இன்ட்ரோ
சிறுவர்களுக்காக பெரியவர்கள் நடித்து வந்த மாயாஜாலப் படங்கள் ஒரு காலம். சிறுவர்களுக்காக சிறுவர்கள் நடித்து வந்த சிறுவர் படங்கள் ஒரு காலம். பெரியவர்களுக்காக சிறுவர்கள் நடித்து வெளிவரும் கோலி சோடா போன்ற படங்களின் வரிசையில், கோலி சோடாவில் தூக்கலாக தெரிந்த சிறுவர் ஹீரோயிசத்தை எதார்த்தமாக காட்டி நம் மனதில் நச்சென இடம் பிடிக்கிறது இந்த பூவரசம் பீப்பீ..
கதை
ஆறாம் வகுப்பு முடிந்து விடுமுறை தொடங்கியவுடன் அதை ஜாலியாக கழிக்கும் சிறுவர்கள் மத்தியில் மூன்று பேர் மட்டும் தாம் இனிமேலும் சிறுவர்கள் அல்ல என உணர்ந்து (?!!) பொன்வண்டு பிடித்து விற்பனை செய்து தமக்கு தேவையான தின்பண்டங்கள் வாங்கிக் கொள்வதில் ஆரம்பித்து, மழைநாள் ஒன்றில் கண்மாயில் நீச்சல் அடிக்கச் செல்ல அங்கே யாரோ சிலர் ஒரு பெண்ணை கற்பழிப்பதை பார்த்துவிட பின்னர் அவர்கள் யார், என்ன என்பதை துப்பறிந்து கண்டுபிடித்து பின் காவல் துறையில் தக்க ஆதாரங்களுடன் மாட்டி விடுவதே கதை.இந்தக் கதையை இன்னமும் சுவாரஸ்யமாக்க வரம்பு மீறாத ஒரு அரும்பு காதலும், காதலுக்காய் சிறுவர்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகளும் உண்டு. துளி பிசகினாலும் ஆபாசமாக தெரியக் கூடிய பல விஷயங்களை பக்குவமாக சொன்னதற்காகவே அந்த அறிமுக பெண் இயக்குனர் ஹலிதா ஷமீமுக்கு பாராட்டுகள். ஆண் பருவமடையும் காட்சியை அழகாய் படமாக்கிய இயக்குனர் கற்பழிப்பை பற்றிய சிறுவர்களின் விஸ்தரணைகளை இலைமறை (?!!) காயாய் கையாண்ட விதமும் சிறப்பு.
ஆக்க்ஷன்
வேணு (கௌரவ் ), ஹரிஷ் ( பிரவின்) மற்றும் கபில் தேவ் ( வசந்த்) இந்த மூன்று பேர் தான் படத்தின் தூண்கள். சிறுவர்கள் துப்பறியும் கதை என்றதுமே வயதுக்கு மீறிய வசனங்களும் காட்சிகளும் இருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே. காட்சிக்கு தேவையான உடல்மொழியில் கலக்கும் சிறுவர்கள் மூவரும் லிட்டில் சூப்பர் ஸ்டார்கள். அந்த "லாலிபாப்" வர்ஷினியும் கொள்ளை அழகு. வேணு தீயணைக்கும் போது வர்ஷினியின் வாயிலிருந்து விழும் அந்த லாலிபாப் ஒரு குட்டி ஹைக்கூ.
நட்புக்காய் தன் காதலை (?!!) தியாகம் செய்யும் இடத்தில் பிரவினும், கெமிஸ்ட்ரி வாத்தியாரிடம் உண்மையை சொல்லாமல் தடுக்க பாயும் இடத்தில் கௌரவும், தன் தந்தை குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் காட்சியில் வசந்தும் நடிப்பில் அசத்துகிறார்கள். வில்லர்கள் 'திருப்பாச்சி' சாய் ஹரி, காளி, சுந்தர், கார்த்திக் நிறைவாய் செய்திருக்கிறார்கள்.
