Tuesday, October 1, 2013

'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..!

                               நேற்று ஒரு நண்பருடன் அளவளாவிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார் "'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடுறது கஷ்டம். " "ஏன் பாஸ்" " அது பாலகுமாரனோட ஒரு நாவல் பேரு. நாவலில் இருந்து எடுத்த பெயரை படத்துக்கு வச்சா எப்படி ஓடும்". "பாஸ்.. இந்த லாஜிக் சரின்னா சூது கவ்வும் கூட மஹாபாரதத்தில் இருந்து தானே எடுக்கப் பட்டது. சரியா ஓடலியா?" -இது நான்.

                               

                                 படம் ஓடுவதற்கும் ஓடாததற்கும் படத்தின் பெயர் நிச்சயம் காரணமாக இருக்க முடியாது என்று நம்புபவன் நான். படத்தின் கதை, திரைக்கதை சொன்ன விதம், நல்ல பாடல்கள் இருந்த போதும் அது படத்திற்கு தேவையான இடத்தில் வந்தால் மட்டுமே படத்தின் வெற்றிக்கு அது உதவும். (உதாரணம்: ரிதம்) நல்ல இசை. நடிகர்களின் சிறப்பான நடிப்பு, இவை எல்லாவற்றையும் விட இயக்குனரின் ஆளுமைத் திறன்.வயதிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று நிரூபித்த ராஜா ராணி படத்தின்  இயக்குனர் அட்லீ. (இட்லி சைஸ் இருந்துகிட்டு இந்தப் பையன் பின்னி எடுத்திருக்காப்புல.)



                                 நம்ம ஊர் பாட்டி கதைகளை வச்சே பெரும்பாலான ஹாலிவுட் படங்களை எடுத்த நம்ம மனோஜ் நைட் ஷ்யாமளன் கூட அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் தான். நாளை வெளியாகவிருக்கும்  'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் முக்கிய ஹைலைட் கொஞ்ச நாள் முன்னால வெளிவந்த "Prayer Song" தாங்க.. தன்னை விட்டுச் சென்ற காதலிக்காய் எழுதப்பட்ட அந்த பாட்டு எல்லோருடைய மனதையும் கொள்ளையடித்தது. (குறிப்பாக இளைஞர்களை)  தவிர வளர்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம். படம் எப்படி இருக்குன்னு நாளைக்கு தெரிஞ்சிடும். இப்போ அந்த  ப்ரேயர் சாங் பார்ப்போமா??


                         ******************************************************



          

28 comments:

 1. நல்லா கீதுபா சாங்க்..ஹிட் ஆகும்னு நெனைக்கிறேன்பா...

  ReplyDelete
  Replies
  1. அல்ரெடி ஹிட்டு அண்ணே!!

   Delete
 2. பாட்டு நல்லா இருக்கு.படம்!? எப்படி இருந்தா என்ன?! நீங்க பார்க்க போறதில்லையேக்கான்னு முணுமுணுக்குறது இங்க வரை கேக்குதப்பு!

  ReplyDelete
  Replies
  1. நாங்க சொல்றதுக்கு முன்னாடியே முந்திகிட்டீங்க..

   Delete
 3. Replies
  1. ஹஹஹா.. உண்மைதான்.. ஜாலியா ஒரு சாங்..

   Delete
 4. Replies
  1. நன்றி வருகைக்கும்.. கருத்திட்டமைக்கும்..

   Delete
 5. படம் நல்லா ஓடும்னு என் நம்பிக்கை...

  ReplyDelete
  Replies
  1. நான் நாளைக்கு சொல்லிடறேன்.

   Delete
 6. சீக்கிரம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க பாஸ்..... நிச்சயம் நல்லா ஓடும் பாஸ் !

  ReplyDelete
  Replies
  1. நாளைக்கு புக் பண்ணியாச்சி.. உடனே விமர்சனம் போட்டுடறேன்.

   Delete
 7. பாலகுமாரன் இந்தப் பெயரில் நாவல் எழுதிய நினைவு இல்லையே...!

  ReplyDelete
  Replies
  1. நாவல் எழுதவில்லை ,தன் சினிமா உலக அனுபவங்களை எழுதினார்ன்னு நினைக்கிறேன் !

   Delete
  2. அப்படியா.. அதுவும் அந்த நண்பர் சொன்னது..

   Delete
  3. பராசக்தி போல இது ஒரு பழைய பட வசனம் என்று நினைவு. :))

   Delete
 8. எதிர்பார்ப்பு நிறைய இருக்கு பார்க்கலாம் .

  ReplyDelete
 9. படம் வெளிவந்து பார்த்த பிறகு விமர்சனம் எழுதுவாங்க! படம் வருமுன்பேவா? பதிவெழுத இப்படியெல்லாம் வாய்ப்பு இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. அந்த நண்பர் கூறியதை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.. அதான்...

   Delete
 10. விஜய் சேதுபதியின் ரசிகர்கள் படத்தை ஓட வைத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்! :)

  ReplyDelete
  Replies
  1. நாளைக்கு சொல்லிடறேன் அம்மா..! :)

   Delete
 11. ஒற்றை சொல்லை வைத்து ஒரு பதிவு எழுத உங்களிடம் அசாத்திய திறமை உள்ளது. ஆவி பாஸ் ஸ் கிரேட்

  ReplyDelete
  Replies
  1. தூக்கறீங்களா, இறக்கரீங்களான்னே தெரியலையே.. :)

   Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...