Thursday, June 5, 2014

ஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன் (Music Review)

                   
                    சென்னை, மதுரையை எல்லாம் அளவுக்கு அதிகமாக திரையில் காட்டிவிட்டதாலோ கோவையை மையப்படுத்தி வரும் படங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.. அந்த வரிசையில் வரும் மற்றொரு படம் இந்த வானவராயன் வல்லவராயன். கிருஷ்ணா, மா.க.பா ஆனந்த் நடித்து யுவனின் இசையில் வெளிவந்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் எப்படி இருக்குன்னு பார்ப்போம்..


1. "கொங்குநாட்டு தென்றலுக்கும்" - கொங்கு நாட்டின் பெருமைகளையும், அந்த ஊரில் வாழும் ஒரு அண்ணன் தம்பியின் அறிமுகத்தோடும் ஒலிக்கிறது இந்த பாடல். கார்த்திக் ராஜா மற்றும் வெங்கட் பிரபு பாடியிருக்கும் பாடலில் மண் மணம் மணக்கிறது..

2. "மனசு இங்கே" - மாணிக்கம் விநாயகம் கம்பீரமாக வாசிக்கும் ஒரு காதல் சோக கீதம், காதல் பிரிவில் தவிக்கும் நாயகனின் உணர்வை எடுத்துச் சொல்கிறது.

3. விஜய் யேசுதாஸ், ரேணு பாடியிருக்கும் ரோமென்ஸ் கலக்கல் இந்த  "தக்காளிக்கு தாவணிய"  பாடல்.  அத்துமீற நினைக்கும் நாயகன், அலர்ட்டாக இருக்கும் நாயகி ஜாலியாக பாடும் டூயட்.. சிநேகனின் இளமை துள்ளும் வரிகள் ரசிக்க வைக்கிறது..

4. நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் தன் சொந்தக் குரலில் பாடியிருக்கும் பாடல் "தரை மேல இருந்த நான்". ஓரிரு கேட்டலுக்கு பிடித்துப் போகிறது. கங்கை அமரனின் கேஷுவலான வரிகள் பாடலை நாம் முணுமுணுக்க ஏதுவாக மாற்றுகிறது.

5. "வாங்கம்மா வாங்கப்பா" பாடல் உறவினர்களை கல்யாணத்திற்கு வரவேற்று பின் காதல் கல்யாணத்தின் அட்வான்டேஜுகளை 'யுத்'களுக்கு  ப்ரியா ஹிமேஷ், ரஞ்சித், சத்யன் மற்றும் வாசுதேவன் எடுத்துரைக்கிறார்கள்.

6. "விடுடா பொண்ணுங்களே வேணாம்" - வழக்கமாக சந்தானத்தின் தோளில் சாய்ந்து கொண்டு ஹீரோக்கள் புலம்பும் பாடல். இப்போ சந்தானம் ஹீரோ ஆகிவிட்டதால் அநேகமாக மா.க.பா அந்த இடத்தை நிறைவு செய்கிறார். முகேஷின் குரலில் இந்தப் பாடல் காதலில் "விழுந்த" நாயகனின் புலம்பலாய்  ஒலிக்கிறது.


                           ஒரு சின்ன இடைவெளிக்கு பின் வந்திருக்கும் யுவனின் இந்த ஆல்பம் சுமாருக்கும் சற்று மேல் இருக்கிறது. மொத்தத்தில் வானவராயன் வல்லவராயன் - டீசன்ட்..!


17 comments:

 1. ஹீரோ புதுசா!?

  ReplyDelete
  Replies
  1. 35 வருச பழசுமாதிரி தான் தெரியுது.

   Delete
  2. // ஹீரோ புதுசா!?// புதுசு எல்லாம் இல்லக்கா.. இப்போ வெளியான யாமிருக்க பயமே, கழுகு போன்ற படங்களில் நடித்த கிருஷ்ணா தான்.. இவர் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை எடுத்த டைரக்டர் விஷ்ணுவர்தனின் தம்பி. "அஞ்சலி" படத்தில் இருவரும் குட்டிப் பசங்களாக நடிச்சிருப்பாங்க..

   Delete
  3. கூட இருக்கிற மா.க.பா உங்களுக்கு தெரியாம இருக்காது! சரிதானே?

   Delete
  4. யாஸிர் - ஹஹஹா..

   Delete
 2. கார்த்திக் ராஜா? யுவனின் சகோதரர்? யுவனின் குரலில் மறுபடியும் பாடல்? ம்...

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஸார், அவரே தான்..

   //யுவனின் குரலில் மறுபடியும் பாடல்//

   ஆனா ரெண்டு மூணு வாட்டி கேட்டப்புறம் தான் புடிச்சது.. வழக்கமான யுவன் மேஜிக் மிஸ்ஸிங்..

   Delete
  2. எது ஆவி...? கடுமையான வயிற்று வலியால பாதிக்கப்பட்டவன் கத்தற மாதிரி ‘போகாத்தே.....‘ன்னு ‘தீபாவளி’ படத்துல பாடுவாரே... ஸாரி, அழுவாரே... அந்த மேஜிக்கா...? ஹி.... ஹி.... ஹி....

   Delete
  3. ஸாஆஆஆஆர்ர்ர்ர்.. அது என் ஆல் டைம் பேவரைட் பாட்டு...

   Delete
 3. இனிமேல் தான் (கேட்க) ரசிக்க வேண்டும் ஆவி...

  ReplyDelete
 4. வணக்கம்,ஆ.வி சார்!நலமா?///(வழக்கம் போல)நேரம் கிட்டும்போது கேட்டுப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 5. வணக்கம்
  ஆவியப்பா...

  மா.க.பா ஒரு புது முக நடிகன் படம் நடிப்பதாக தகவல் அறிந்தேன் இனித்தான் கேட்டு ரசிக்கவேண்டும்...தகவலுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி ஆவி!

  ReplyDelete
 7. தகவலுக்கு நன்றி ஆவி. கேட்டுப் பார்க்கிறேன்.

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...