இன்ட்ரோ
படம் பார்க்க செல்லும் முன் என் உறவினர் ஒருவர் என்னிடம் "நான் விமல் நடிச்சு ஒரு படமும் பார்த்தது இல்ல" என்றார்.. நான் பதிலுக்கு "நானும் விமல் 'நடிச்சு' ஒரு படமும் பார்த்தது இல்ல" என்றேன்.. இதிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை.
கதை
தன் பேரனைக் காண வரும் கிராமத்து மஞ்சப்பை ராஜ்கிரண் நகரத்து பிளாஸ்டிக் பைகளுக்கு நடுவே சிக்கி 'டர்' ஆவது தான் கதை. முதல் சந்திப்பில் ஏற்படும் வெறுப்பில் காதலியும் வெறுக்க, தான் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டில் எல்லோரும் வெறுக்க, தன்னை வளர்த்து ஆளாக்கிய தாத்தா செய்யும் சேட்டைகளை அமைதியாக பொறுத்துக் கொள்ளும் நாயகன் தன் கனவு துண்டாகிப் போகும்போது வெடிக்கிறான். அதை தாங்கிக் கொள்ள முடியாத தாத்தா துவண்டு போகிறார். அம்புட்டு தான் மேட்டரு.
எல்லாம் ஒக்கே, எதுக்காக அவர் செய்யுறத எல்லாம் சிரிச்சுகிட்டே ஏத்துக்கணும். என்ன செய்யலாம் செய்யக் கூடாதுன்னு சொல்லிக் கொடுக்கலாம் இல்லையா? ( உ.ம் அபார்ட்மென்ட் பவுன்டென்னில் தாத்தா தினமும் குளிக்கும் காட்சி) ஏன் கிராமங்களில் பாத்ரும் வசதிகள் இன்னும் வரவில்லையா என்ன? சோகப் பாட்டெல்லாம் தமிழ் சினிமா தலைமுழுகி பல வருஷம் ஆச்சே.. டைரக்டர் எங்க சார் இருந்தீங்க இவ்வளவு நாளும்?
எல்லாம் ஒக்கே, எதுக்காக அவர் செய்யுறத எல்லாம் சிரிச்சுகிட்டே ஏத்துக்கணும். என்ன செய்யலாம் செய்யக் கூடாதுன்னு சொல்லிக் கொடுக்கலாம் இல்லையா? ( உ.ம் அபார்ட்மென்ட் பவுன்டென்னில் தாத்தா தினமும் குளிக்கும் காட்சி) ஏன் கிராமங்களில் பாத்ரும் வசதிகள் இன்னும் வரவில்லையா என்ன? சோகப் பாட்டெல்லாம் தமிழ் சினிமா தலைமுழுகி பல வருஷம் ஆச்சே.. டைரக்டர் எங்க சார் இருந்தீங்க இவ்வளவு நாளும்?
ஆக்க்ஷன்
ராஜ்கிரண் வேட்டியை மீண்டும் ஒருமுறை அண்டர்வேருக்கு மேல் தூக்கிக் கட்டி (கிராமத்து மனிதராம்!!) நடித்திருக்கிறார்.. பெரும்பாலான இடங்களில் வாங்கின காசுக்கு மேல கூவியிருக்கிறார். லக்ஷ்மி மேனனின் அப்பாவை அறையும் காட்சியில் நல்ல நடிப்பு.. லக்ஷ்மி மேனன் விஷாலுக்கு மட்டுமல்ல கதைக்கு தேவைப்பட்டால் யாருக்கு வேண்டுமானாலும் லிப்லாக் செய்யத் தயார் என்ற அறிவிப்பை வைத்தாலும் வைத்தார்..செம்ம ரெஸ்பான்ஸ். அவர் அணிந்து வந்த சுடிதார் எல்லாம் நன்றாக இருந்ததாக பின் சீட்டில் ஒரு பெண் கூற இல்லல்ல நான் சிகப்பு மனிதன் ல தான் அவ சுடிதார் நல்லா இருந்தது என மற்றொரு பூங்குயில் கூறிக் கொண்டிருந்தது.
தமிழ் சினிமாவில் டி.ஆர், சசிக்குமாருக்கு பிறகு சிட்டி, வில்லேஜ் எந்த கேரக்டருக்கும் தாடியுடன் லோ-பட்ஜெட்டில் ஒரு ஹீரோ வேண்டுமென்றால் அது நம்ம விமலுக்கு தான் போகும் என்பதில் ஐயமில்லை. டயலாக் டெலிவரி அப்ப்பப்பா.
தமிழ் சினிமாவில் டி.ஆர், சசிக்குமாருக்கு பிறகு சிட்டி, வில்லேஜ் எந்த கேரக்டருக்கும் தாடியுடன் லோ-பட்ஜெட்டில் ஒரு ஹீரோ வேண்டுமென்றால் அது நம்ம விமலுக்கு தான் போகும் என்பதில் ஐயமில்லை. டயலாக் டெலிவரி அப்ப்பப்பா.
இசை-இயக்கம்-தயாரிப்பு
'என்'. லிங்குசாமி தயாரிக்க, 'என்'.ராகவன் இயக்க, 'என்'.ரகுநாதன் இசையமைக்க என்னே ஒரு படம்..! பொதுமக்கள் யாரும் இந்தப் படம் ஓடும் தியேட்டருக்கு அருகில் கூட செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.. மீறி செல்பவர்களின் உடல்/ மன சேதத்திற்கு கம்பெனி பொறுப்பாகாது.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
முதல் பாடலின் நடனம் மற்றும் டைட்டில் கார்டில் நாலு பேர் அசால்ட்டாக நடந்து வந்து நின்றவுடன் திருப்பதி பிரதர்ஸ் என்று வரும் காட்சி ரசிக்கும்படி இருந்தது!
Aavee's Comments - Yellow yellow dirty fellow!
வணக்கம்
ReplyDeleteஆவியப்பா.
கதைக்கரு நன்றாக இருக்கிறது.. படம் திரைக்கு வந்து சில நாட்கள் ஓடியபின்தான் படம் பற்றி பேசப்படும் தகவலுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கதைக் கரு, ராஜ்கிரண் எல்லாமே ஒக்கே.. ஆனா எடுத்த விதம் படு மோசம்.. பயங்கர போர்..
Deleteபேசப்ப்படுமான்னு பார்ப்போம் பொறுத்திருந்து..
வணக்கம்
ReplyDeleteத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி..
Deleteநாந்தாம்லேய் முத ஆளு இங்கே ஆனா படம் ஓடும் திசைப்பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேம்லேய்.
ReplyDeleteஹஹஹா.. ரூபன் முந்திகிட்டாப்புல அண்ணே..
Delete//டம் ஓடும் திசைப்பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேம்லேய்.//
தப்பிச்சுட்டீங்க அண்ணே..
அடடா வடை போச்சே...
ReplyDeleteமீண்டும் ஒரு நய்யாண்டி........?
ReplyDeleteநய்யாண்டி அளவுக்கு மோசமில்லை பாஸ்.. ராஜ்கிரண் நடிப்பை/காமெடியை ஆதித்யாவில் பார்த்து ரசிக்கலாம்.. நய்யாண்டி பேரை கேக்கும் போதே கூசுதே..
Deleteஆவி பாஸ்,
ReplyDeleteஇசை அமைப்பாளர் பெயர் .என்.ஆர்.ரஹ்நந்தன், ரஹ்மானின் சீடர் என்பதால் நந்தன் என்ற பெயருக்கு முன்னர் ரஹ் எனப்போட்டுக்கிட்டாரம்,அவரை ரகுநாதன் ஆகிட்டீர் அவ்வ்!
# விஷாலின் லிப் லாக்குக்கு முன்னரே ஆரம்பிச்ச படம் இது, விமல் மற்றும் களவாணி இயக்குனர் சற்குணத்தின் மார்க்கெட் டவுன்(சற்குணம் தயாரிச்சு முடிக்க முடியாமல் ,லிங்குசாமிக்கு கைக்கு போச்சாம்) ஆகியவற்றால் ரொம்ப நாளாதொங்கிட்டு இருந்து வருது ,எனவே இங்கேவே லிப்லாக் போட்டாச்சு அங்கே போட்டால் என்னனு விஷாலுக்கும் போட்டிருக்கும் பாப்பா அவ்வ்!
