ரொம்ப நாளா டிரைவிங் லைசென்ஸ்ல அட்ரஸ் மாத்தணும்னு நினைச்சு போன வாரம் வியாழக்கிழமை தான் திடீர்னு ஞானோதயம் வந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் போனேன். நான் எங்க லைசன்ஸ் எடுத்தேனோ அங்க போய் கேட்டதுக்கு அவங்க "இப்போ RTO ஆபிஸ் நாலு zone ஆ பிரிச்சுட்டாங்க.. நீங்க போக வேண்டியது சவுத் சோன்" என்றார்.. அது எங்க மேடம் இருக்குன்னு கேட்கவும், அவங்க கிட்ட நூறு ரூபாய் கடன் கேட்டது போல முகத்தை வச்சுகிட்டு "பீளமேடு" ன்னு சொன்னாங்க.. "அத கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொன்னா என்னா" ன்னு கேட்டுட்டு (மனசுக்குள்ள தான்!) பீளமேடு வந்தேன். அங்க இங்கே கேட்டு ஆபிஸ் கண்டுபுடிச்சு போனா மணி பதினொண்ணு. யார்கிட்ட போய் கேக்கணும்னு தெரியாம முன்னாடி பணம் கட்டற கவுண்டரில் போய் கேட்டேன் "லைசென்சுல அட்ரஸ் மாத்தணும். யாரைப் பார்க்கணும்". உள்ளே இருந்த அம்மா "பி- பிளாக் ல போய் கேளுங்க" என்றார்.. நானும் கட்டிடத்தை இரு முறை சுற்றி வந்தேன். ஒரே ஒரு பிளாக் தான் இருந்தது.. மீண்டும் அதே அம்மாவிடம் சென்று "பி-பிளாக் எங்க இருக்கு" என்றேன்.. அவர் சற்றே கடுப்புடன் "பின்னால இருக்கு பாருங்க சார்" என்று தன் மானிட்டர் திரையை பார்த்துக் கொண்டே கூறினார்.
அவர் அறையை தாண்டி சிறிது தூரம் நடந்ததும் ஒருவர் காத்து உள்ளே வர ஜன்னலைத் திறந்து வைத்து முகத்தில் சிங்காரவேலனில் கருவாடு ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் போல் கர்ச்சீப்பை கட்டியிருந்தார். அவரிடம் சென்று "ஸார்.. இங்க பி பிளாக் எங்க" என்றேன். அவரோ "இதாம்பா பி-பிளாக்" என்றார்.. மொக்கை பிகரை எதிர்பார்த்திருந்த நித்தியானந்தருக்கு ஹன்சிகாவே எதிரில் வந்தது போல் எனக்கு வந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. "சார், என் டிரைவிங் லைசென்சுல அட்ரஸ் சேன்ஜ் பண்ணனும்." என்றேன். அவர் என்னிடம் வேறெதுவும் கேட்காமல் "நீங்க ஒரு NOC வாங்கணும். வாங்கி அதோடு ஐம்பது ரூபாய் பணம் கட்டுங்க" என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.. "ஸார்" இது நான். கேவலமான ஒரு லுக்கை என் மீது சிந்திவிட்டு "என்ன" என்பதுபோல் தன் கண்ணாடியை உயர்த்திக் கேட்டார். "இந்த NOC பாரம் எங்க கிடைக்கும்?" என்றேன்.. " 'முன்னால போய் கேளுப்பா" என்றார்" இன்னொரு கேள்வி கேட்டால் கேளுப்பா, கேளுடா ஆகிவிடும் என்பதை உணர்ந்த நான் முன்னாடி சென்றேன்.
பணம் கட்டற கவுண்டரில் கேட்கலாம் என்று யோசித்து பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் இருந்த ஒரு அறையின் உள் சென்று அங்கு வேலை செய்துகொண்டிருந்த ஒரு முதியவரிடம் போய் NOC பார்ம் எங்கு கிடைக்கும் என்பதை கேட்டேன்.. அவர் உதயம் NH4 படத்தில் கானா பாலா கேட்பது போல் "NOC பார்ம்மா , உன் கதைய மொதல்ல இருந்து சொல்லு" என்றார்.. மீண்டும் ஒரு முறை என் தேவையை சொல்லவும், ஏம்பா ஆலந்துறையும் சவுத்து, சிங்காநல்லூரும் சவுத்து. எதுக்குப்பா NOC வாங்கணும்?' என்று என்னைப்பார்த்து கேட்டார். "தெரியலீங்க அதோ அந்த பி-பிளாக்கில் இருந்தவர் தான் வாங்க சொன்னார்" என்றேன். "ஒண்ணுமே தெரிஞ்சுக்காம வேலை செய்யுறானுக பாரு." என்று அவரைத் திட்டிவிட்டு வெளிய போய் ஒரு ஒயிட் பேப்பர் வாங்கி அதுல விலாசமாற்றம் கோரி ஒரு லெட்டர் எழுதி அம்பது ரூபா பணம் கட்டுப்பா" என்றார்.
'வெளியே' என்று அவர்கள் சொன்னது வெளியே இருந்த ஒரு ஸ்டேஷனரியை என்பது என் மூளை செல்களுக்கு எட்ட சிறிது நேரம் பிடித்தது. அங்கு சென்று ஒரு ஒயிட் ஷீட்டும், எதற்கும் இருக்கட்டும் என ஒரு NOC பார்ம்மும் வாங்கி நூறு ரூபாய் கொடுத்தேன்.. சில்லறை இல்லை என்று சொல்லி சிறிது நேரம் நிற்க வைக்க நான் வண்டியை எடுத்து ரோட்டில் இருந்த ஒரு பழமுதிர் நிலையத்தில் சில்லறை கேட்க, அவரும் கை விரித்தார். அவரிடம் இரண்டு மேங்கோ ஜூஸ் ஆர்டர் செய்து நானும் உடன்வந்திருந்த தம்பியும் குடித்துவிட்டு நூறு ரூபாயை நீட்ட இப்போது சில்லறை கிடைத்தது. திரும்ப வந்து பார்ம்மை வாங்கி அதை நிரப்பி, வெள்ளைத்தாளில் விலாச மாற்றமும் கோரி கொண்டு போய் பணம் கட்டும் கவுண்டரில் நீட்ட அதை வாங்கிய அந்த அம்மா ஐம்பது ருபாய் கேட்க, நான் மீண்டும் ஒரு நூறை நீட்ட அவரோ சில்லறை கொடுங்க ஸார். என்றார். அந்த ஏரியாவில் இருந்த இரண்டு கடையிலும் கேட்டு கிடைக்காமல் பின் அந்த ஸ்டேஷனரியில் ஒரு பேனா வாங்கி சில்லறை உண்டாக்கினோம். ஐம்பதை கொண்டு வந்து அங்கே கட்டி பில் வாங்கியதும் அவர் அந்த பார்ம்மை கொண்டு போய் பி-பிளாக்கில் கொடுக்கச் சொல்ல.. இப்பதான் நமக்கு பி-பிளாக் நல்லா தெரியுமே என்று சந்தோஷத்துடன் ஓடி வந்து நுழையாத ஜன்னல் கம்பிகளூடே என் கரங்களையும் அதோடு வைத்திருந்த பார்ம்மையும் கொடுத்தேன். NOC மற்றும் லெட்டரை பார்த்துவிட்டு "பணம் கட்டுன ரசீது எங்க" என்றார். அதை நான் நீட்ட "இத முன்னால ஒட்டி, மத்த பேப்பர், ஜெராக்ஸ் எல்லாத்தையும் பின் பண்ணி கொண்டு வாங்க" என்றார். அவர் டேபிள் மீதே ஒரு ஸ்டேப்ளர் இருந்தது.
