Thursday, June 12, 2014

கடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து

                   


                             "இந்தப் பொறப்புதான் ருசிச்சு சாப்பிட கிடைச்சது.."- உன் சமையலறையில் படத்துல வர்ற இந்தப் பாட்டு முதல் முறை கேட்டதுமே மனசுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டா மாறிடுச்சு.. காரணம் நம்ம பாலிசியும் அதுதானே.. தேடித் தேடி ருசிச்சு சாப்பிடறதுல இருக்கிற சுகம் வேறேதாவது இருக்கா? எனக்கு முன்னாடியே பல ஜாம்பவான்கள் நல்ல நல்ல ஹோட்டல்கள் பத்தியும் அங்கே கிடைக்கிற ஸ்பெஷல் ஐட்டங்களைப் பத்தியும் சுவைபட எழுதிட்டு வர்றாங்க.. இருந்தாலும், நாம சுவைச்சு ரசிச்சத நாமே சொன்னாதானே இன்னும் ருசி அதிகம்.. அதான் கிளம்பிட்டேன்.. இதுவரை எல்லாத்துக்கும் ஆதரவு கொடுத்து வந்த வாசகப் பெருமக்கள் இந்த கடோத்கஜா மெஸ்ஸுக்கும் ஆதரவு தருவீங்கன்னு நம்பறேன்.


                                          கண்ணன்ணன் விருந்து 


                                மதுரை அளவுக்கு இல்லாட்டாலும் கோவையும் உணவுக்கு பெயர்போன ஊர்தான். ஒரு நாள் நல்ல பசி. மணி வேற மூணு ஆயிட்டுது. வழக்கமா போற ஹோட்டல் எல்லாம் தொலைவில் இருக்கு சட்டுன்னு நினைவுக்கு வந்தது இந்த கண்ணன்ணன் விருந்து. "தலைவாழை இலை விருந்து" ன்னு நம்ம ஜீவானந்தன் சார் பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.  கோவை வாசிகளுக்கு ஆர்.எஸ்.புரம் ன்னா நல்லா தெரியும். RS புரம் TV சாமி  ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி வரும்போது வலப்புறம் இருக்கும் இந்த உணவகம். (எதிர்ல ஒரு KVB பேங்க் இருக்கும், அதான் லேண்ட்மார்க்) 

நரேன் கார்த்திகேயன் நண்பர்களுடன் 


                                 பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாம தான் நண்பர்களோடு உள்ளே போனேன். அங்க நுழைஞ்சதும் ஒரு வீட்டுக்கு விருந்தாளியா போன பீல் இருந்தது.. ( வீட்டையே ஹோட்டலா மாத்திஇருந்தனால கூட அப்படி தோணியிருக்கலாம் ). உள்ளே பிஸியாக இருந்ததால் பத்து நிமிடம் ஹாலில் அமர வேண்டியிருந்தது. பின்னர் உள்ளே அழைக்கப்பட்டு எல்லோருக்கும் தலை வாழை இலை பரிமாறப்பட்டது. வரிசையாக ஐட்டங்கள் நிறைய நாவில் அப்போதே எச்சில் ஊற ஆரம்பித்தது.


தலைவாழை இலை விருந்து 


                                   நடுவில் கொஞ்சம் சாதம், சிக்கன் வறுவல், மூளை வறுவல், தலக் கறி, புதினா சிக்கன், மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல், குடல் என நிரம்பி வழிந்தது இலை. காந்திக்கு இது சுத்தமாக பிடிக்காது என்பதால் பர்ஸில் இருந்த காந்தியை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு "Goat" சே வை வரவேற்றோம். முதல் ரவுண்ட் சிக்கன் குழம்புடன் துவங்கியது. 

கறிவேப்பிலை சிக்கன் 

நாட்டுக்கோழி வறுவல் 


                                    பின்னர் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் சாப்ஸ் பிறட்டியும் இரண்டாவது மூன்றாவது ரவுண்டுகள் இனிதே சென்றன. அதற்குள் இலையின் பக்க வாத்தியங்கள் எல்லாம் காலியாகி விட மீண்டும் ரீபிள் செய்யப்பட்டது. (எல்லாம் அன்லிமிடெட் என்பதால், நமக்கு வயிறு நிறையும் வரை சாப்பிடலாம்)