# நடிக்க வாய்ப்பெ கிடைக்க்கலைனு எல்லாம் பொலம்புவாங்க ,வாய்ப்பு கிடைச்சா நடிக்கிறத தவிற மத்த எல்லாம் செய்வாங்க @ விமல் :-))
,அவரை ரகுநாதன் ஆகிட்டீர் அவ்வ்!
Deleteஅச்சச்சோ.. சமூக தளங்களில் கூட Ragunandhan ன்னு தான் போட்டிருந்தது.. பட், a மிஸ்டேக் இஸ் a மிஸ்டேக்.. :)
//இங்கேவே லிப்லாக் போட்டாச்சு அங்கே போட்டால் என்னனு// இருக்கும் இருக்கும்..
Delete//வாய்ப்பு கிடைச்சா நடிக்கிறத தவிற மத்த எல்லாம் செய்வாங்க @ விமல் :-))//
Deleteஇத்தனை படம் நடிச்சாச்சு, பேஸ் எக்ஸ்பிரஷன் கொஞ்சம் .. ம்ஹும்..
யோவ் ஆவி... நான் என்ன வச்சிக்கிட்டாய்யா வஞ்சனை பண்றேன்.. கேனை மாதிரி கழுத்தைச் சாய்க்கறதையும், வசனத்தை ஒப்பிக்கறதையும் விட்டா நெசம்மா எனக்கு வேற எதுவும் தெரியாதுய்யா.... :: விமல்.
ReplyDeleteடிரெய்லர்ல பார்த்தப்பவே மைல்டா ஒரு டவுட்டு இருந்துச்சு எனக்கு. இப்ப கன்பர்ம் ஆய்டுச்சு. தியேட்டர் இருக்கற திசைக்கே ஒரு கும்பிடுய்யா....
இதுல தலைவர் சாப்ட்வேர் இஞ்சினியர் வேற.. ஒரு மாசத்துல செய்து முடிக்க வேண்டிய ப்ராஜெக்டை மூணு நாள்ல முடிச்சு குடுப்பாராம்.. தாங்கல..
Deleteஎச்சரிக்கைக்கு நன்றி நண்பரே
ReplyDelete:)
Deleteஐயோ....!!!
ReplyDeleteஇதில் ஒரு எஸ் பி பி பாடல் நன்றாயிருந்தது. முக நூலில் ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். பழைய பூந்தோட்டக் காவல்காரன் படப் பாடலான 'பாடாத தெம்மாங்கு' பாடலை நினைவு படுத்தும் பாடல்.
உண்மைதான், அந்தப் பாடலை தனியாக கேட்டபோது ரசித்தேன்.. படத்தில் அதுவும் இரண்டாவது முறை வரும்போது நொந்தே விட்டேன். படத்தின் டோனுக்கு துளியும் செட் ஆகவில்லை. (கிராமத்து படத்துக்கு ஏற்ற பாட்டு அது)
Deleteஇவர் ஏன் இவ்ளோ அதிர்ச்சி ஆகரார் அந்த பேப்பர் படிக்கிறவரா இருப்பாரோ?
Deleteஹஹஹா
Deleteஅந்தப் பக்கமே போகலை சாமீ...!
ReplyDelete:)
Deleteவணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///விமர்சித்தமைக்கு நன்றி!///என்ன ஒரு முரண்?பார்க்க வேண்டாம்,அந்தப் படம் ஓடும் தியேட்டர் பக்கம் தலை வைத்தும் படுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை.மறு பாராவில் ஆவியை டச் செய்த காட்சி/பாடல் என்று.............அப்புறம்,எப்படிய்யா நாங்க இதையெல்லாம் சீர் தூக்கிப் பாக்குறது?ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteசார், நீங்க சரியா கவனிக்கல.. ஆவியை டச் செய்த காட்சி என்று நான்கு பேர் நடந்து வரும் காட்சியை சொல்லியிருந்தேன்.. அது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் கம்பெனியின் டைட்டில் கார்ட்.. படத்தினுடையது அல்ல.. :) :)
Deleteபடத்தோட டைட்டிலே கொடுமையா இருக்கப்பவே நினைச்சேன்! நல்ல காமெடியான விமர்சனம்!
