Friday, June 27, 2014

ஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்

                       
இன்ட்ரோ  
                       இந்த படத்திற்கு புக் பண்ண நேற்று  தியேட்டர் வெப்சைட் திறந்த போது இந்த படத்திற்கு எனக்கு முன்னால் ஒரே ஒரு ஜீவன் புக் செய்திருந்தது.
அதே சமயம் ட்ரான்ஸ்பார்மர் படத்திற்கு ஹவுஸ் புல் போர்டு தொங்கியது.
 
                       ஹாலிவுட்டை நாம் இன்னும் நிமிர்ந்து பார்க்க காரணம் மொக்கை கதையையும், மோஷன் கேப்சரில் அழகாக வார்த்துக் கொடுப்பது தான். நாம் இன்னும் அவன் வாயை பார்த்தபடி நிற்பதற்கு காரணம் அருமையான கதையையும் கேவலமாக எடுப்பதுதான்.கதை         
                          விவாகரத்து கிடைக்கும் நாளை எதிர் பார்த்திருக்கும் ஒரு கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரே பிரசவத்தில்  பிறந்த நான்கு பெண்கள்  அவர்கள் நால்வரும் வாய் பேச முடியாத, காது கேட்கும் திறன் இழந்த மாற்றுத் திறனாளிகள். கொஞ்சம் கொஞ்சமாக தூக்க மாத்திரைகள் சேர்த்து காதல் தோல்விக்காய் தற்கொலை செய்ய தயாராக இருக்கும் ஒரு வாலிபன்,  தன் மனதிற்கு பிடித்த காதலன் கரம் பிடிக்க பெற்றோர் வீட்டை விட்டு வரும் இளம் ஆசிரியை. விவாகரத்து, தற்கொலை, திருமணம் எல்லாம் மாலை மூன்று மணிக்கு என்று குறிக்கப் பட்டிருக்க ஆசிரியை பள்ளிக் குழந்தைகளுடன் ஒரு மிருகக் காட்சி சாலைக்கு செல்ல, அங்கே தன் இருப்பிடத்திலிருந்து வெளிவரும் ஒரு பாம்பை (அனகோண்டா??)  கண்டு எல்லோரும் அலறியடித்து ஓட, இந்த நான்கு குழந்தைகள் மட்டும் மாட்டிக் கொள்ள அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் கதை.;

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                               நான்கு குழந்தைகளும் சிறப்பான நடிப்பு, எல்லோரும் ஒரே போல இருப்பதால் யார் சிறப்பு அதிகம் என்று சொல்ல முடியாத நிலை. ஆனால் அவர்கள் நடிக்க கொஞ்சமே வாய்ப்பு அளித்திருப்பதால் கொடுத்த வாய்ப்பை சிறப்பாய் செய்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். காதல் மன்னனில் கண்களைச் சிமிட்டி சிமிட்டி 'தல' யை காதலித்த மானு இதில் மானு ஆண்ட்டி. நான்கு குழந்தைகளும் உள்ளே மாட்டிக் கொண்டுவிட வெளியே அழுது புலம்பும் டியூட்டி. படம் நெடுக வருவது நிதின் சத்யா மற்றும் மாளவிகா ஜோடி. நிதின் சத்யா நல்ல முன்னேற்றம். சரளமான காமெடி வருகிறது. மல்லு தேசத்திலிருந்து புதிய இறக்குமதி மாளவிகா. கண்களால் கவிதை பேசுகிறார். ஒரு நல்ல டைரக்டர் படத்தில் நடித்தால் இப்போதிருக்கும் சில நடிகைகளின் பாடு திண்டாட்டமாகி விடும். வையாபுரி, இமான் அண்ணாச்சி வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள்.


                                                                                                அமைதியான அறிமுகம் 
                                    'ஜெயம்' ராஜா முதல் படத்திலேயே அசத்துகிறார். தொடர்ந்து நடிக்கலாம். ஒரு இயக்குனர் நடிகராகும் போது இருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அமைதியாக அடுத்த வீட்டு அங்கிள் மாதிரி வந்து போகிறார்.


இசை-இயக்கம்-எடிட்டிங் 
                                 .எடிட்டிங் VT விஜயன். அழகு.. ஒவ்வொறு காட்சியும் எவ்வளவு நீளம் இருக்கணுமோ அவ்வளவே இருக்கிறது. சரி படமே, நூறு நிமிடம் தான் அதுல இவரு இதுக்கு மேல என்ன வெட்டறது. இசை நாகா சுமார். "கதிரு, கதிரு" பின்னணி இசை சூப்பரு. இயக்குனர் குரு ரமேஷ் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. திரைக்கதை சிறப்பாய் இருந்திருந்தால் படம் ரசிக்கும்படி இருந்திருக்கும்.. குறிப்பாய் விவாகரத்து கோரி நிற்கும் தம்பதிகளுக்குள் இருந்த அன்னியோன்யத்தை முதல் பாதியில்  ஓரிரு காட்சிகள் வைக்க வாய்ப்பிருந்தும் தவற விட்டது. விறுவிறுப்பாய் குழந்தைகளுக்கு நேரும் ஆபத்தை சொல்லிக் கொண்டிருக்கையில் அண்ணாச்சியின் மயில் குஞ்சு காமெடி போன்ற காட்சிகள் படத்தை பலவீனப் படுத்திவிட்டது.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 நிதின் சத்யாவின் சில காமெடிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

           Aavee's Comments - அமேசான் காட்டிலிருந்து அனகோண்டாவை எதிர்பார்த்து சென்ற மக்களுக்கு எர்வாமாட்டின் கொடுத்தனுப்புகிறார்கள் !25 comments:

 1. கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து காதல் தோல்விக்காய் தற்கொலை செய்ய தயாராக இருக்கும் ஒரு வாலிபன்/// எதய்யா சேர்த்தான் அவன்? பிரியலையே....