மட்டன் சாப்ஸ் 


பெப்பர் Tomato சிக்கன் 

                                     நான்காவது ரவுண்டு எல்லோரும் சிக்கன் ரசத்தை ருசி பார்க்க நான் ரசத்தை  சாதத்துடன்  உண்ண மாட்டேன் என்பதால் அதை லைட்டாக ருசி பார்த்துவிட்டு தயிருக்கு என்டர் ஆனேன். தயிருடன் மூளை வறுவல் தேவாமிர்தமாக இருந்தது.  மட்டன் சாப்ஸின் காரம் காதை அடைக்க இலையில் சீண்டப் படாமல் கிடந்த கேசரிக்கு வாழ்வளித்தேன். ஓரமாய் வெட்டிப் போடப்பட்டு பெப்பர் தூவப்பட்டிருந்த வேகவைத்த முட்டை ஒரே வீச்சில் உள்ளே போக வயிறு நிறைந்ததற்கான சிக்னல் வந்தது. அன்று லேட்டாக சென்றதால் கடல் உணவு வகையறா எல்லாம் முடிந்து விட்டது. 

குடல் கூட்டு 


                                       கடைசியாக ஜீரணத்துக்கு உதவ புதினா கொண்டு செய்த லெமன் ஜூஸ் பரிமாறப் பட்டது (இதற்கு மட்டும் நாம் எக்ஸ்ட்ரா பணம் கொடுக்க வேண்டும்) கடைசியாக உணவின் சுவை பற்றி கேட்டுவிட்டு பில்லை கொடுத்தனர். ஒரு ஆளுக்கு முன்னூற்றி ஐம்பது ( Tax உள்பட ) + ஜூஸ் முப்பது ருபாய். நல்ல உணவை சாப்பிட்ட திருப்தியுடன் பில் பணத்துடன் சேர்த்து ஐம்பதை டிப்ஸாக கொடுக்க அதை வாங்க மறுத்த ஊழியர், நானும் இந்த கடையோட பார்ட்னர் தான், டிப்ஸ் வேணாங்க என்று அன்புடன் மறுத்தார். 

ஹைலைட் : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..


                                         கோவை வாசிகள் ஒரு நாள் மதிய உணவை குடும்பத்தோடு வந்து உண்டு கழிக்க சிறந்த உணவகம். ( முன்பே தொலைபேசியில் அழைத்து ரிசர்வ் செய்து கொள்ளுமாறு ஹோட்டலில் அறிவுறுத்தினார்கள்). வெளியூர் அன்பர்களும் கோவை வருகையில் இங்கே உண்டு மகிழலாம். மேலும் விபரங்களுக்கு இவர்களின் பேஸ்புக் பக்கத்திற்கு செல்லுங்கள்..



37 comments:

  1. இனி வரும் போது சாப்பிட்டுவிடுகின்றேன் அருமையான படங்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. ஐயா எல்லாம் வேணாம்.. ஆவின்னே கூப்பிடுங்க.. :)

      Delete
  2. ம்ம் பிரமாதம் சாப்பாடு

    ReplyDelete
  3. சாப்பாட்டு ராமன்... கடோத்கஜன்... நல்லாப் புடிக்கறீங்கப்பா பேர்களை... ராஜவிருந்துன்னு சொல்வாங்களே... அதுபோல சாப்ட்டிருக்கீஙக போல... குட்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க வரும்போது கூட்டிட்டு போறேன் சார். நல்ல திருப்தியான சாப்பாடு ஸார்.

      Delete
  4. பரவாயில்லையே, விலை ரொம்ப கம்மிதான்... கோவை வந்தா கண்டிப்பா போகணும்...

    ReplyDelete
    Replies
    1. கோவை வர்றேன் வர்றேன் ன்னு சொல்லிட்டே இருக்கீங்க.. ஆனா வந்த பாட்டை தான் காணோம்.. ;-)

      Delete
  5. இந்த பாவியை விட்டுட்டு போய்ட்டீங்களே ஆ.வி.!

    ReplyDelete
    Replies
    1. இது நீங்க 'தலை' மறைவா இருந்த காலத்துல போனது ஸார்.. அடுத்த முறை ஜமாய்ச்சிடுவோம்..

      Delete
  6. ஒரு சாப்பாட்டின் விலை என்ன?

    ReplyDelete
  7. அட ஆண்டவா இந்த ஆவியோட அட்ராசிட்டிய நிப்பாட்ட ஆளே இல்லியா :-)

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. இப்போதானே ஆரம்பிச்சிருகோம்.. அதுக்குள்ளயேவா??

      Delete
  8. அப்போ கோவை வரும்போது எனக்கொரு தலைவாழை விருந்து காத்திருக்கு அப்டித்தான தல :-)

    ReplyDelete
    Replies
    1. உம்ம தலையையே வாழை இலையில் விருந்தா போட்டுடறேன் போதுமா? ஹஹஹா

      Delete
  9. மேலே உள்ள படத்தில் இருப்பது நீங்கள்தானா ஆனந்த ராஜா விஜயராகவன்? எஸ் வி ஆர் போல தெரியவில்லையே!

