Tuesday, October 1, 2013

நியுஸ் ப்ரம் தி கலெக்டர்..20131001 (நஸ்ரியா ஸ்பெஷல்)

         
                              நியுஸ் ப்ரம் தி கலெக்டர் ன்னதும் கலெக்டர் சொன்ன செய்திகள்ன்னு தப்பா புரிஞ்சிக்கப் படாது. இது ஆவி அங்க இங்கேன்னு கலெக்ட் பண்ணின நியுஸ் ன்னு அர்த்தம். சரி இப்போ கலெக்ட் பண்ணின சிலத பார்ப்போமா??

                                ************************************************
                                பதினைந்து வருடங்களா ஆவியின் தீவிர வாசகனான ஆவி கார்டூனிஸ்ட் "மதன்" அவர்களை துரத்தி அடித்த நாளில் இருந்து அந்த இதழை பாய்காட் செய்ய முடிவு செய்து நெடுநாட்கள் வாங்காமலிருந்த போதும், இடையிடையே "தல" மற்றும் "நஸ்ரியா" அட்டைப்படத்தில் தோன்றும் போது மட்டும் வாங்கிக் கொண்டிருந்தார், ஓரிரு வாரங்களுக்கு முன்பு அதே போல் நஸ்ரியாவின் அட்டைப்படம் தோன்ற வாங்கிப் படித்தேன். அந்த இதழில் நஸ்ரியாவின் பேட்டி வெளியாகி இருந்தது. இன்று காலை யு-டியுபில் மேய்ந்து கொண்டிருந்த போது எதேச்சையாய் (நம்புங்கப்பா!!) கண்ணில் பட்டது இந்த வீடியோ.. நீங்களும் பார்த்து ரசியுங்கள். நஸ்ரியா பாடும் பாடலும் கேட்டு மகிழுங்கள்..                               *************************************************

                                நஸ்ரியா  நடித்த "ராஜா  ராணி" வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. அதில் நஸ்ரியாவின் துருதுரு நடிப்பை பாராட்டிய எத்தனை பேருக்கு அவர் ஒரு நல்ல பாடகர் என்பது தெரியும் (எனக்கே இன்னைக்கு காலையில பிலாசபி பிரபாகரனுடைய வலைதளத்தில் கீழே உள்ள வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியும்)                               ************************************************

                              ராஜா ராணியை தொடர்ந்து தற்போது நஸ்ரியா தனுஷுடன் நய்யாண்டி, ஜெய்யுடன் "திருமணம் எனும் நிக்காஹ்", நடிகர் மம்மூட்டியின் மகன் நடிகர் துல்கீர் சல்மானுடன் "சலாலா மொபைல்ஸ்" என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு முன் நடித்த படங்களை பற்றிய இவரது பேட்டி ஏசியாநெட் தொலைக்காட்சியில் வந்தது.. மலையாளத்தில் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. (பார்த்து முடிக்கும் போது எனக்கும் ஜலதோஷம் பிடிச்சுகிச்சுன்னா பாருங்க. ஹிஹிஹி )                                 ***********************************************

                             நய்யாண்டி படத்திலிருந்து ஒரு புதிய ஸ்டில்..
                                **********************************************

                           MAAD DAD படத்தில் வரும் (மானத்தே வெள்ளித்திங்கள்)  பாடல் உங்கள் பார்வைக்காக..                                ************************************************

                            நேரம் படத்தில் ஒரு பாடல்.. (நீங்க படத்துல பார்த்திருக்க வாய்ப்பில்லே.. படத்தின் நீளம் கருதி வேட்டிப்புட்டாங்க.)

                               *************************************************

                            இன்னைக்கு அவ்ளோதான்.. அடுத்து வேற சில நியுஸோட வர்றேன்...


12 comments:

 1. ஜலதோஷத்தோடு போச்சே... காய்ச்சல் வராதது சந்தோசம்... ஹிஹி...

  உங்களை கேட்காமல் எப்படி பாடலை வெட்டலாம்..?

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. அதானே. பாருங்க என்ன தைரியம்!! :-)

   Delete
 2. நியூஸ்னதும் நான் நாட்டு நடப்பை எதிர்பாத்து வந்தேன், இங்க நஸ்ரியா நடப்பா இருக்கே...

  ReplyDelete
  Replies
  1. மொதோ மொதோ ஒரு பகுதி தொடங்கும் போது மங்களகரமா துவங்க வேண்டாமா?

   Delete
 3. யோவ் உங்களையெல்லாம் போலீஸ்ல புடிச்சி கொடுக்கனும்யா ... எப்ப பார்த்தாலும் நஸ்ரியா நஸ்ரியான்னு ...

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. பொறாமை.. பொறாமை..

   Delete
 4. நஸ்ரியா தகவல்களா தேடிப்பிடிச்சி போட்டு அசத்தறீங்க! செய்யுங்க பாஸ்! நல்லாருங்க!

  ReplyDelete
 5. //வேட்டிப்புட்டாங்க./

  :-)

  ReplyDelete
  Replies
  1. லென்ஸ் வச்சு தேடுவீங்களோ ??

   Delete
 6. //கலெக்டர் ஆவி // கலக்குங்க :)

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...