நான் வாங்கிக் கொண்டு மீண்டும் "முன்னாடி" வந்து காசு கொடுத்து ஸ்டேப்ளர் மற்றும் Gum வாங்கி அவர் கேட்டது போலவே கொடுத்தேன். அதை வாங்கிய அவர் அலட்சியமாய் டேபிளின் ஓரத்தில் வைத்துவிட்டு நாளைக்கு சாயந்திரம் ஒரு நாலு மணிக்கு வாங்க " என்றார். "சார், இன்னைக்கு கிடைக்காதா சார்" என்றேன்.. "அதெல்லாம் சரிபார்க்கணும்.. நாளைக்கு வாங்க" இந்த முறை கடுமையாக கூற வேறு வழியின்றி வீடு வந்தேன். மறுநாள் மாலை அங்கே செல்ல அரை மணி நேரம் அமர சொல்லிவிட்டு அவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் சென்று கேட்க சலித்துக் கொண்டே நேற்று வைத்த இடத்திலிருந்து எடுத்து மற்றொரு அறைக்கு சென்று ஐந்து நிமிடத்தில் வந்தார். நான் கைகளில் அவர் கொடுத்த பேப்பரை வாங்கிக் கொண்டு "சார், இத நேத்தே செய்து கொடுத்திருக்கலாமே, அஞ்சு நிமிஷம் தானே ஆச்சு" என்று பவ்யமாக கேட்டேன்.. அவர் முகத்தில் தெறித்த கோபத்துடன் "உன் ஒருத்தனோட வேலைய பார்த்தா போதுமா, வேற வேலையே இல்லையா" என்று ஆரம்பிக்க இதற்கு மேல் இருந்தால் அவர் ஹல்க் ஆக மாறக் கூடிய வாய்ப்பிருந்ததால் அங்கிருந்து அகன்றேன். அடுத்து எங்கே செல்ல வேண்டும் என்று தெரியாமல் அலுவலகத்தை சுற்றி வந்தேன். ரினிவல், விலாசமாற்றம் என்று கூறி ஒரு அம்புக்குறி போட்ட போர்டை பார்த்ததும் ஆவலோடு அந்த அறையை நோக்கி ஓடினேன். இதை நேற்றே கவனிக்காததை எண்ணி என்னை நானே நொந்து கொண்டு உள்ளே சென்றேன்.
முன்னால் அமர்ந்திருந்த ஒரு அம்மணியிடம் அப்ளிகேஷனை நீட்ட அவரோ தன் வாட்சை பார்த்து விட்டு" மணி அஞ்சாச்சு, திங்கட்கிழமை வாங்க" என்று கூறி அந்த அறையை விட்டு எழுந்து சென்றார். வேறு வழியின்றி மீண்டும் திங்கள் காலை வர அந்த அறையில் வேறொருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் பார்ம்மை கொடுக்க, அவர் பார்த்துவிட்டு இதுக்கு NOC, ரிக்வெஸ்ட் லெட்டர் எதுவும் வேணாம்.. சேஞ் ஆப் அட்ரஸ் பாரமும், எல்காட் பாரமும் முன்னாடி கிடைக்கும் என்று கூறினார். மறுபடியும் மொதல்ல இருந்தா, என்றபடி 'முன்னாடி' சென்று பாரம் வாங்கி நிரப்பி கொண்டு வந்து அவரிடம் கொடுக்க அவர் இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டு வெரிபை செய்த அந்த காகிதத்தை என்னிடமே கொடுத்துவிட்டு இந்த இரண்டு பார்ம்களிலும் சூப்பிரெண்டன்ட் கையெழுத்து வாங்கி வர பணித்தார். அவருக்காய் அரை மணி நேரம் காத்திருந்து சென்ற போது மணி பனிரெண்டு லஞ்ச் டைம் என எழுந்து போக இருந்த மனிதர் திரும்பி வந்து எனக்கு கையொப்பமிட்டுவிட்டு சென்றது வானத்தைப் போல விஜயகாந்தே நேரில் வந்தது போல் உணர்ந்தேன் . ஒரு வழியாக போட்டோ எடுத்து மீண்டும் ஒரு மணி நேர காத்திருத்தலுக்கு பின் கையில் ஓட்டுனர் உரிமை அட்டையை வாங்கியபோது என் நியுஜெர்சி ஓட்டுனர் உரிமத்தை சிகாகோ முகவரிக்கு மாற்றிய போது பத்து நிமிடங்களில் எல்லா வேலையையும் முடித்து வந்தது நினைவுக்கு வந்தது..
பி.கு: அரசு அலுவலகங்களின் பார்ம்களை பொதுமக்கள் ஏன் ஸ்டேஷனரியில் சென்று வாங்க வேண்டும்? ஒவ்வொரு அரசாங்க காரியத்தின் வழிமுறைகளை விளக்கமாக ஒரு போர்டில் எழுதி வைக்கலாமே.. அலுவலர் இருக்கைக்கு அருகே அவர் வகிக்கும் பொறுப்பை எழுதி வைக்கலாமே!!
/// நித்தியானந்தருக்கு ஹன்சிகாவே எதிரில் வந்தது போல்....///
ReplyDeleteஹா... ஹா...
ஆவி.பாஸ்,
ReplyDeleteஇதுக்கே சலிச்சுக்கிட்டா எப்பூடி? கட்டிங்க் கொடுக்காம வேலை ஆச்சேனு பீ ஹேப்பி டோண்ட் ஒர்ரி!
#ஒருக்கா தாலுக்கா ஆபீஸுக்கும் , வீடு கட்ட டவுண் பிளானிங் அல்லது டி.எம்.டி.ஏ பொல எடத்துக்கு பொயிட்டு வாங்க, இந்தியாவில ஏன்டா பொறந்தோம்னு வெறூக்க வச்சிடுவாங்க அவ்வ்.
அதே போல வண்டிக்கு ஆக்சிடெண்ட் ஆகி இன்சுரன்ஸ் கிளைம் பண்ண பொலீஸ் எஃப்.ஐ.ஆர் வாங்கணும்னா "கட்டிங்க்" இல்லாம வேலையே நடக்காது அவ்வ்!
மேற்சொன்ன டிபார்ட்மெண்டுக்குலாம் அரசு சம்பளம் தேவையில்லை அவ்வ்!
ஆஹா, இன்னைக்கு வவ்வால் சேம் வேவ்லெங்க்த்ல பறக்குதே.. ஆவி ஹேப்பி பாஸ்!! :) :) :)
Deleteஅதிலும் முன்னாடி இருக்கிற ஸ்டேஷனரி கடைக்கும் இவர்களுக்கும் நிச்சயம் எதோ டீலிங் இருக்குன்னு உறுதியா சொல்வேன்..!!
Deleteமாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொல்லுவாங்க... அரசு இயந்திரங்கள் இங்கிலீஸ் காரங்காலத்திலேர்ந்து அப்படியே இருக்குது, இயங்குது ...ஆச்சர்யமே இல்ல ஆவி.
Delete//மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொல்லுவாங்க//
Delete'சமீபத்துல' வந்த படத்துல சூப்பர்ஸ்டார் சொல்வார்.. :) :)
//அரசு இயந்திரங்கள் இங்கிலீஸ் காரங்காலத்திலேர்ந்து அப்படியே இருக்குது, இயங்குது//
Deleteஇயந்திரங்கள் நல்லா தான் இயங்குது.. அதை இயக்குபவர்களிடம் தான் குறை!!
ஐயோ!!!!!!!!!!!!
ReplyDeleteஆமாங்க, நல்லா அலைய விட்டு தான் எந்த வேலையையும் முடிச்சு கொடுக்கறாங்க..
Deleteஇதற்கு நேர்மாறான அனுபவம் ஒன்று எனக்கு உண்டு நண்பரே. அலுவலர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் செயல்பட்டு எனது வேலையை முடித்துக் கொடுத்தார்கள் என்பது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்பது தங்களின் இந்தப் பதிவினை படித்ததும் தான் தோன்றியது.
ReplyDeleteஆனால் எதற்குத் தெரியுமா? பி.எஸ்.என்.எல் இணைய இணைப்பை துண்டிக்க நான் வேண்டியபோது, உடனே துண்டிக்க உதவினார்கள்
அப்படியா, ஆச்சர்யமாக இருக்கே.. பி.எஸ்.என்.எல் லுடனும் மோசமான அனுபவம் தான் கிடைத்தது எனக்கு.. பகிருங்கள் படிக்கிறேன்.. :)
Deleteஉண்மைதான். இந்நிலைகள் சீக்கிரமே மாற வேண்டும். அதுசரி, இந்த வேலையை ஆன்லைனில் முடிக்க முடியாதா?
ReplyDeleteம்ஹும்.. சென்னையில் உண்டு என கேள்விப்பட்டேன்... எங்க ஊர்ல லேது சார்..
Deleteஅரசு அலுவலர்களை அவ்வளவு சுலபத்தில் வேலையைப் பறிக்கவோ தண்டிக்கவோ முடியாது என்கிற திமிர்தாக் இதற்கெல்லாம் காரணம். வவ்வால் சொன்ன மாதிரி புரோக்கர்கள் உன்னைத் துரத்தி கமிஷன் பணம் பிடுங்காம இருந்த வரைக்கும் சந்தோஷப்பட்டுக்கப்பா.....
ReplyDeleteஆமா சார்.. நான் போனது துக்கடா வேலைங்கறதால இவ்வளவு 'சீக்கிரம்' முடிஞ்சது.. பைசாவும் கொடுத்துட்டு லைசன்ஸ் எடுக்க நாள் கணக்கா நின்னுகிட்டு இருந்தாங்க அங்கே..
Deleteரெண்டாவது எப்படி பண்ணனும்ங்கற வழிகாட்டுதல் சுத்தமா இல்லையே.. அதுவே இடைத் தரகர்களுக்கு எதுவா போயிடுமே..!
Deleteஆவி.பாஸ்,
Delete//ரெண்டாவது எப்படி பண்ணனும்ங்கற வழிகாட்டுதல் சுத்தமா இல்லையே.. அதுவே இடைத் தரகர்களுக்கு எதுவா போயிடுமே..!//
அதெல்லாம் அரசு ரகசியம் அதை லீக் பண்ண சொல்லுறிங்களே அப்புறம் எப்பூடி "அரசு அதிகாரிகள்" பொழைப்பதாம் அவ்வ்!
எதுக்கு எந்த பார்ம் வைக்கணும், அது எங்கெ கிடைக்கும்னு தெரியாம வச்சிருக்க்கிறது மட்டுமில்லை ,அதுக்கு எந்த ஆபிசரை பார்க்கணும் ,அவரு எங்கே இருப்பார்னும் தெரியாம ரகசியமா வச்சிருப்பாங்க, நீங்களாவது ஒரே ஒரு பில்டிங்கில் "பி பிளாக்" அ தேடினிங்க, தாலுக்கா ஆபீஸ் ,கலக்டர் ஆபீஸ் போனால் , 1c, 2a ஃபார்ம் பில்லப் செய்து டி செக்ஷன்ல குடுனு சொல்லுவாங்க, அந்த 1c, 2a லாம் என்ன ,எங்கே கிடைக்கும்னு முழிச்சிட்டு , அலையணூம் சரி அதை தான் வாங்கிட்டம்னாலும் டி செக்ஷன் கிடைக்காது , பேய் முழி முழிச்சிட்டு யாரையாவது கேட்டால் என்னமோ அவன் சொத்துல பங்கு கேட்டாப்போல எரிஞ்சு உழுவாங்க அவ்வ்.
ஹி...ஹி இதுக்கு பேசாம மரத்தடில உட்கார்ந்து "எழுதிட்டு" இருக்க ஆல் இன் ஆல் அழகு ராஜாவ பார்த்து 500 ரூவாய அமுத்தினாப்போதும், அவரு பொட்டியில் இருந்து எல்லா ஃபார்மும் வெளிய வரும், அவரே எழுதி , வெள்ள சொக்கா அலுவலர்கிட்டே கொடுத்து நம்மளயும் ஆள் காட்டி விட்டு, வேலைய 5 நிமிசத்துல முடிச்சு கொடுப்பார் ,என்ன கேட்டா மொத்த தாலுக்கா ஆபிசும் அந்த மரத்தடில தான் இயங்குதுனு சொல்வேன் அவ்வ்!
Fact u Fact u Fact u.. :)
Deleteஎல்லா இடத்திலயும் அலட்சியமும், லஞ்ச லாவண்யமும் புகுந்து கிடக்குறதாலதான் அரசு எந்திரம் சரிவர இயங்க மாட்டேங்குது. கிடைக்க வேண்டிய சலுகைகள் சரியான நேரத்தில் கிடைக்க மாட்டேங்குது.
ReplyDeleteஉண்மைதான் அக்கா.. நம்ம மக்களும் கொடுக்க தயாரா இருக்காங்களே.. (சில சமயங்கள்ல அவங்க கேட்பதற்கு முன்னாடியே)
Deleteநன்றி
ReplyDeleteரொம்பவே பாவம் தான் பாஸ் நீங்க.. நம்ம உடம்பு சைஸுக்கு நம்மள மத்க்கவே மாட்டானுங்க.. அதிலையும் என்னையெல்லாம் வீடல பெரியவங்க இருந்தா வர சொல்லுப்பா கேஸு தான்..
ReplyDeleteமாத்தனும் பாஸ் எல்லாத்தையும் மாத்தணும்.. :-)))))))))) ஹா ஹா ஹா
அப்புறம் பதிவு சூப்பர் .. யாம் பெற்ற இன்பம் ஆச்சே :-)
//என்னையெல்லாம் வீடல பெரியவங்க இருந்தா வர சொல்லுப்பா கேஸு தான்..//
Deleteமெச்சூர்டு லுக், மெச்சூர்டு டாக்கு இருக்கிற சீனுவுக்கே இந்த நிலைமைன்னா??
//அப்புறம் பதிவு சூப்பர்//
Deleteடேங்யூ
வணக்கம்,ஆ.வி சார்!நலமா?///இந்தியா வல்லரசு(?!) ஆகிடும் !
ReplyDeleteவல்லரசு = வன்மை + அரசு, சரிதானா ஸார் ?? ;-)
DeleteWelcome to India brother !
ReplyDeleteAppadiye IRCTC-yil oru tatkal ticket book panniyum paarungalen..... ulagame veruthudum !
ஹஹஹா.. உண்மைதான் சுரேஷ்.. நானும் ட்ரை பண்ணியிருக்கேன்..
Deleteகாந்தி யை காட்டி இருந்தால் உடனடியாக கிடைத்திற்கும்.
ReplyDeleteஅவர்தான் இறந்துட்டாரே..! :P
Delete(அப்பாவியாம்..!)
நீங்கள் இத்தனை பத்திரங்களுடன் 200 ரூபாவைக் காட்டியிருக்கலாம்.
ReplyDeleteஅடுத்து இதை அப்படியே பிரதி செய்து இந்தக் அலுவலக முகவரிக்கு அனுப்புங்கள். படிக்காமல் குப்பையிலிடமாட்டார்கள்....மாற்றத்துக்கு இடமுண்டு.
அப்படிங்கறீங்க.. பார்க்கலாம்..!
Deleteரொம்பவே அல்லாட வைச்சிருக்காங்க! எல்லாம் கையூட்டுக்குத்தான்! பகிர்வு அருமை!
ReplyDeleteஅதையாவது நேரா கேட்டுத் தொலைக்கலாமே.. !
Deleteநிமிர்ந்து நில் ...!
ReplyDeleteஇந்தியன்?
Deleteபீளமேடு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நீங்கள் சென்று வந்த பய(ணக்) கட்டுரை நன்றாயிருந்தது.
ReplyDeleteஅதுசரி, நீங்கள் சென்று வந்த இடத்தின் (புகைப்)படம் போடலியே, ஏன்?
தமிழ்மணம் வாக்கு 6.
இருந்த டென்சன்ல எடுக்க மறந்துட்டேன் பாஸு..! :)
Deleteஇதெற்கெல்லாம் பின்னூட்டம் வேறு வேண்டுமா? சரிதான் போப்பா!
ReplyDeleteத.ம.7. - இராய செல்லப்பா -சான் டியாகோ விலிருந்து.
வணக்கம் பிரின்சிபால் ஸார்.. நலமா ;-)
Deleteசான் டியாகோ சீ வேர்ல்ட் பார்த்தாயிற்றா? :)
அரசு அலுவலகம் உங்களை அலைக்கழிக்க காத்திருக்கிறது......
ReplyDeleteமாற்றம் பல வரவேண்டும் ..... எல்லோரிடமும்!
நிச்சயம் வரணும் சார்
Deleteநான் கூட லைசன்ஸ்ல அட்ரஸ் மாத்தணும். உங்க பதிவைப் படிச்சதிலருந்து அது நடக்காதுன்னு தோணுது. என் வண்டியோட hypothecation கிளியர் பண்றதுக்கே நானூறு ரூபா அழுதேன்....
ReplyDeleteவேற ஊர்ல இருந்து மாத்தனும்னா அந்த RTO ஆபிஸ் ல போய் NOC வாங்குங்க.. இல்லீன்னா நேரா உங்க RTO ஆபிஸ்ல எல்காட் பாரம் மட்டும் வாங்கி கொடுங்க..
Deleteநடக்காதுன்னு இல்ல.. தாமதமா நடக்கும் அவ்வளவுதான்..! நம்ம நாடு இன்னும் அவ்வளவு மோசமாகலீங்க.. ஹிஹிஹி..
Delete