    நம் பதிவுலக நண்பர் 'வால்பையன் அருண்' கடை கூட கோவைதானே? அதுவும் ஆர் எஸ் புரம் என்றுதான் நினைவு.

    ReplyDelete
    Replies
    1. //படத்தில் இருப்பது நீங்கள்தானா //
      சாத்சாத் நானேதான் சார்..

      Delete
    2. //'வால்பையன் அருண்' கடை கூட கோவைதானே// அப்படியா அவர் பெயரை இப்போதுதான் கேள்விப் படுகிறேன் ஸார்.. அவரை எனக்கு பரிச்சியமில்லை...

      Delete
    3. முகநூலில் இருக்கும் அதே "வால் பையனா? அவரை எனக்கு தெரியும்..

      Delete
  10. வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?நல்ல விளம்பரம்+சாப்பாடு!///கடை விளம்பரத்தில வரி(டாக்ஸ்)உட்பட ன்னு தானே போட்டிருக்கு?

    ReplyDelete
    Replies
    1. அப்படியா, அச்சசோ திருத்தி விடுகிறேன்.. நாங்க கூடுதலா ஜூஸ் வாங்கியதால் கன்ப்யுஸ் ஆயிட்டேன்..

      Delete
    2. என்ன ஜூஸ்?நார்மல் தானே,டாஸ்........... இல்லியே?ஹ!ஹ!!ஹா!!!

      Delete
    3. ஹஹஹா.. அதெல்லாம் பதிவில் வராது பாஸ்.. பயப்படாதீங்க.. ஹஹஹஹா..

      Delete
  11. எதையுமே ஆரம்பிக்கும் முன் ஸ்வீட் சாப்பிடனும்ன்னு அம்மா சொல்லித் தரலியா ஆவி!? எடுத்ததும் டாப் கியர்ல சிக்கன், மட்டன்னு வெளுத்து வாங்குறே!!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா, பஞ்சாயத்து தலைவர் இருக்கும் இடத்தில் ப்யுனுக்கு என்ன வேலை அக்கா..?

      Delete
  12. இதோ வருகிறேன் கோவைக்கு...!

    ReplyDelete
  13. ஊஃப் ஒரு வேளை சாப்பாடுக்கு 350 ரூவாயா எனக்கு ஒரு வாரச்சோத்து செலவுக்கு ஆகுமே அவ்வ்!

    ReplyDelete
    Replies
    1. வவ்வால் சாப்பிட எதுக்கு முன்னூற்றி ஐம்பது? போற போக்குல இரையை விழுங்கிட்டா போச்சு.. ஹஹஹா..

      Delete
    2. என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க.. ஏதாவது ஒரு பிரியாணி, ஒரு கிரேவி, ஒரு சைட் டிஷ் சொன்னாலே நானூறு பக்கம் ஆயுடுதே.. இது 2014 பாஸ்.. வெளிய வாங்க..! ;-)

      Delete
  14. தலைப்பே அருமையாக இருக்கின்றாது ஆவி! வர்ணனை அபாரம்!

    //காந்திக்கு இது சுத்தமாக பிடிக்காது என்பதால் பர்ஸில் இருந்த காந்தியை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு "Goat" சே வை வரவேற்றோம். // மிகவும் ரசித்தோம்! இந்த வரியை!!!

    (ஹப்பா எத்தனை பதிவுகளை மிஸ் பண்ணிருக்கோம்னு இப்பதான் தெரியுது.......என்ன செய்ய....கணினி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு...அவ்வப்போது ஐசியு விற்கு சென்று வந்தது திடீரென்று ஒரு நாள் அப்படியே மயங்கிவிட்டது......எழுந்திருக்க முடிய்அல்ஜிமர் நோயில் இருக்குaவில்லை....(இத்தனைக்கும் மொஜில்லா பாதுகாப்புடந்தான் இருந்தது....அதன் வீரியம் குறைந்ததாலோ என்னவோ...ஸோ இப்ப அது ஹாஸ்பிட்டலில்.....தற்காலிகமாக இருக்கும் இதோ அடித்துக் கொண்டிருக்கும் ஒன்று வயதாகி...அல்ஜிமரில் இருப்பதால்....மெமரி பிரச்சினை.......ரொம்ப ரொம்ப ஸ்லோ!!!!! ..அதான்......)

    ரொம்ப அழகா கற்பனையோட எழுதறீங்க ஆவி!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சார். உங்க வார்த்தைகள் உற்சாகமூட்டுது..

      விண்டோஸ் டிபண்டர் போட்டுக்கோங்க.. எந்தப் பிரச்சனையும் இருக்காது..

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...