ReplyDeleteடைட்டில் ஒக்கே தான் நண்பா.. கதையில் தான் ஓட்டை..
Deleteஇதைப்போயி பூவே பூச்சூட வாவோடு ஒப்பிட்டு.........!?
ReplyDeleteஅச்சச்சோ அந்தத் தப்பை யார் செய்தது..?
Deleteஆவி கதை டப்பா கதையாக இருந்தாலும்.......அதைச் சரிகட்ட நல்ல திரைக்கதையும், காட்சிகளும் அமைந்து விட்டாலும் வெற்றி பெற்றுவிடும்.....ஆனால் நீங்க சொல்லியிருக்கறத பார்த்தா......இந்தக் கதை நல்லாத்தான் இருக்கு ஆனா எடுத்த விதம் நல்லாலனு தோணுது.....நன்றி ஆவி! சிடி ல கூட பார்க்கத் தோணல........தங்கள் விமர்சனம் மிகவும் ஒரு நல்ல கைட் எங்களுக்கு....அதனாலதான்...
ReplyDeleteநீங்க சொல்றதும் சரிதான்.. இதைக் கூட நல்லா எடுத்திருக்கலாம் தான்..
Delete// எடுத்த விதம் நல்லாலனு தோணுது.....நன்றி ஆவி! சிடி ல கூட பார்க்கத் தோணல........தங்கள் விமர்சனம் மிகவும் ஒரு நல்ல கைட் எங்களுக்கு...// :) :)
ஹஹா... எதோ கிராமத்த பத்தின கதைனால ஒரு தடவ பாக்கலாம்ன்னு சொல்ல கேட்ருக்கேன். ஆனா இங்கயுமா குளியல் சீன்? அந்த அளவு அப்பாவி கிராமத்தான் யாரும் இப்ப கிடையாது
ReplyDeleteஅதுதான் படத்தோட தொய்வுக்கு காரணம். எல்லா ஊர்லயும் இன்டர்நெட் வரைக்கும் வளர்ந்திடுச்சு.. இப்ப போய் இப்படி காட்டிகிட்டு.. தவிர வாரவாரம் தாத்தாவை போய் சந்திக்கிற ஹீரோ தாத்தா முதல் முறையா சென்னைக்கு வரும்போது பிரயாணம் எப்படி இருந்ததுன்னு கேட்டா பரவாயில்ல.. உடம்புக்கு நல்லா இருக்கீங்களான்னு கேட்கிறான்.. இது போல பல கிளேஷேக்கள் உண்டு படத்தில்..
Deletesounds like copied from hindi movie Athiti tum kab jaoge
ReplyDeletesounds like copied from hindi movie Athiti tum kab jaoge
ReplyDeleteம்ம்ம்.. கொஞ்ச கொஞ்சம்.. ஆனா அந்த படம் சூப்பரா இருக்குமே. அதுல பரேஷ் ராவல் பின்னி எடுத்துருப்பாரே..!
Deleteayya padam sutha bore
ReplyDeletevimal kodumaida sami
kovai santhi theatre netru munthan paarthen kaalai show
enni 15 nabargal irundargal
vimal thonthi paduva endru koopidum pothu naalu saathu saath vendum pol irundathau
ஹஹஹா.. மாட்டிகிட்டீங்களா..நான் ஒரு நாலஞ்சு நண்பர்களை போகாம தடுத்து காப்பாத்திட்டேன்.. :)
Deleteஎப்படியும் தில்லியில் திரையிடப் போவதில்லை. அதனால் எனக்கு கவலையில்லை! :)
ReplyDeleteடி.வி.யில் விரைவில் போட்டுவாங்கன்னு சொல்லுங்க!