நினைத்தாலே இனிக்கும் ன்னதும் பட விமர்சனம் ன்னோ, இல்ல வாத்தியார் ஸ்பெஷல் ன்னதும் MGR பற்றிய ந்யூஸ் ன்னோ நீங்க நினைச்சீங்கன்னா நீங்க ஆவியாலஜில ரொம்ப வீக்குன்னு அர்த்தம். இது என்னோட(எங்க) வாத்தியார் பாலகணேஷ் பற்றிய நியுஸ். கோவை வந்த போது கேஜி தியேட்டர் வாசலில் ஒட்டியிருந்த "நினைத்தாலே இனிக்கும்" போஸ்டரைப் பார்த்து "ரொம்ப நல்ல படம், திரைக்கு வந்தா பார்க்கணும்" என்றார்.. அவர் சொல்லும் போது நான் இடப்பக்கம் பிஷப் அப்பாசாமியின் அழகுகளை ரசித்துக் கொண்டிருந்தது தெரியாமலிருக்க, "ஷ்யூர் சார், இப்போவே போலாமா" என்றேன். "என்ன, நினைத்தாலே இனிக்கும் ரிலீஸ் ஆயிடுச்சா" என்று அதிர்ந்தவரை "ரிலீஸ் ஆனதும் போலாம்னு சொன்னேன் சார்" என்றேன். சென்னை செல்லும் போது என் பிரியமான ராஜாராணியையும், "நினைத்தாலே இனிக்கும்" படத்தையும் அவருடன் பார்த்து விடுவது என முடிவு செய்தேன்.
சென்னை சென்ற ஆவி, முதல் நாளிலிருந்தே வாத்தியாரின் தோள்களில் தொற்றிக் கொண்டது. "ஆவி பாவியெல்லாம் வந்தப்புறம் என்னை மறந்துட்டீங்களே" என சுற்றமும் நட்பும் புலம்பும் அளவிற்கு இறுகப் பற்றிக் கொண்டது. ( டேய், நீ என்ன ஐஸ் வச்சாலும் சகோதர பாசத்துக்கு அப்புறம் தான் இந்த குரு-சிஷ்யா ரிலேஷன்ஷிப்பெல்லாம் ன்னு வாத்தியார் சொல்றது மைல்டா கேட்டுது). காலையிலேயே கிளம்பி ஒரு வேலையாக குருவுடன் "காபி டே" சென்றேன். அவர்கள் எழுதியிருந்த தொனி (தோணி இல்ல!!) தென் தமிழ்நாட்டில் "வாடே, போடே " என்பது போல் "காபி டே" என்று படிக்கத் தோன்றியது. "இரயிலில் வந்த மயிலை" பற்றி கூறிக் கொண்டே உள்நுழைந்த போது அங்கே ஒரு IT குயில் அமர்ந்திருந்தது. காதில் ஹெட்போனும், கழுத்தில் ஐடி கார்டும் அணிந்தவாறே அந்த ஸ்லீவ்லெஸ் சிட்டு தன் ஐ-போனை நோண்டிக் கொண்டிருந்தது.
சபை நாகரீகம் கருதி எங்கள் சுருதியை குறைத்துக் கொண்டோம். எனக்கு ஒரு 'கேப்பச்சினோவும்', தலைவருக்கு ஒரு 'காபி லாட்டே' வும் ஆர்டர் செய்துவிட்டு எங்கள் பேச்சில் மும்மரமானோம். சற்று நேரத்தில் ஒரு ஆள் பல்சரில் வந்ததையோ, அந்தக் குயிலின் முன் அமர்ந்ததையோ, அவனுடைய கோடுபோட்ட மஞ்சள் ஷர்ட்டின் மீது ஒரு ஈ உட்கார்ந்திருந்ததையோ சத்தியமாய் நாங்கள் கவனிக்கவே இல்லை. அது அவளுடைய டீமில் கீழ் பணிபுரிபவன் போல் இருந்தது. அதுவரை குத்து விளக்காய் அமர்ந்திருந்தவள் சட்டென்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு எடிசனின் மொழியில் உரையாட ஆரம்பித்தாள். அவள் செய்கைகள் பலதும் "சற்று முன் சைலண்டாக இருந்த சுனாமி இவள்தானா?" என நினைக்க வைத்தது. எதிரில் அமர்ந்திருந்தவன் "சோனியாவைக் கண்ட மம்மு" போல் கப்சிப் என்றிருந்தான். இவ்வளவு நேரம் நடந்த களேபாரம் எதையும் கண்டுகொள்ளாமல் தன் லாட்டேவை சுவைத்த தலைவரைப் பார்த்த போது திருவள்ளுவரின் எதோ ஒரு குறள் தான் நினைவுக்கு வந்தது..
சுமார் ஒரு மணி நேரம் கதைத்து விட்டு நாங்கள் வெளியேறிய போது கொஞ்சமாய் பசித்தது. அருகிலிருந்த ஒரு பெரியவரிடம் "இங்க நல்ல ஹோட்டல் எங்கிருக்கு" என்றதற்கு அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு பின் பேசாமல் நடக்க ஆரம்பித்தார். ஆவிக்கு நேர்ந்த அசிங்கத்தை அசட்டை செய்துவிட்டு அருகிலிருந்த ஒரு டீக்கடையில் கேட்டு "ஹோட்டல் அஞ்சுகம் " சென்றோம். முட்டையுடன் பிரியாணி அந்த ரேட்டுக்கு நல்ல டெஸ்டுடன் இருந்தது. இடையிடையே அது ஒருவேளை காக்கா பிரியாணியாயிருக்குமோ என்ற சந்தேகம் உள்ளே தோன்றினாலும் காக்காவும் நான்-வெஜ் தானே என்று சமாதானப் படுத்திக் கொண்டு சாப்பிட்டு முடித்தோம். மதியம் ரங்கநாதன் தெருவில் கொஞ்சம் சுற்றிவிட்டு, ஸ்கூல் பையன் உட்லண்ட்ஸ் தியேட்டரில் "நினைத்தாலே இனிக்கும்" படத்திற்கு டிக்கட் எடுத்து வைக்க சரியான நேரத்துக்கு இருவரும் ஆஜரானோம்.. தன் கல்லூரிக்கால நினைவுகளை ஒவ்வொன்றாக கூர்ந்தார் தலைவர்.
"நினைத்தாலே இனிக்கும்" கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என அலை திரண்டு இரண்டு மூன்று வரிசைகள் மட்டும் நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்ததும் என் போன்ற "கமல் பக்தர்கள்" உற்சாகக் குரலெடுத்து கூவுவதும் பாடலுக்கு எழுந்து ஆடுவதுமாய் அமர்க்களப்பட்டது.. இடையிடையே டிஜிட்டல் என்ற பெயரில் பல நல்ல காட்சிகளை கபளீகரம் செய்தும், மெல்லிசையை மெர்சலாக்கியும் மொத்தப் படத்தையும் "நினைத்தாலே வெறுக்கும்"படி செய்திருந்தார்கள். படம் முடிந்ததும் மின்னல் பள்ளிச் சிறுவன் போல் கதை பேசிக் கொண்டே மெதுவாய் நடக்க, ஸ்கூல் பையனோ மின்னல் வேகத்தில் பறந்துபோனார். அதற்கான காரணம் அப்போது விளங்கவில்லை. ஆனால் ஓரிரு நாட்களில் விளங்கியது. மறுநாள் சில பிரபலங்களை சந்திக்க வேண்டியிருந்ததால் அன்று பாலகணேஷ் சார் வீட்டிலேயே தங்கிவிட்டேன்.
-தொடரும்..
நி.இ பற்றி அவர் பதிவிலேயே படித்து விட்டேன்.
ReplyDeleteஎனவே நீங்கள் அஞ்சுகம் ஹோட்டலில் காக்கா பிரியாணிதான் போடுகிறார்கள் என்று சொல்ல வருகிறீர்கள் இல்லையா?
இல்ல ஸ்ரீராம் சார்... நல்லா தான் இருந்தது.. எனக்கு மைல்டா ஒரு டவுட்டு.. அம்புட்டுதேன்!!
Deleteபடிக்க படிக்க இனிக்கிறது
ReplyDeleteசொல்லிப்போகும் விதம்
நிகழ்வுக்கு கூடுதல் சுவாரஸ்யம்
ஏற்படுத்திப்போகிறது
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
வாங்க ரமணி ஐயா வருகைக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றி..
Deletetha.ma 3
ReplyDeleteநன்றி ஐயா..