இசை-இயக்கம்-ஒளிப்பதிவு-தயாரிப்பு
புஷ்கர் காயத்ரி, மிஷ்கின் மற்றும் சமுத்திரகனி ஆகியோரிடம் பணிபுரிந்த அனுபவங்கள் கொண்டு ஜாலியாகவும் சமூக பொறுப்புடனும் தன் முதல் படம் செய்திருக்கும் ஹலிமாவிடமிருந்து இனியும் சில நல்ல படங்களை எதிர்பார்க்கலாம். அருள் தேவ் இசை அழகு. பின்னணி மட்டுமல்லாது பாடல்களிலும் மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். தாராபுரம் பொள்ளாச்சியை அப்படியே நம் கண்களுக்கு விருந்து படைக்கும் ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சாவுடையது. ஒற்றை மரத்தில் பட்டங்கள் கோர்த்து தன் மனதிற்கு பிடித்த பெண்ணை இம்ப்ரெஸ் செய்யும் காட்சி ஒரு ஒளி ஓவியம். இவர் தான் படத்தின் தயாரிப்பும்.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
கார்த்திக் பாடிய "என்னுலகம்" பாடலும் "எனக்கொன்றும் வான்வெளி" பாடலும் அருமை. சில காட்சிகள் மெதுவாக சென்றாலும் சிறுவர்களின் நிறைவான நடிப்பில் நம்மை கவர்கிறது இந்த பூவரசம் பீப்பி.. அதிகம் விளம்பரம் இல்லாததாலும், திரையரங்குகளில் ஓரிரு காட்சிகளே ஓடுவதாலும் இது அதிக நாள் திரையில் காணக் கிடைப்பது சந்தேகமே.. பெரிய பட்ஜெட்டில் பொம்மையை ரசிப்பதற்கு பதில் இதை நிச்சயம் ஒருமுறை பார்த்து மகிழலாம்
Aavee's Comments - Chota Detectives !
Aavee.... Intha vaaram intha padam poga poren. Evvalavu speedaa vimarsanam podareenga, rasichu eluthareenga ponga !
ReplyDeleteபாருங்க சுரேஷ்.. நல்ல படம்..
Deleteரசனையான விமர்சனம் ஆவி... பார்க்க வேண்டும்...
ReplyDeleteபாருங்க.. பாருங்க..
Delete//பெரிய பட்ஜெட்டில் பொம்மையை ரசிப்பதற்கு பதில்... //உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு
ReplyDeleteஹஹஹா..
Deleteஇந்தப் படத்தின் ப்ரோமோ தொலைக்காட்சியில் பார்த்த போது கொஞ்சம் வயதுக்கு மீறிய படமோன்னு நினைத்தேன்.. நீங்க சொல்வதைப் பார்த்தால் அது போன்றில்லை என உணர்கிறேன்....
ReplyDeleteஇல்ல மேடம்.. தைரியமா பார்க்கலாம் நீங்க..
Deleteஇன்னும் நீங்க இந்த சோட்டாவ விட்டு வரல :-)
ReplyDeleteபடம் மொக்கையா இருக்கும்னு நினைச்சேன்.. மெட்ராஸ் கூட சொன்னார் படம் நல்லாருக்குன்னு.. சந்தர்ப்பம் வாய்க்குதான்னு பார்ப்போம்
மெட்ராஸ் செகண்ட் ஹாப் சரியில்லைன்னு சொன்னார்.. இந்தப் படத்தை அது மாதிரி தான் கொண்டு போக முடியும்.. இன்னும் சொல்லணும்னா முதல் பாதியை விட இரண்டாம் பாதிதான் விறுவிறு சுறுசுறு..
Deleteசெவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் தம்பீ.... ஹி... ஹி... ஹி...
Deleteஅவர் பொய் சொன்னார்ன்னு சொல்லல சார்.. அவர் பார்வையில அப்படி இருந்ததுன்னு தான் சொன்னேன். அது சரி அப்ப கருப்பா இருக்கிறவன் பொய் சொல்வானா? ஹீஹீ மாட்டி விட்டுடோம்ல..
Deleteபெரிய பட்ஜெட்டில் பொம்மையை ரசிப்பதற்கு பதில் இதை நிச்சயம் ஒருமுறை பார்த்து மகிழலாம்///// பொம்மையைப் பார்த்து நொந்து போனவன் என்ற முறையிலும், மிகச்சிறு குறைகள் தவிர படம் நல்லா வந்திருப்பதாக பிரதர் மெட்ராஸ் சொன்னதை ஆவி உறுதிப்படுத்துவதாலும் பார்த்துடறேன் அவசியம்.
ReplyDeleteபாருங்க ஸார்.. ஆனா தியேட்டர்ல பார்க்க கிடைக்குமாங்கறது டவுட்டு தான்.. அடுத்த வாரம் இரண்டு படம் ரிலீஸ் ங்கறதால இதுக்கு ஸ்க்ரீன் கிடைக்க வாய்ப்பே இல்ல..
Deleteதலைப்பு வித்தியாசமாக இருக்கிறது!
ReplyDeleteபெண் இயக்குனர்? தமிழ்த் திரையுலகில் எத்தனை பெண் இயக்குனர்கள் இதுவரை?
பொறுமையா எல்லாப் படங்களும் பாத்துடறீங்க ஆவி!
பெண் இயக்குனர்ங்கறது மட்டுமில்ல ஸ்ரீ. கட்டுப்பாடுகள் நிறைஞ்ச இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவங்கன்றதும் விசேஷம். பி.பானுமதிலேர்ந்து ஆரம்பிச்சு கணக்கெடுத்தா ஒரு டஜனுக்கும் மேல இருப்பாங்க பெண் இயக்குனர்கள்.
Deleteலக்ஷ்மி கூட மழலைப்பட்டாளம் இயக்கி இருக்கிறார். ஸ்ரீப்ரியா சமீபத்தில் ஒரு படம் இயக்கி இருக்கிறார். இளையராஜா இசைமழையில் ஒரு படம் 'நில் நில் நில் பதில் சொல் சொல்' போன்ற பாடல்கள் இருக்குமே ஆ...ங்... 'பாட்டுப் பாட வா' அது கூட ஒரு பெண் இயக்குனர்தான்! பெயர் நினைவில்லை!
Delete//பொறுமையா எல்லாப் படங்களும் பாத்துடறீங்க ஆவி!//
Deleteஹஹஹா.. இதெல்லாம் பெருமையா சார்.. கடமை கடமை.. :)
//தமிழ்த் திரையுலகில் எத்தனை பெண் இயக்குனர்கள் இதுவரை?//
Deleteநல்ல கேள்வி.. ஆராய்ச்சியை முடுக்கி விடறேன்.. எனக்கு தெரிஞ்சு "வல்லமை தாராயோ", "கொலகொலையா முந்திரிக்கா" படங்களை இயக்கிய மதுமிதா.. "இந்திரா" இயக்கிய சுகாசினி மணிரத்னம். .திருதிருதுறுதுறு கொடுத்த "நந்தினி" , ஓரம்போ "காயத்ரி" (புஷ்கர்).. 3 இயக்கின நம்ம "சௌந்தர்யா" பொம்மைப் படம் எடுத்த "ஐஸ்வர்யா".. வணக்கம் சென்னை எனும் மொக்கை கொடுத்த "கிருத்திகா உதயநிதி"..
பாட்டு பாடவா இயக்கியது BR விஜயலட்சுமி..
Deleteபாலகணேஷர்,
Delete//பி.பானுமதிலேர்ந்து ஆரம்பிச்சு கணக்கெடுத்தா ஒரு டஜனுக்கும் மேல இருப்பாங்க பெண் இயக்குனர்கள்.//
பானுமதிக்கு முன்னரே டிபி.ராஜலக்சுமி இயக்கிட்டாங்க, அவங்க தான் இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குனரே, முதல் "பாத்திமா பேகம்" ஆண்டு 1931, அந்தக்காலத்திலேயே இஸ்லாமிய சமூகத்தில் இருந்து பெண் இயக்குனர்!!!
தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்,எடிட்டர்,கதை ,திரைக்கதை என எல்லாம் செய்தவங்க டி.பி.ராஜலக்ஷ்மி, படம் மிஸ்.கமலா,ஆண்டு 1936 :-))
தமிழின் முதல் பேசும் படம் காளிதாசின் நாயகி அவர்.
ஆஹா, செம்ம தகவல்கள்.. நன்றி பாஸ்.. இதை முகநூலிலும் பகிர்கிறேன்..:)
Deleteபூவரசம் பூ பூத்தாச்சு ,கோவை ஆவியின் பார்வையும் பார்த்தாச்சு ,படத்தைப் பார்த்து விட வேண்டியது தான் !
ReplyDeleteத ம 4
ஆமா, அதையும் பார்த்துடுங்களேன்!!
Deleteவிமர்சனத்துக்கு நன்றி,ஆ.வி சார்!///பொம்மைப் படம் என்ற வார்த்தையை வாபஸ் வாங்குமாறும்,பகிரங்க மன்னிப்புக் கேட்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்!( :) :) )///பெண் இயக்குனர்கள்/ஒளிப் பதிவாளர்கள் தமிழ்ப் பட வரலாற்றில் நிலைத்ததில்லை/(நிலைக்க ஆணாதிக்கம்)விட்டதில்லை!பெயர் பொறிக்கப்படும்,அவ்வளவு தான்.........ஹூம்!
ReplyDeleteபெண் என்ன ஆண் என்ன நல்ல படைப்பை கொடுத்தால் ஆவி டாக்கீஸ் இரு கரம் நீட்டி வரவேற்கும்.. பெயர் பொறிச்சாச்சு.. பார்ப்போம் நிலைக்கிறாங்களான்னு..
Deleteமரியாதைக்குரிய நண்பரே.. பொம்மை படத்தை வாபஸ் வாங்கிட்டு கார்ட்டூன் என்ற ஆங்கில வார்த்தை கொண்டு நிரப்ப மனம் ஒப்பவில்லையே என்ன செய்யலாம்.. ;) ;)
Deleteஅய்யய்யோ.........சீரியசாகவே எடுத்துக்கிட்டீங்களா? :) :)
Deleteஇல்ல பாஸ்.. அதான் ஸ்மைலி போட்டிருந்தேனே..
Deleteதைரியமாய் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டுப் போய் பார்க்கலாமில்ல!
ReplyDeleteரொம்ப சின்ன பசங்கன்னா வேண்டாம்.. நிறைய கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்ல வேண்டி வரும்.. உங்க பசங்களோடன்னா தைரியமா போலாம்.. ஆவிப்பாவே படிச்சு புரிஞ்சுகிட்டாப்புல..! :) :)
Deleteஇத்தப் பார்ரா.........கொடுமய!
Deleteஎன் புள்ளைங்கலாம் அவங்க மாமனை அப்படியே அறிவுல கொண்டிருக்குங்க.
Deleteஹஹஹா.. அப்போ ஒக்கே, புத்திசாலிங்க தான்..! :)
Deleteஅவசியம் பார்க்கிறேன் நண்பரே
ReplyDeleteபாருங்க.. நல்லாயிருக்கு.. :)
Deleteசுவையான விமர்சனம்! பார்த்துருவோம்! நன்றி!
ReplyDeleteபாருங்க நண்பா!
Deleteபெண் இயக்குனர்!!!!! கண்டிப்பாக பார்க்க வேண்டும்! நீங்க விமர்சிச்சத பார்த்தா படம் நமக்கு நிறைய விஷயங்கள் சொல்லும்னு தோணுது! நீங்க சொன்னா அதுகண்டிப்பா கரெக்டாதான் இருக்கும்......அதுவும் சிறுவர் படம்.......பார்ப்போம் இங்க வந்தா..... இல்ல சிடிதான்....
ReplyDeleteமிக்க நன்றி ஆவி! பகிர்ந்ததுக்கு!
படம் அங்கே வர்றது டவுட்டு தான்.. சிடிலையே பார்த்திடுங்க.. :)
Deleteநானும் பார்த்தேன்,அருமையான படம்!
ReplyDeleteஉங்களுக்கும் பிடித்தது மகிழ்ச்சி..!
Deleteபடம் நல்ல படம் என்று சமீபத்தில் சிவா சொன்னார். பார்க்க வேண்டும். விரைவில் தொலைகாட்சியில் வந்துவிடும்....
ReplyDeleteம்ம்
Delete