பெயர் சர்ச்சைக்கு பின் "நவீனத்தின்" துணை கொண்டு களமிறங்கியிருக்கும் காமெடி என்டர்டெயினர் இந்த சரஸ்வதி சபதம். ஜெய், VTV கணேஷ், நிவேதா தாமஸ் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை ப்ரேம் குமார்.
1. "காத்திருந்தாய் அன்பே" பாடல் முன்பே வெளிவந்து மக்களின் பேராதரவைப் பெற்றது. "சின்மயி" யின் சொக்க வைக்கும் குரலில் மெல்லிய டூயட். இடையில் நிவாஸ் மற்றும் அபயின் குரல்கள் பாடலுக்கு மெருகேற்றுகிறது. "பூக்களை திறக்குது காற்று, புலன்களை திறக்குது காதல்" போன்ற வைரமுத்துவின் எழுத்துகள் ஆங்காங்கே மின்னுவது தெரிகிறது.
2. "சாட்டர்டே பீவர்" பாடல் விஜய் பிரகாஷ், சயனோர பிலிப்பின் குரலில் டிஸ்கோ பாடலாய் வலம் வருகிறது. "மதன் கார்க்கியின் ட்ரெண்டியான வார்த்தைகள் தற்போதைய இளைஞர்களின் அளவுக்கதிகமான "பார்ட்டி" கலாச்சாரத்தை பட்டியலிடுகிறது.
3. 'கானா' பாலா எழுதி, பாடியிருக்கும் "வாழ்க்கை ஒரு கோட்டை" என்ற தத்துவப் பாடல் வாழ்க்கை எந்த சூழலிலும் வாழலாம், வாழ்வதற்கு முயற்சி மட்டும் தான் தேவை என்று அறிவுரைக்கும் பாடல். " உழைச்சா தாண்டா நீ அம்பானி. இல்லேனா அம்போ நீ" போன்ற வரிகள் ரசிக்கும்படி உள்ளது.
4. வைரமுத்து எழுதிய "நெஞ்சாங்குழி ஏங்குதடி" பாடல் கார்த்திக்கின் கவர்ந்திழுக்கும் குரலிலும், மெல்லிய பின்னணி இசையிலும் மென் சோகத்துடன் நம்மை தாலாட்டி உறங்க வைக்கும். பூஜாவின் கணீர் குரல் பாடலுக்கு மெருகை கூட்டுகிறது.
5. "நெஞ்சாங்குழி ஏங்குதடி" பாடல் இரண்டாம் முறையாய் ஒலிக்கும் போது கார்த்திக்கின் குரலில் மட்டும் ஒலிக்கிறது. இரண்டில் எது படத்தில் இடம்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சரஸ்வதி சபதம் என்றதும் நம் கண் முன் தோன்றும் "கல்வியா, செல்வமா, வீரமா" பாடலை மறந்துவிட்டு இந்த டிஜிட்டல் சபதத்தை கேட்டால் நமக்கு நிச்சயம் பிடிக்கும்.
இனிமேல் தான் கேட்டு, மனதை கவர்கிறதா என்று பார்க்க (கேட்க) வேண்டும்...
ReplyDelete3வது பாடல் ஹிட் ஆகுமோ...? வரிகள் அருமை...
எல்லா பாடலுமே எனக்கு பிடிச்சது தனபாலன்.. அதுவும் கானா பாலாவின் குரலில் அந்தப் பாடல் சூப்பர்..
Deleteவணக்கம்
ReplyDeleteஆனந்(அண்ணா)
புதிய தகவல் பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
நம்ம பக்கம் புதிய பதிவு இதோ.....அன்புடன் வருக..
http://2008rupan.wordpress.com/2013/10/18/%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81/
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காலையிலேயே பார்த்துட்டேன்.. அந்த போட்டிக்குதான் ஏதாவது கவிதை தோணுதான்னு யோசிச்சிட்டு இருந்தேன்..
Deletemmm. Music Review blog il athigam yaarum seiyavillai. Nalla Eluthi irukeenga AAvi...! Continue this...!
ReplyDeleteநன்றி தலைவரே!! உங்க வாழ்த்துகளுடன் தொடர்கிறேன்..
Deleteஇனிதான் கேட்கனும்... மியூசிக் ரிவியூ ஆ...
ReplyDeleteகலக்குங்க...
கேட்டுப் பாருங்க.. நல்லா இருக்கு..!
Deleteடிஜிட்டல் சபதத்தை....சப்தத்தில் கேட்டுப் பார்கிறேன்.
ReplyDeleteபேஷா இருக்கும் கேட்டுப் பாருங்க!!
Deleteசினிமாதான் பார்க்க பிடிக்காதே தவிர, பாடல் கேக்க பிடிக்கும். கண்டிப்பா கேக்குறேன்.
ReplyDeleteசினிமாவும் நல்ல சினிமா உங்களுக்கு நான் ரெக்கமன்ட் பண்றேன்.. அத பாருங்க.. பிடிக்கும்.. இப்போ சமீபத்துல நார்த் 24 காதம் (மலையாளம்) என்ற படம் நல்லா இருந்தது..
Deleteஇன்னும் பாட்டுக்களை கேட்கவில்லை, நெஞ்ஜான்குழி பாட்டிற்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதுபோல் தெரிகிறது.
ReplyDeleteஅந்தப் பாட்டை கார்த்திக் அருமையாக பாடியிருக்கிறார்..
Deleteகேட்டு பாத்ருவோமே
ReplyDeleteஇன்னும் வீடியோ ரிலீஸ் ஆகலைங்க காயத்ரி.. இப்போதைக்கு கேட்க மட்டும் தான் முடியும்.. பார்க்க முடியாது.. ;-)
Deleteபுதிய இசை அமைப்பாளரை ஊக்குவிக்கும் உங்கள் பதிவு .அவரின் இசை நம்மை ரசிக்க வைக்கும் என நினைக்கிறேன் !
ReplyDeleteத.ம 5
வருகைக்கு நன்றி பகவான்ஜி!!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅட இப்டி ஒரு படமா ....! உண்மையிலே டிஜிட்டல் சபதமா இல்ல டிஜிட்டல் சப்தமான்னு கேட்டுப்பார்த்துடலாம் ....!
ReplyDelete