Deleteஉங்கள் ஊர் எழில் உங்கள்
ReplyDeleteவலையினை அற்புதமாக
அறிமுகப் படுத்தியுள்ளார்
வாழ்த்துக்கள்
அதைத்தான் இப்போது வாசித்துக் கொண்டிருந்தேன் ஐயா..நன்றி..
Deleteஇடையிடையே கபளீகரம் செய்து விட்டீர்களா...? ஒரிஜினல் படத்தையே பார்க்க வேண்டியது தான்... எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்... பாடல் சொல்லவா வேண்டும்...?
ReplyDeleteஅருமையான பாடல்கள் இரண்டையும் வெட்டி விட்டார்கள்..
Deleteஅந்த குறள் என்ன மச்சி?
ReplyDeleteஅது ஞாபகம் இருந்தா பதிவிலேயே போட்டிருக்க மாட்டேனா?
Deleteஎன்னாது தோள்ல தொத்திட்டியா...பாவம் வாத்தி.....விக்கிரமாதித்தன் நிலைமைக்கு ஆளாக்கிட்டியே...பா (ஆ)வி....
ReplyDeleteஹஹ்ஹா.. கிட்டத்தட்ட அப்படித்தான்!!
Deleteஓஹோ..அதான் உன்னி கிருஷ்னன் குரல் வருதா உனக்கு...
ReplyDeleteஇல்ல மாப்ளே இப்போ அது "கானா" பாலா குரல் மாதிரி ஆயிடிச்சி!!
Delete"சற்று முன் சைலண்டாக இருந்த சுனாமி இவள்தானா?" //
ReplyDeleteசைலண்டா இருந்தா எப்படி சுனாமி ஆகும்...வயலண்டா இருந்தா தானே சுனாமி....
சுனாமி பொங்கறதுக்கு முன்னாடி சைலண்டா தான் இருக்கும்.
Delete//எனக்கு ஒரு 'கேப்பச்சினோவும்', தலைவருக்கு ஒரு 'காபி லாட்டே' வும் ஆர்டர் செய்துவிட்டு//
ReplyDeleteஎன்னது கேப்புல சீனாவா? நமக்கு 'கிளின்டன்னா கிளி சோசியம் பாக்குறவரா' லெவல்தான் சாமி.
சீனா சண்டைக்கு வந்திடப் போறாங்க..
Deleteஆவிச் சகோதரா நட்பின் மகிழ்வில் எந்நாளும் குளிர் காய்கிறீர்கள்
ReplyDeleteபோலும் ? :))) (பால கணேஷ் ஐயா ஆவியை எப்படிச் சமாளிப்பார் !!)
துரு துரு என்று இருக்கும் தங்களின் செயல்ப்பாடு பதிவில் விளங்குகிறது .
வாழ்த்துக்கள் சகோ மகிழ்வான இத் தருணம் என்றும் தொடர வேண்டும் .
சபை நாகரீகம் கருதி எங்கள் சுருதியை குறைத்துக் கொண்டோம். எனக்கு ஒரு 'கேப்பச்சினோவும்', தலைவருக்கு ஒரு 'காபி லாட்டே' வும் ஆர்டர் செய்துவிட்டு எங்கள் பேச்சில் மும்மரமானோம். சற்று நேரத்தில் ஒரு ஆள் பல்சரில் வந்ததையோ, அந்தக் குயிலின் முன் அமர்ந்ததையோ, அவனுடைய கோடுபோட்ட மஞ்சள் ஷர்ட்டின் மீது ஒரு ஈ உட்கார்ந்திருந்ததையோ சத்தியமாய் நாங்கள் கவனிக்கவே இல்லை.// :)))))))))) ஆவி
நல்லாத் தான் றீல் விடுத்தது :)))))
நன்றி சகோதரி,
Deleteகாபி டே போறதுக்கு பால கணேஷ் சார் உங்களுக்கு கிடைத்தாரா ?அவ்வ்வ்வ் !
ReplyDeleteத.ம.7
சிஷ்யர்கள் யார் அழைத்தாலும் குரு வருவார், பகவான்ஜி!!
Delete// "நினைத்தாலே இனிக்கும்" கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என அலை திரண்டு இரண்டு மூன்று வரிசைகள் மட்டும் நிரம்பி வழிந்தது//
ReplyDeleteSuper.
