Monday, June 16, 2014

விபத்து..! (சிறுகதை)

                 


                     கண்விழித்துப் பார்த்த போது ரோட்டின் ஓரத்தில் விழுந்து கிடந்தேன். கைகளில் சிராய்ப்பு காயங்கள். எழுந்து நின்று கால்களை மடக்கிப் பார்த்தேன். பெரிதாய் ஒன்றும் அடிபடவில்லை. என்ன நடந்தது என நினைத்துப் பார்க்க முயன்று தோற்றேன். அருகே ரோட்டை விட்டு சற்று கீழிறங்கி மணலில் விழுந்து கிடந்தது என்னுடைய பல்ஸர்.. வண்டியை தூக்கிப் பார்த்தபோது தான் அதன் வலப்பக்க கண்ணாடி உடைந்து வெறும் கூடு மற்றும் நின்று கொண்டிருந்ததைக் கவனித்தேன். டாங்க் பக்கத்தில் பெரிதாய் தேய்ந்திருந்தது. ரோட்டில் நீண்ட தூரம் இழுத்துக் கொண்டு சென்றிருக்க வேண்டும். 

                         தலை லேசாக சுற்றுவது போலிருந்தது. தலையில் எங்காவது அடிபட்டிருக்குமோ? தொட்டுப் பார்த்துக் கொண்டேன். காயங்கள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. இருந்தாலும் தெரியும் நிலையில் இல்லை. கண்கள் மின்னி மின்னி மறைந்தது. ச்சே.. ஹெல்மெட் போட்டு வண்டி ஒட்டிருக்கனும்.  விபத்து எப்படி நடந்தது, என் வண்டியின் மீது எது மோதியது என்பதையெல்லாம் யோசிக்க யோசிக்க தலைவலி தான் கூடியதே தவிர விடையில்லை. லேசாக எதோ சப்தம் கேட்டது. ஒரு பெண்ணின் விசும்பல் சத்தம் அது.  ரோட்டின் மறுபுறம் மரத்தின் ஓரத்தில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள். விட்டுவிட்டுக் கேட்டது அவள் குரல். காதில் இப்போது லேசாய் வலிப்பது போன்ற உணர்வு.

                           காதைத் தடவி விட்டுக்கொண்டே அவளைப் பார்த்த போதுதான் அவள் மடியில் ஒரு குழந்தை இருப்பது தெரிந்தது. இரண்டு வயதிருக்கலாம். வேகமாக ரோட்டைக் கடந்தேன். அவளருகில் சென்று பார்த்த போது குழந்தையின் தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கைகள் வேகமாய்ப் பாக்கெட்டுக்குள் இருந்த செல்லை எடுத்து எண்களை ஒற்றியது. "ஹலோ, ஜி.ஜி ஹாஸ்பிடலா? இங்கே ரேஸ் கோர்ஸ் சாலையில் காபி டே பக்கத்துல ஒரு ஆக்சிடென்ட் ஆகி குழந்தைக்கு அடி பட்டிருக்கு. வேகமா வாங்க" என்றேன். அணைத்து விட்டு அந்த குழந்தைக்கு ஏதாவது முதலுதவி செய்ய முடியுமா என்று சுற்று முற்றும் பார்த்தேன். ரோட்டின் மறுபுறம் கிடந்த  என் வண்டியை தவிர வேறெந்த வாகனமும் இல்லை. கடைகள் எதுவும் திறந்திருக்குமா என்று பார்க்க ரோட்டில் அங்குமிங்கும் ஓடினேன்.

                         சற்று தொலைவில் இருந்த வளைவு திரும்பியதும் மாருதி 800 ஒன்று நின்று கொண்டிருந்தது . உள்ளே யாரும் இருக்கவில்லை. முன் பக்கமாக சென்றேன், அதன் முகப்பு போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. இவன் தான் இடித்திருக்க வேண்டும். இடித்து விட்டு ஓடிவிட்டான் படுபாவி. என்று மனதுக்குள் அவனை சபித்துக் கொண்டிருக்கையில் ஆம்புலன்ஸ் வரும் சப்தம் கேட்டு விழுந்த இடத்திற்கே ஓடிவந்தேன். ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. கூடவே ஒரு போலிஸ் ஜீப்பும். அந்தப் பெண் குழந்தையை ஏற்றிவிட்டு போலீசிடம் எதோ கூறிக் கொண்டிருந்தாள்.. என் காதுகளில் அவை எதுவும் விழவில்லை. 
               