  ஆக மொத்தத்துல அனகோண்டாவை நினைச்சு தண்ணிப் பாம்பை அடிச்சிருக்காங்கன்றே... மீ தப்பிச்சேன்...!

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. தூக்க மாத்திரைகள் விட்டுப் போச்சு.. இப்ப சேர்த்துட்டேன்..

   Delete
 2. நிதின் சத்யா? ஏனோ எனக்குப் பிடிக்காது!

  மானு ஏனோ சாந்தி கிருஷ்ணாவை நினைவு படுத்துகிறார்.

  ஜெயம் ரவி அண்ணன் ராஜாவுக்கு மாமா போல இருப்பார் போல!

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஒருத்தரை பிடிக்காதுன்னு சொல்லி இப்பத்தான் கேக்குறேன் சார்..

   புடிக்கற அளவுக்கு இன்னும் நடிக்கலைங்கறது உண்மைதான்..

   மானு அழகு. சாந்தி கிருஷ்ணா பேரழகு..

   Delete
  2. சாந்தி கிருஷ்ணா யாரு?

   Delete
  3. நீர் எல்லாம் விஜய் Fan ஆ பாஸு.. நேருக்கு நேர்ல சூர்யாவுக்கு அக்காவா வருவாங்களே..

   Delete
 3. Sir, konjam trailer add pannungalen, paarthu mudivedukka vasathiyaaga irukkum. valakkam polave intha vimarsanamum naruk - suruk !

  ReplyDelete
  Replies
  1. https://www.youtube.com/watch?v=ek9vHpyP_xY&feature=kp

   வேண்டாம் பாஸ். டைம் வேஸ்ட் பண்ணாதீங்க..

   Delete
 4. ம்ம்ம்ம் படம் சுமார்தான் போல......உங்கள் விமர்சனம் அதைத்தான் சொல்லுது இல்லையா ஆவி?!....நீங்க சொல்றது போல அருமையான கதையை வீணடிப்பாங்க.....நேத்து கூட ராத்திரி மூன்றாவது கண்...படம் பார்க்க நேர்ந்தது.....ஜெயா மூவிஸ் சானல்னு நினைவு.....த்ரில்லர் நல்ல கதை த்ரில்லர் ஆனா செம லூப் ஹோல்ஸ் படத்துல.....நிறைய காட்சிகள் கேள்விகள எழுப்புது.......

  கதை கூட கொஞ்சம் ஏதோ மாதிரிதான் இருக்கு போல....ஸோ நாட் இன் த லிஸ்ட்!

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சுமார் சார்.. எல்லா பதிவுகளுக்கும் உங்க ரிப்ளை பார்த்து அசந்துட்டேன்.. நன்றி.. நன்றி..

   Delete
 5. படம் மொக்கைன்னு நேத்தே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு, இருந்தாலும் போய் பாத்திருக்கீங்கன்னா அது எங்க மேல வச்சிருக்கிற உண்மையான அன்பும் பாதுகாப்பு உணர்வும் தான்... மிக்க நன்றி ஆவி...

  ReplyDelete
  Replies
  1. இப்ப நீங்க ஒரு பாட்டு பாடியிருக்கணும்.. அப்பதான் பொருத்தமா இருக்கும்.. "அந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு, அது மன்னவன் பேரு..அந்த........" மீதி வரிகள நீங்கதான் பாடணும்.. ஹஹஹா ;-)

   Delete
 6. Replies
  1. தேங்க்ஸ் நண்பா..

   Delete
 7. //அமைதியாக அடுத்த வீட்டு அங்கிள் மாதிரி வந்து போகிறார்./// உங்களுக்கே அங்கிளா!

  ReplyDelete
  Replies
  1. என்னடா யாரும் இதை சொல்லலையேன்னு பார்த்தேன்.. வாங்க சார், வாங்க..

   Delete
 8. Replies
  1. அருடிட---- அப்படின்னா?

   Delete
 9. நீங்க ரெண்டாவது ஜீவன் சரி அதற்கு அடுத்து எத்தனை ஜீவன் வந்தாங்க என்ன தான் சொல்லுங்க டிக்கெட் டுக்கு முண்டியடிக்கிற படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு போற திரில் இருக்கே அது தனி தான்

  ReplyDelete
  Replies
  1. அது எல்லாரும் பண்ணுவாங்களே.. இதுக்குதான் ஒரு தனி தைரியம் வேணும்..

   தியேட்டர் உள்ளே போன போது கொஞ்சம் திருப்தி சுமார் இருபது பேர் இருந்தாங்க..

   Delete
 10. வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///எங்கள் மேல் எத்துணை பற்றிருந்தால்,இப்படி மொக்கைகளைப் பார்த்து விமர்சித்து,எங்கள் பர்சையும்,நேரத்தையும் காப்பாற்றி..........நன்றி,நன்றி,நன்றி!!!

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails