்ஸ் காட்சியில் வேண்டுமென்றே ஸ்பீட் பிரேக்கரில் வண்டியை விட்டுவிட்டு நமட்டு சிரிப்பு சிரிக்கும் போதும், கலக்கல் பாஸ். படத்தில் ஒரு கேரக்டர் "உனக்கு நான் தான் வில்லன்" எனக் கூற "எனக்கேவா" என பிரகாஷ் கூறும் போது தியேட்டரில் சிரிப்பலை. சினேகாவின் கம்-பேக் மூவி. ஆனால் அவருடைய பெஸ்ட் மூவி இதுதான் எனலாம். மலையாள ஒரிஜினலில்  ஸ்வேதா மேனன் செய்த காரெக்டரை பல மடங்கு பெட்டராக செய்திருக்கிறார். 

                               தம்பி ராமையா வழக்கம் போல் காமெடி ப்ளஸ் நெகிழ்வு தரும் காட்சிகள் இரண்டிலும் புல் மார்க்ஸ் வாங்குகிறார். சமையலில் குறை சொல்லி வீட்டை விட்டு அனுப்பும் காட்சியில் தம்பி ராமையா, 'அண்ணன்' ராமையாவாகிறார்.  இளங்கோ, ஊர்வசி, ஐஸ்வர்யா புதுமுகங்கள் தேஜஸ், சம்யுக்தா ஆகியோர் ஆங்காங்கே தலை காட்டியுள்ளனர். தேஜஸ் மற்றும் சம்யுக்தா நடிக்க வாய்ப்பிருந்தும் சுமார் பெர்பார்மென்ஸ் தான். அதிலும் "தெரிந்தோ தெரியாமலோ" பாடலில் இந்த ஜோடி ரோமென்ஸ் பண்ண  வரும்போது தெரிந்தோ தெரியாமலோ பலர் கேண்டின் பக்கமாக சென்றதும் நடந்தது.


இசை-இயக்கம்-ஒளிப்பதிவு
                               படம் நெடுக வியாபித்திருப்பது மேஸ்ட்ரோ தான். காட்சியின் பின்னணி இசையும் பாடல்களும் பின்னிப் பிணைந்து வருவதால் ரசிகர்கள் காட்சியோடு ஒன்றிப் போக முடிகிறது. கிளைமாக்ஸ் கார் காட்சியில் வரும் துள்ளல் இசை நம் மனசுக்குள்ளும் ஒரு குஷியை உண்டு பண்ணுகிறது. ஆஷிக் அபுவின் கதைக்கு விஜி மற்றும் ஞானவேலின் வசனங்களை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியும் இருக்கிறார் பிரகாஷ். வெல்டன்! ப்ரீதாவின் ஒளிப்பதிவு எச்சில் ஊற வைக்கும் டைட்டில் சாங் மற்றும் ஒவ்வொரு பிரேமிலும் அவர் உழைப்பு தெரிகிறது. 

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 காற்று வெளியில் மற்றும் இந்தப் பொறப்பு தான் பாடல்கள் ரசிக்கும் படி இருக்கிறது. படத்தின் ஓட்டத்தோடு கூடிய எல்லா காட்சிகளுமே ரசித்து பார்க்கும்படி இருந்தன. குடும்பத்தோடு முறுக்கு சாப்பிட்டபடியே ரசிக்கலாம்!

                     Aavee's Comments - Tasty.


42 comments:

  1. I expected this good review from you.
    Thanks,
    Vijay

    ReplyDelete
  2. வணக்கம்
    ஆவியப்பா

    புதிய படம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    பிரகாஷ்ராஜீன் நடிப்பு நன்றாக இருக்கும்....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. //ஆவியப்பா// படையப்பா மாதிரி கூப்படறீங்களே..

      நன்றி..

      Delete
  3. வணக்கம்

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம் ஆவி, படம் பார்க்க தோன்றுகிறது. பார்த்து விட்டு சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பார்த்துட்டு சொல்லுங்க..

      Delete
  5. ரகுவரனுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம்தான் பிரகாஷ்ராஜ் !

    ReplyDelete
    Replies
    1. ஆமா அண்ணே.. செம்ம ஆக்டிங்..

      Delete
  6. நன்றி. படம்பார்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்க ரொம்ப நாளா காணோங்க..

      Delete
  7. குடும்பத்தோட பார்த்து ரசிக்கற படம்ங்கறதே இந்த நாட்களில் அபூர்வமான விஷயமாகிட்டது. அந்த வகைல ஆவியின சிபாரிசை ஏற்று கை தட்டி ரசிக்கப் படம் பார்க்கிறேன்.

    உங்கிட்ட உண்டான கெட்ட பழக்கம் என்னன்னா.... எப்ப விமர்சனம் எழுதினாலும் இது மலையாளப் படம், தெலுங்குப் படம்னு எதையாச்சும் சொல்லிடுற... மலையாளத்துல என்ன டைட்டில்னு சொல்ல வேணாமோ...? எல்லாரும் ஆவி மாதிரி ஆல் லாங்வேஜ்ல மூவி பாக்கறவாளா என்ன...? (தெரிஞ்சு வெச்சுண்டு என்னண்ணே பண்ணப் போறீர்னு அடுத்து ஜீ.சு. கொக்கி போடுவன்... சும்மா ஒரு ஜெ.நா. தான்யா....)

    ReplyDelete
    Replies
    1. மலையாளப் படத்தோட பேர் சால்ட் அண்ட் பெப்பர். (லால் நடிச்சது.) ஜெ.நா புரியுது.. ஜீ சு புரியலையே..!

      Delete
    2. அது ஜீவன் சுப்பு... ஹி... ஹி... ஹி...

      Delete
  8. இங்கே இன்னிக்கு ரிலீஸ் ஆகும்ன்னு சொல்றாங்க..இன்னும் கன்ஃபார்ம் ஆகலை. வெயிட்டிங்...!

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா, நல்லவேளை ஒரு படம் உங்களுக்கு முன்னாடி போடா முடிஞ்சதே.. அந்த தியேட்டர் ஆபரேட்டருக்கு சுக்ரியா சொல்லிடுங்க..

      Delete
  9. விமர்சனம் அருமை நண்பரே அருமை
    அவசியம் படம் பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா குடும்பத்தோடு பார்க்கலாங்க..

      Delete
  10. நேரமில்லை... ஆனால்..........................

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் பார்க்கிறேன்னு சொல்றீங்களா..?

      Delete
  11. விமர்சனத்துக்கு நன்றி,ஆ.வி.சார்!(அச்சச்சோ..........கொள்கையைக் கோட்ட விட்டுட்டனே!){போனாப் போவுது......க........ர் கூட கொள்கைய விட்டுட்டாரு தானே,ஒன்லி பேமிலி!} :) :)

    ReplyDelete
    Replies
    1. என்ன கொள்கை? ஆவி சார் நலமா ன்னு கேப்பீங்க.. அதுவா?

      அது சரி அது யாரு _க_ர்? யாராவது அரசியல்வாதியா? இந்த Hints Development ல நான் வீக்கு..

      Delete
    2. ஊஹூம்..........விமர்சனம்,படம் பாத்தப்புறம் படிக்கணும் கிற கொள்கை!

      Delete
    3. ஐயோ.........அது(க/கொ லைஞர்)தாத்தா!ஒன்லி பேமிலி ன்னு எழுதியிருக்கனே?

      Delete
    4. ஒ.. அப்படி..

      Delete
  12. அப்ப பார்க்கணும் போல ... அப்படியே அந்த "kuttydosa" ரெசிபி கிடைச்சா அனுப்புங்க ... :P

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அனுப்பறேன் பா.. :)

      Delete
  13. வீடுகல்ல கொழந்தைங்க சாப்பிடும் போது போதும் போதும்னு அடம் பிடிப்பாங்க அப்ப இந்த அம்மாக்கள் ஆசையா சுட்டுப் போடுவாங்களேப்பா. ...ஆவிப்பா. ..அதாம்பா. (நடிகர் ராகவன் வாய்ஸில் படிக்கவும்)

    ReplyDelete
    Replies
    1. சைஸ் குட்டியா இருக்குமா?

      Delete
    2. அழகான சூப்பரான ஒரு ‘குட்டி’ தோசை சுட்டுத் தந்தால் அது ‘குட்டி தோசை’தானே.. ஹி... ஹி... ஹி....

      Delete
  14. அருமையான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  15. நல்ல விமர்சனம் - அபியும் நானும், மொழி போன்ற படங்களில் பிரகாஷ் ராஜ் நடிப்பு பார்த்து வியந்திருக்கிறேன். இப்படமும் அப்படி இருக்கும் எனத் தெரிகிறது. பார்க்க முயல்கிறேன்.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...