                         இவ்வளவு சீக்கிரமாக ஆம்புலன்ஸ் வந்த ஆச்சர்யத்தோடு நான் அவர்களை சமீபித்த போது அவள் பேச்சை நிறுத்திக் கொண்டாள். நான் அந்த இன்ஸ்பெக்டரிடம் "சார், அதோ அந்த வளைவுல ஒரு மாருதி கார் நிக்குது. அவன்தான் எங்களை இடிச்சிருக்கணும்." என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அதை சட்டை செய்யாமல் உள்ளிருந்து எதோ ஒரு சாதனத்தை எடுத்து என் வாயருகே வைத்து "அந்த கார் ரெண்டு நாளைக்கு முன்னாடியிருந்து அங்க தான் நிக்குது. நீ இதுல ஊதுடா" என்றார்.
    

                                             *********XXX**********


வாசகர் கூடத்தில் இன்று :   கோபல்ல கிராமம் 


22 comments:

  1. யாருக்கு விபத்து? கொஞ்சம் யோசிக்க வைக்குது கதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அப்பாதுரை சார்!!

      Delete
  2. இது அனுபவம் மாதிரில்லா இருக்குலெய் தம்பி...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. இல்லண்ணே கற்பனை தான்!!

      Delete
  3. அதான் என்ன நடந்ததுன்னு தெரியலைன்னு முதல் லைன்லயே போட்டாச்சே....அதுக்குத்தான் போலிஸ் பதில் கொடுக்கிறார்....

    ReplyDelete
  4. விபத்தின் விளைவு செமஜோர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாத்தியாரே!!

      Delete
  5. பொலிஸ்காரரிடம் எப்போதோ விபத்து நடந்த வண்டியை சொன்னால் அதான் வாயை ஊத சொல்லியிருக்காரு, இதுவும் ஆவியோட வேலையா இருக்குமோ....(என்னமா பயங்காட்றாங்கப்பா)

    ReplyDelete
    Replies
    1. //எப்போதோ விபத்து நடந்த வண்டியை சொன்னால் அதான் வாயை ஊத சொல்லியிருக்காரு,// இல்ல சார், விபத்து யாரால் நடந்ததுன்னு அவனுக்கே தெரியாத நிலையில் இருந்தான்னு சொல்ல தான் அந்த வரி..

      Delete
  6. Replies
    1. கதைய இன்னொரு வாட்டி படிங்க தெரியும்..

      Delete
  7. யோசிக்க யோசிக்க தலைவலி வரும்போதே தெரிந்து விட்டது... "ஊத்து" பார்ட்டி...!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. கரீட்டா புடிச்சுட்டீங்க..

      Delete
  8. ஆரம்பத்தில் நிகழ்வின் வர்ணனை நல்லாருக்கு

    ReplyDelete
  9. அந்தப் பெண்ணும் காரும் பேயாய் இருக்கும், நாயகன் தண்ணியடித்து விட்டு உளறுகிறான் அதனால் ஊதச் சொல்கிறார் என்று நினைத்தேன் :-)

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. அப்படி ஒரு Angle இருக்கோ? ஒருவேளை ஆவி எழுதியதால் அப்படி யோசித்தீர்களா? ;)

      Delete
  10. போன வருசம் உனக்கு ஏற்பட்ட ஆக்சிடண்ட் பத்திய பதிவுன்னு நினைச்சு படிச்சுக்கிட்டே வந்து கடைசியில் பல்ப் வாங்கிட்டேன்!!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. அப்படி ஏமாந்திடக் கூடாதேன்னு தான் "சிறுகதை" ன்னு டைட்டில்ல போட்டேன் அக்கா.. :)

      Delete
  11. நீ இதுல ஊதுடா.... :)))

    நிலையில்லாம இருந்தது நீதான் என்று சொல்லாமல் சொன்ன வரி!

    ReplyDelete
  12. நல்ல வர்ணனை ஆவி! ஆரம்பமே எதிர்பார்ப்பைக் கிளப்பியது! நாங்கள் ஆவி உலகக் கதையாய் இருக்கும் என்று நினைத்தோம்...கடைசில இல்ல பதில் கிடச்சுது முதல் பத்தியில் இருந்த வரிக்கு....

    //என்ன நடந்தது என நினைத்துப் பார்க்க முயன்று தோற்றேன்//

    //உள்ளிருந்து எதோ ஒரு சாதனத்தை எடுத்து என் வாயருகே வைத்து "அந்த கார் ரெண்டு நாளைக்கு முன்னாடியிருந்து அங்க தான் நிக்குது. நீ இதுல ஊதுடா" என்றார்.// புரிஞ்சு போச்சு....ஆவி இல்ல நிஜக்கதைன்னு.....

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails