Sunday, June 1, 2014

தொட்டுக் கொள்ளவா, உன்னை..

                                               

                          மஞ்சள் வெயில் மேனியை தடவிக் கொண்டிருந்த மத்தியான நேரம். அவசர வேலையாக சென்யோரீட்டாவுடன் (என் செஞ்சுரோ பைக் பேருங்க) காந்திபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். மெயின் ரோட்டில் சென்றால் மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்று என்பதால் ஒரு குறுக்குப் பாதையில் அவநாசி ரோடை நோக்கி வேகமாக பாய்ந்தேன். என் பயணத்தின் வேகத்தை குறைக்கும் வண்ணம் பெருந்திரளான கூட்டம் ஒன்று அந்த சாலையை முழுவதுமாக அடைத்து நின்றிருந்தது. பெரும் இரைச்சல் வேறு. என் அவசரம் புரியாமல் வழிமறித்து நின்ற கூட்டத்தை நோக்கி ஹார்ன் அடித்தேன்.. ம்ஹூம் யாரும் அசைவதாய் தெரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன் அங்கே 'பூஜை' ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

                            நடிகர் விஷால் கருநீல நிற சட்டையில் நாலைந்து பேரை அடிப்பது போல் பாவ்லா காட்டிக் கொண்டிருக்க அவர்களும் அடி வாங்காமலே பறந்து போய் கீழே விழுந்து கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் "கட்" சொல்லப்பட விஷால் தன் இருக்கைக்கு செல்கிறார்.  நம்ம "மாநிற" விஷாலுக்கு அருகே உலக நாயகன் கண்டெடுத்த பொக்கிஷமும் அமர்ந்திருந்தது. தமிழ் உலகத்துக்கு அவர் அறிமுகப் படுத்தியிருந்தாலும் பாலிவுட், மாலிவுட், டோலிவுட் என எல்லா ஏரியாவிலும் கலக்கிக் கொண்டிருக்கிறது.  பார்த்த மாத்திரத்தில் அதன் அழகில் விழுந்தேன். வாழ்க்கையில் ஒருமுறையேனும் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. வாழ்வில் நடக்கவே நடக்காது, முடியவே முடியாது என்ற ஒரு விஷயத்தை செய்து பார்க்க ஆசை தோன்றுமே.. அப்படி ஒரு ஆசை அது..

                              அடிவிழலாம்.. ஏச்சுக்களும், பேச்சுக்களும் வரலாம்.. சுற்றியிருப்பவர்கள் கேவலமாக வசை பாடலாம். எது நடந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு  துணிவு வந்தது மனதிற்குள். வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டே முன்னே சென்றேன். ஷாட் முடிந்து வேறு இடத்திற்கு செல்ல பேக் அப் செய்து கொண்டிருந்தார்கள். விஷாலிடம் கையெழுத்து வாங்க ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. நான் மீனின் கண் மட்டும் தெரிகின்ற அர்ஜுனன் போல் என் இலக்கை நோக்கி நடந்தேன். அருகே வந்ததும் கொஞ்சம் தயக்கமும், பயமும் வந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொட்டே விட்டேன்..அந்த ரெட் ஒன் காமிராவை..!


29 comments:

 1. நானும் என்னமோ நினைச்சேன்... ம்...

  ReplyDelete
  Replies
  1. ஆவி குட் பாய் பாஸ்!! :)

   Delete
 2. இதுதான் என்றால் முத்தம் கொடுக்கவும் ஆசைப்பட்டிருக்கலாமே ?
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. "இது"தான் ங்கிறதால தான் "அதுக்கு" ஆசைப்படலை ஜி.. :)

   Delete
 3. யோவ் வர வர நீர் சரியில்ல சொல்லிபுட்டேன் ஆமா :-)

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. அப்படியா.. :)

   Delete
 4. ஹிஹிஹி.... மறைபொருளாச் சொல்லிட்டீங்க!!!

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஒருத்தர் தான் சார் சரியா புரிஞ்சுகிட்டீங்க... ;-)

   Delete
 5. நான் அந்த பைக்கை தொட நினைச்சீங்களோன்னு நினைச்சேன்!

  ReplyDelete
  Replies
  1. இப்பதான் பார்க்கிறேன்.. அந்த பைக் கூட சூப்பரா இருக்கில்ல..

   Delete
 6. எல்லோரும் நாயகனிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடிக்கையில் நீங்கள் நாயகியிடம் வாங்கியிருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. அந்த காட்சி எடுக்கும் போது நாயகி அங்கில்லை..

   Delete
  2. தவிர "நினைத்தால் நஸ்ரியா.. இல்லேன்னா ஆலியா" ங்கிற நம்ம பாலிசி என்னாகிறது?? ;-)

   Delete
 7. நற... நற... நற.... (தொட்டதுக்கு அப்புறம் கேமராமேன் என்ன செஞ்சார்?)

  ReplyDelete
  Replies
  1. துண்டால தொடச்சுட்டாராம்!

   Delete
 8. வணக்கம்,ஆ.வி சார்!நலமா?///தொட்டுட்டா(ர்)ன்யா தொட்டுட்டா(ர்)ன்!அச்சச்சோ...........அந்தக் கேமிரா குடுத்து வச்(சு)சது!

  ReplyDelete
  Replies
  1. ஆமாமா.. கேமிரா குடுத்து வச்சது தான்!! :)

   Delete
 9. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொட்டே விட்டேன்..அந்த ரெட் ஒன் காமிராவை..!
  >>
  நீயெல்லாம் ஒரு இளவட்டமா!? தூ

  ReplyDelete
  Replies
  1. அந்த ஒளிப்பதிவாளர் வாட்ட சாட்டமா இருந்தார் அக்கா ;-)

   Delete
 10. சத்தியமா ஆவி! நாங்க.........இல்லைங்க தப்பா எல்லாம் நினைக்கல......எங்களுக்குத் தெரிஞ்சு போச்சு...அதுவும் "உலக நாயகன் கண்டெடுத்த பொக்கிஷமும் அமர்ந்திருந்தது." அப்படின்ன உடனே ச்ருதினு நினைச்சுடுவம்னு நினைச்சுட்டீங்களா?!!!!!....அது பெற்றெடுத்த..பொக்கிஷம்..!!!!ஹஹாஅ....அது காமெரானு தெரிலனாலும்....வேற ஏதோ ஒரு விஷயம்னு மட்டும் யூகிச்சோம்......மட்டுமல்ல...நம்ம ஆவி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருன்னு பேசிக்கிட்டாங்க........ஹி ஹி ஹி....

  அழகான வர்ணனை......

  ReplyDelete
  Replies
  1. //ஆவி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருன்னு பேசிக்கிட்டாங்க//

   அவ்வ்வ்வவ்வ்வ்!!

   Delete
 11. :)))))

  உங்க கண்ணுக்கு எல்லாமே நஸ்ரியாவா தானே தெரியணும்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.. அந்த எபிசோட் முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சே ஸார்.. :) :)

   Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...