பாஸ் எது சூப்பர்.. ரெண்டு வரிசை மட்டும் நிறைஞ்சதா?? :)
Deleteஎன் கல்லூரிக்கால நினைவுகளை இங்க நீ எடுத்து விடாத வரைக்கும் நலம். (தப்பிச்சேன்டா சாமீ...!) நான் ‘சைட்’டறது குத்துவிளக்கு டைப்புகளைத்தான்ங்கறது தெரிஞ்சும்.... ஆவிக்கு ரொம்பத்தான் குசும்புடோ! சென்னைப் பயண அனுபவம் முழுசையும் இதே மாதிரி சுவாரஸ்யத்தோட கொண்டு போக வாழ்த்துக்கள் ஆனந்து!
ReplyDeleteநன்றி சார்.. "குத்துவிளக்கு டைப்புகள்" இப்போல்லாம் குத்த ஆரம்பிச்சிடுச்சு சார். :)
Deleteஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் அறிமுகமும் சகோ!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நினைத்தாலே இனிக்கும் அல்வா...:)
இனிக்கின்றது உங்கள் பதிவும்!
அசத்துகிறீர்கள்! நல் வாழ்த்துக்கள்!
// நினைத்தாலே இனிக்கும் அல்வா...:)//
Deleteஹையோ.. உண்மையாக நான் ரைப்பண்ணியது
அல்லவா என்று... அதுவே ”அல்வா” வாக மாறிவிட்டது...:))
த ம.7
அல்வாவும் இனிப்புதானே.. விடுங்க இருந்துட்டு போகட்டும்.. ;)
Deleteஆவியாலஜில ரொம்ப வீக்குன்னு அர்த்தம். இது என்னோட(எங்க) வாத்தியார் பாலகணேஷ் பற்றிய நியுS
ReplyDelete>>
அப்பாடா! நான் பாஸ். எனக்கு உன் வாத்தியார் கணேஷ் அண்ணான்னு நல்லாத்தெரிஞ்சதால நான் தப்பிச்சேன். அதுமில்லாம, நீ அண்ணாவோடு இந்த படம் பார்த்ததால இதுக்கு இந்த தலைப்புன்னு யூகிச்சேன்.
அக்காவா கொக்கா? கிரிமினல் மூளையாச்சே உங்களுக்கு!
Delete//ஸ்கூல் பையனோ மின்னல் வேகத்தில் பறந்துபோனார். அதற்கான காரணம் அப்போது விளங்கவில்லை. //
ReplyDeleteம், இது வேறயா... படிக்கிறவங்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் வைக்கணும்னு என்னையா இழுக்கிறது? அடுத்த பதிவில் சொல்லவும்...
//காலையிலேயே கிளம்பி ஒரு வேலையாக குருவுடன் "காபி டே" சென்றேன்//
அன்று எனக்கு ஆபிஸ் இருந்ததால் வாத்தியாருடனும் ஆவியுடனும் கேப்பசினோவை சுவைக்கும் பாக்கியத்தை இழந்தேன்...
கேப்பசீனோ தானே ஸ்.பை அடுத்த முறை ஜமாய்ச்சிடலாம்..
Delete//நினைத்தாலே இனிக்கும் ன்னதும் பட விமர்சனம் ன்னோ, இல்ல வாத்தியார் ஸ்பெஷல் ன்னதும் MGR பற்றிய ந்யூஸ் ன்னோ நீங்க நினைச்சீங்கன்னா நீங்க ஆவியாலஜில ரொம்ப வீக்குன்னு அர்த்தம். இது என்னோட(எங்க) வாத்தியார் பாலகணேஷ் பற்றிய நியுஸ்.//
ReplyDeleteஅப்படின்னா நானெல்லாம் ஆவியோட மனசில இல்லையா?
என்ன இப்படி சொல்லீட்டீங்க. அடுத்த எபிசோடுக்கு நீங்க தான் ஹீரோ..
Deleteவணக்கம் நண்பரே
ReplyDeleteதங்களது தளத்திற்கு வலைச்சரம் அறிமுகம் கண்டு முதல் வருகை. பதிவில் தங்களது துடுக்குத் தனம் பளிச்சிடுகிறது. பகிர்வுக்கு நன்றி. தங்களது தளத்திலும் இணைந்து விட்டேன். வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே..
வாங்க பாண்டியன்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Deleteஅடிக்கடி ஆவி சென்னைக்கு வர்றீங்க போல! சுவையான எழுத்து நடை ! தொடருங்கள்!
ReplyDeleteபாஸ், நீங்களும் சென்னை தானா?
Delete